மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

ஹெல்த்செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

லும்பின் அமைப்பை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால், தேன்கூடு போல இருக்கும். இதுதான் வலிமையான எலும்பு! எலும்பு அடர்த்திக் குறைவு எனப்படும் ஆஸ்டியோ பொரோசிஸ் பிரச்னை ஏற்பட்டவர்களுக்கு, தேன்கூடு அமைப்பு மறைந்து, பெரிய பெரிய ஓட்டைதான் தெரியும். இதுவும், ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0ஏன் பெண்களுக்கு மட்டும் இப்படி நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கேட்கலாம். அரணாக இருந்து பாதுகாப்பை அளிக்கும் ஹார்மோன், மெனோபாஸுக்குப் பிறகு எதிரியாக மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம். ஆம், மாதவிடாய் சுழற்சி முடிந்த பெண்கள் மத்தியிலேயே இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும், பிரச்னை ஏற்பட்ட இரண்டில் ஒரு பெண்ணுக்கு எலும்பு முறிவும் ஏற்படுகிறது என்பதுதான் வேதனை.

 டைப் 1: போஸ்ட்மெனோபாஸல் ஆஸ்டியோபொரோசிஸ் (Postmenopausal Osteoporosis)

மாதவிலக்குச் சுழற்சி முற்றிலும் நின்ற பிறகு வரும் எலும்பு அடர்த்திக் குறைபாடு இது. ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுவதால் அது எலும்பின் அமைப்பைப் பாதிக்கிறது. மாதவிலக்குச் சுழற்சி நின்ற பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று சதவிகிதம் வரை எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படுகிறது என்கின்றன ஆய்வுகள். அதாவது, ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அளவுக்கு எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும்.

டைப் 2: முதுமைக்குரிய ஆஸ்டியோபொரோசிஸ்

70 வயதுக்கு மேலானவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபொரோசிஸ். இதுவும் ஆண்களை விடப் பெண்களையே அதிகமாகப் பாதிக்கிறது.

இது மட்டுமல்லாது,  பிற நோய்களின் விளைவாகவும், உட்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படலாம். உதாரணமாக, ஹைபர் பாராதைராய் டிஸம், ஹைபர் தைராய்டிஸம் போன்ற தைராய்டு சுரப்பிகளில் ஏற்பட்ட மாற்றங்களாலும், லுக்கேமியா போன்ற நோய் ஏற்படும்போதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது.

என்ன பாதிப்பு?

எலும்பு அடர்த்திக் குறைவால், தவறிக் கீழே விழும்போது மணிக்கட்டு, முதுகெலும்பு, இடுப்பு எலும்பு முறிவு ஏற்படலாம். முதுகுத்தண்டில் முறிவு ஏற்படும்போது சீரான அதன் உயரம் பாதிக்கப்பட்டு கூன் போன்ற அமைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயின் காரணமாக எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படுவது மட்டுமல்லாது, இயக்கம் பாதிக்கப்பட்டு, வலியும் உண்டாகிறது. முதுகுத் தண்டில் எலும்பு முறிவு ஏற்படுவதால், ஐந்து வருடங்களில் நிமோனியா, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல நோய்கள் ஏற்பட்டு, 15 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர்.

இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டால், அதைச் சரிசெய்ய அறுவைசிகிச்சையோ அல்லது இடுப்பு மூட்டு மாற்று அறுவைசிகிச்சையோ  தேவைப்படலாம். அதேபோல் ஆஸ்டியோபொரோசிஸ் நோயினால் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு, அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் இறக்கவும் வாய்ப்புள்ளது. இதிலும் சராசரியாக மூவரில் ஒருவருக்கே மீண்டும் பழையபடி நடக்க, இயங்க வாய்ப்புள்ளது.

சிகிச்சை

இந்த நோயைப் பொறுத்தவரை வருமுன் காப்பதே மிகச்சிறந்த வழி. ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பைப் பொறுத்து இந்த நோய்க்கான சிகிச்சை மாறுபடும். பொதுவாக இந்த நோய்க்கு பிஸ்பாஸ்போனேட் வகை மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆஸ்டியோக் ளாஸ்ட் செல்களின்  மூலம், எலும்பில் இருந்து அதிகமாகக் கால்சியம் வெளியேற்றப்படுவதை இந்த வகை மருந்து தடுக்கிறது. அத்துடன், கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டுக் கான மருந்துகளும் பரிந்துரைக்கப்படும். தீவிர ஆஸ்டியோபொரோசிஸ் எனக் கண்டறியப்பட்டால், அவர்களுக்குப் பாரா தைராய்டு ஹார்மோன் பரிந்துரைக்கப்படும்.

- தொடரும்

எலும்பின் கதை! - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0

எப்படிக் கண்டறிவது?

டெக்சா ஸ்கேன் (Dual Energy Xray Absorptiometry - DEXA) மூலம் ஆஸ்டியோபொரோசிஸைக் கண்டறியலாம். பொதுவாக, முதுகு மற்றும் இடுப்புப்பகுதியில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ‘டி’ மற்றும் ‘இசெட் ஸ்கோர்’ என ஆஸ்டியோபொரோசிஸின் தீவிரம் கணக்கிடப்படும்.