மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15
பிரீமியம் ஸ்டோரி
News
உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

ன்றைக்குப் பெரும் பாலான அம்மாக்களின் கவலை தங்கள் குழந்தை உயரமாக இல்லையே என்பதுதான். அம்மாக்களின் கவலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்கள், தங்களது ஹெல்த் டிரிங்க்ஸ் குடித்தால், நல்ல உயரமாக வளர்வார்கள் என்று விளம்பரம் செய்கிறார்கள். சரி மூளையைப் பற்றி எழுதும்போது உயரத்தைப் பற்றி சொல்வது ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். உடலின் ஒவ்வொரு செயலையும் நிர்ணயிப்பது மூளைதான் என்பதை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். சில இதழ்களுக்கு முன்பு, மூளையின் லிம்பிக் சிஸ்டம் பற்றி சொன்னேன். அதில், ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பிகள் பற்றி சிறிது சொல்லியிருந்தேன். அந்த பிட்யூட்டரி சுரப்பிதான் உயரம், இனப்பெருக்க மண்டல வளர்ச்சி என அனைத்துச் செயல்பாட்டுகளுக்கும் காரணம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

பிட்யூட்டரி சுரப்பியை ‘மாஸ்டர் சுரப்பி’ என்று சொல்வோம். மூளையில், ஹைபோதாலமஸ் சுரப்பிக்குக் கீழே, சிறிய பட்டாணி சைஸில் இந்த சுரப்பி இருக்கிறது. நாளமில்லா சுரப்பிகளில் மிக முக்கியமானது இது. ஆன்டீரியர் (Anterior lobe), இன்டர்மீடியட் (Intermediate lobe) மற்றும் போஸ்டீரியர் லோப் (Posterior lobe) என்று இந்த சிறிய பட்டாணி சைஸ் சுரப்பியை மூன்றாகப் பிரிக்கலாம். இங்கிருந்து சுரக்கும் ஹார்மோன்கள்தான் உடலில் உள்ள மற்ற நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி, உடலின் செயல்பாட்டை நிர்ணயிக்கின்றன. பிட்யூட்டரி சுரப்பியின், ஆன்டீரியர் லோபில் இருந்துதான், உடலின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதில் உயரத்தை நிர்ணயிக்கும் குரோத் ஹார்மோன், ஃபாலிக்கிள் ஸ்டுமுலேட்டிங் ஹார்மோன் போன்றவை முக்கியமானவை. ஆண் மற்றும் பெண்ணின் இனப்பெருக்க உறுப்புக்களான விதைப்பை மற்றும் சினைப்பை, கருப்பை போன்றவறின் வளர்ச்சிக்கு ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் மிகவும் முக்கியம். அதேபோல, தைராய்டு சுரப்பைத் தூண்டும் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன், அட்ரினலைத் தூண்டும் ஹார்மோன்கள் இங்கேதான் சுரக்கின்றன. குழந்தைப்பேறுக்குப் பிறகு தாய்ப்பால் சுரப்பைத் தூண்டும் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனும் இங்கேதான் சுரக்கிறது.

உயரம் போலவே பலருக்கும் இருக்கும் மற்றொரு கவலை நிறம். நம் நிறம் சிவப்பாக இருக்க பல கிரீம்கள் பூசுகிறோம். ஆனால், என்ன பயன்படுத்தினாலும் நிறம் மாறுவது இல்லை. இதற்கு நம் சருமத்தில் மெலனினை சுரக்கும் மெலனோசைடிஸ் (Melanocytes) சுரப்பி. இந்த சுரப்பியைத் தூண்டுவது, கட்டுப்படுத்துவது எது என்று பார்த்தால் பிட்யூட்டரி சுரப்பிதான்.

அதற்கு அடுத்தபடியாக இருப்பது போஸ்டீரியர் லோப். இங்குதான் நம் உடலில் உள்ள நீரின் அளவைக் கண்காணித்து, அதிகப்படியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்களைத் தூண்டவும், உடலின் நீர்ச்சத்து முழுமையாக வெளியேறிவிடாமல் தடுக்கவும் காரணமான ஆன்டிடையூரிடிக் (Antidiuretic) ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல, பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஆக்சிடோஸின் என்ற ஹார்மோன் இங்குதான் சுரக்கிறது. பெண்களுக்குப் பிரசவத்தின்போது, குழந்தை வெளிவரும் பாதையை விரிவாக்கம் செய்துதரவும், பிரசவத்தைத் தூண்டவும், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கி, ரத்தப்போக்கைத் தடுக்கவும், பால் சுரப்பைத் தூண்டவும், தாய்க்கும் சேய்க்குமான பிணைப்பை அதிகரிக்கவும் உதவும் முக்கிய ஹார்மோன் இது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15

மூளைக்கட்டி, பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி, விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்படலாம். மூளையில் ஏற்படும் கட்டி, பிட்யூட்டரி சுரப்பியை அழுத்துவதால், அதன் செயல்பாடு முற்றிலும் மாறிவிடும். இதனால், பிட்யூட்டரி சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு, ஹார்மோன் சுரப்புக் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். இதில் எது நடந்தாலுமே உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதை, எளிய ரத்தப் பரிசோதனை மூலம், ரத்தத்தில் எந்த அளவுக்கு ஹார்மோன் அளவு உள்ளது என்பதை அளவிட்டு பாதிப்பைக் கண்டறியலாம்.

நோயாளிக்கு எந்தமாதிரியான பாதிப்பு உள்ளது என்பதைப் பொருந்து, எந்த ஹார்மோனை அளவிடுவது என்று மருத்துவர் முடிவு செய்வார். அதன் பிறகு, சி.டி அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பிட்யூட்டரி சுரப்பி சுருங்கியுள்ளதா அல்லது விரிவடைந்து உள்ளதா என்பதை டாக்டர்கள் கண்டறிந்து என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்வர்.

- அலசுவோம்!

பிட்யூட்டரியை மாஸ்டர் சுரப்பி என்று சொல்லியிருந்தேன். அதற்கும் அப்பன் ஒன்று இருக்கிறது. அதுதான் ஹைபோதாலமஸ். இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலம் என இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. இது பிட்யூட்டரியுடன் தொடர்பில் உள்ள சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் எட்டு பிரதான ஹார்மோன்கள் சுரப்பைக் கட்டுப்படுத்துவதே இந்த ஹைபோதாலமஸ். உடலின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க, உடலுக்குத் தேவையான அளவு நீர், உணவு எடுக்க இந்த சுரப்பிதான் காரணம். பசி, தாகம் என்ற உணர்வுகள் தோன்ற, நம் பாலியல் செயல்பாடுகள், உறுப்புக்களின் வளர்ச்சி எனப் பலவற்றுக்கும் காரணமாக இருக்கிறது இந்த சுரப்பி.