Published:Updated:

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia
News
ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

Published:Updated:

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia
News
ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்! #Anemia

`இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்களில் 34.6 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை இருக்கிறது; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவிகிதம் குழந்தைகளுக்கு ரத்தச்சோகை; பொதுவாகவே 32.7 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்கிறது டி.எல்.ஹெச்.எஸ்-4 ஆய்வு (DLHS-4 SURVEY). ஆனாலும் இது குறித்த விழிப்பு உணர்வு பரவலாக இல்லை. குழந்தை பிறக்கும்போது, இதன் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். ரத்தச்சோகை, அதை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் புவனேஸ்வரி.

ஹீமோகுளோபின் (Hemoglobin)

ரத்தச் சிவப்பணுக்களிலிருக்கும் ரத்தம் சிவப்பாக இருக்கக் காரணமான நிறமிதான் ஹீமோகுளோபின். இது, இரும்பு மற்றும் குலோபுளின் எனும் புரதம் ஆகியவை இணைந்து உருவாக்கப்படுவது. ஹீமோகுளோபின் நுரையீரலிலிருந்து உடலின் திசுக்களுக்கு ஆக்சிஜனையும், உடலின் திசுக்களிலிருந்து நுரையீரலுக்குக் கரியமில வாயுவையும் கடத்திக்கொண்டு போகும் ஊர்தி. 

ரத்தச்சோகை 

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம். ரத்தச்சோகை உடலிலிருக்கும் ஹீமோகுளோபின் அளவைக்கொண்டுதான் கண்டறியப்படுகிறது. 

சராசரி அளவுகள்... 

  •  ஆண்களில் 13.5 to 17.5 கி/டெ.லி (g/dl)
  •  பெண்களில் 12 to 16 கி/டெ.லி (g/dl)

ஆண்களுக்கு 13.5 கி/டெ.லி-க்குக் கீழேயும், பெண்களுக்கு 12 கி/டெ.லி-க்குக் கீழேயும் இருந்தால் அதை ரத்தச்சோகை என்று சொல்லலாம். 
ஹீமோகுளோபின் அளவுகளைக் கொண்டு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ரத்தச்சோகையைக் கீழேயுள்ளபடி பிரித்து வைத்திருக்கிறது. 

         லகுவானது             10 to 11 கி/டெ.லி   
        மிதமானது            7 to 10 கி/டெ.லி       
        தீவிரமானது           4 to 7 கி/டெ.லி
      மிகத் தீவிரமானது           <4 கி/டெ.லி      

ரத்தச்சோகை அறிகுறிகள்...

 ·    மூச்சுவாங்குதல்
 ·    இதயத்துடிப்பு அதிகரித்தல்
 ·    நெஞ்சு படபடப்பு
 ·    அடிக்கடி மயக்கம் ஏற்படுவது
 ·    அடிக்கடி தலைவலி 
 ·    சருமம் மற்றும் வாயின் உட்பகுதி வெளுத்துப்போதல் 

ரத்தச்சோகைக்கான காரணங்கள் 

 ·    இரும்புச்சத்துள்ள உணவுகளை குறைவாக உட்கொள்வது
 ·    வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் குறைபாடு
 ·    அடிபடுதல் போன்றவற்றால் ரத்தம் அதிகமாக வீணாவது
 ·    மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு
 ·    கர்ப்பம் காலத்திலும் பதின்பருவத்திலும் பெண்களுக்கு ரத்தத்தின் தேவை அதிகரிப்பது
 ·    குழந்தை பிறக்கும்போது ரத்தம் அதிகமாக வீணாவது
 ·    வயிற்றில் புழுக்கள் இருப்பது.

ரத்தச்சோகை போக்க என்ன செய்யலாம்? 

ரத்தச்சோகை மிகவும் குறைவாக (ஹீமோகுளோபின் 10 கி/டெ.லி-க்கு மேல்) இருக்கும்போது வீட்டிலேயே சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். அதற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மாத்திரைகள் மூலமாகவோ அல்லது ஊசியின் மூலமாகவே இரும்புச்சத்து உடலுக்குள் செலுத்தப்படும். ரத்தச்சோகை மிகவும் தீவிரமாகவும், ஹீமோகுளோபின் மிகவும் குறைவாகவும் இருப்பவர்களுக்கு ரத்தத்தை ஏற்றவேண்டியிருக்கும்.

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும். அப்போது இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக மாற்றுவதற்கு உடல் முயலும். இது சிவப்பணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 

இரும்புச்சத்து அதிகமிருக்கும் உணவுகள்...

 ·    வெல்லம்
 ·    உலர் பழங்கள் (பேரீச்சை போன்றவை)
 ·    கீரைகள் (குறிப்பாக முருங்கை)
 ·    மாமிசம் மற்றும் மீன்
 ·    கேழ்வரகு, கம்பு, பட்டாணி, முந்திரி போன்ற விதைகள்
 ·    மாதுளை, சப்போட்டா
 ·    பாகற்காய், சுண்டைக்காய்

குறிப்பு: இரும்பு மற்றும் கால்சியம் இரண்டும் செரிமானமாகும்போது எதிரெதிராகச் செயல்படக்கூடியவை. கால்சியம் அதிகமாக இருக்கும்போது இரும்பை குடல் உட்கிரகிக்காது. ஆக, இரும்புச்சத்துள்ள உணவை அதிகமாக உட்கொள்ளும்போது கால்சியம் அதிகமுள்ள பால் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமுள்ள உணவுகள்..

.இரும்பு மற்றும் குலோபுளின் ஆகியவற்றிலிருந்து ஹீமோகுளோபின் உருவாகும் வினைகள் நடைபெற வைட்டமின் பி மற்றும் ஃபோலிக் ஆசிட் ஆகியவை தேவை. இரும்புச்சத்து தேவையான அளவுக்கு இருந்தாலும், இவை குறைவாக இருந்தால் ரத்தச்சோகை ஏற்படும். இந்தச் சத்துகள் பெரும்பாலும் அசைவ உணவுகளில் மட்டுமே இருக்கும். இதனால் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு இவற்றின் குறைபாடு ஏற்படலாம். இருந்தாலும் இவை பாலில் அதிகம் இருக்கின்றன. பச்சைக் காய்கறிகள், பட்டாணி, கீரைகள் ஆகியவற்றில் மிக மிகச் சிறிய அளவில் இருக்கின்றன.

வைட்டமின் சி, இரும்புச்சத்து குடலில் செரிமானம் அடைந்து உட்கிரகிப்பதை அதிகப்படுத்தும். வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களை (எலுமிச்சை, சாத்துக்குடி) அதிகம் உட்கொண்டால் இரும்புச்சத்து அளவும் உடலில் அதிகரிக்கும். 
வைட்டமின் ஏ இரும்புச்சத்தை உட்கிரகிக்க சிறிதளவும், இரும்புச்சத்து வளர்சிதை மாற்றத்தில் பெருமளவும் ஈடுபடும். எனவே, வைட்டமின் ஏ அதிகமுள்ள கேரட், பப்பாளி, மணத்தக்காளி, மீன் போன்ற உணவுகளும் ரத்தச்சோகையைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றும். 

இரும்புச்சத்து உடலில் அதிகமானால்?

இரும்புச்சத்து உடலில் அதிகமாக இருப்பதும் பிரச்னைதான். அதிகமாக இருக்கும் இரும்பு கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் படிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும். இன்று உடலுக்குள் சென்ற இரும்பு ரத்தச் செல்களுக்குள் செல்வதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகலாம். இரும்பின் அளவைப் பூர்த்திசெய்ய மாதங்கள் ஆகலாம். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக, அளவாக இரும்புச்சத்தை உடலுக்குக் கொடுப்பதே நல்லது. 

இரும்பு உடலில் அதிகமிருந்தால் தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்றவை அறிகுறிகளாகத் தோன்றும். இரும்பு உணவுப்பாதையில் அதிகமாக இருந்தால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் வினைபுரியும். இதனால் கறுப்பு நிற, கெட்டியான மலம் உருவாகி, மலச்சிக்கல் ஏற்படும்.

உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் உயிரோடு இருக்க ஆக்சிஜன் தேவை. ஆக்சிஜனை செல்களுக்குக் கொண்டுபோய் சேர்க்க ஹீமோகுளோபின் தேவை. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அதன் உட்பொருளான இரும்புச்சத்தும், உருவாவதற்கு வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற ஊட்டச்சத்துகள் தேவை. 

ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் செல்கள் ஐந்து நிமிடங்களிலும், இதய செல்கள் 30 நிமிடங்களிலும் இறக்க ஆரம்பிக்கும். உயிர்வாழ ஆக்சிஜன் எவ்வளவு தேவையோ அதேபோல அதைத் தேவையான இடங்களுக்கெல்லாம் கொண்டு சேர்க்க ஹீமோகுளோபின் தேவை. எனவே, ரத்தச்சோகைப் பிரச்னையில் அலட்சியம் வேண்டாமே!’’ என்கிறார் மருத்துவர் புவனேஸ்வரி.