மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

செந்தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்

சென்ற இதழில் கால் மூட்டுத் தேய்மானம் குறித்து விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மூட்டில் ஏற்படக்கூடிய ஜவ்வு கிழிதல் மற்றும் தசைநார் காயம் (Ligament Injuries) பற்றித் தெரிந்துகொள்வோம்.
நமது கால் மூட்டானது தொடை எலும்பின்  கீழ்ப்பகுதி, தொடை எலும்பு, கால் எலும்பின் மேல் பகுதி, கால்

எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

முன் எலும்பு  மற்றும் வட்டவடிவில் இருக்கும் எலும்பு போன்ற மூன்று பகுதிகளால் உண்டானது என்று நாம் முன்னரே பார்த்தோம்.

இது ஒரு கீல் கூட்டு வகையைச் சேர்ந்தது. கதவானது திறந்து மூடுவதற்கு, கதவில் பொருத்தியுள்ள கீல் பயன்படுத்தப்படுவதைப் போன்று நாம், நம் கால்களை நீட்டவும் மடக்கவும் இது பயன்படுகிறது. இரண்டு எலும்புகளுக்கிடை யேயான உராய்வைத் தடுக்கத் தலையணை (Cushion) போன்ற அமைப்பு உள்ளது. இது   குழிமட்டம் (Meniscus) என்று அழைக்கப்படுகிறது. மேலும் கால் முட்டியில் சிலுவைப் போன்ற அமைப்பில் திசு உள்ளது. இதனை க்ரூசியேட் லிகமென்ட்ஸ் (Cruciate ligaments)  என்று அழைக்கிறோம்.  
  
வேகமாக ஓடும்போதோ திடீரென்று திரும்பும்போதோ மூட்டின் திசுக்கள் கிழிய வாய்ப்பு உள்ளது.  இப்படி முட்டியில் அடிபடுவதால், அதிகமான வலி இருக்கும். வலி மட்டுமல்லாது முட்டியின் உள்ளே ரத்தக்கசிவு ஏற்படுவதால், வீக்கமும் ஏற்படும். அவர்களால் நடக்கமுடியாது. இது போன்ற சமயத்தில், முதலுதவியாக ஐஸ் பேக்ஸ் (Ice packs) பயன்படுத்தலாம். உடனடியாக எலும்பு மூட்டு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

முதல் கட்ட சிகிச்சைக்காக முட்டியில் எங்கு அடிபட்டுள்ளது என்பதைக் கண்டறிய எக்ஸ்ரே மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (X ray - MRI Scan) பரிந்துரைக்கப்படலாம். எக்ஸ்ரே மூலம் எலும்புகளில் ஏற்பட்ட முறிவுகளை மட்டுமே அறிய முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம்தான் திசுக்களில் ஏற்பட்ட பாதிப்புகளை அறியலாம்.

எலும்பின் கதை! - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0

க்ரூசியேட் லிகமென்ட்டின் பணியானது, நமது மூட்டினை முன்பின் நகராமல் பாதுகாப்பது, நமது மூட்டிலிருந்து மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புவது போன்றவையாகும். ஆகவே, க்ரூசியேட் லிகமென்ட்ஸில் அடிபட்டால் வேகமாக ஓடுவது, நடக்கும்போது திடீரெனத் திரும்புவது போன்ற செயல்களைச் செய்வது கடினமாக இருக்கும்.

குழிமட்டம் என்ற திசு, தலையணை போன்று செயல்பட்டு மூட்டில் அதிக உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது.

க்ரூசியேட் மற்றும்  குழிமட்டத் (Meniscus) திசுக்கள் அடிபட்ட பிறகு, தானாக ஆறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இதற்குக் காரணம் மூட்டின் சைநோவியல் திரவம் (Synovial fluid) இவை சரியாவதைத் தடுக்கிறது.

முதல் கட்ட சிகிச்சையாக வலி நிவாரணிகள், இயன்முறை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இந்த முறைகளில் சிகிச்சை அளித்தும் சிலருக்கு மூட்டு வலி, மாடிப்படிகளில் இறங்குவதில் பிரச்னை, மூட்டு விலகுவது போன்ற உணர்ச்சிகள் ஏற்படலாம். இப்படித் தொடர்ந்து பிரச்னைகள் இருந்தால், இதனைச் சீர் செய்ய நுண்துளை அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

நுண்துளை அறுவை சிகிச்சையின்போது (Arthroscopy), மூட்டில் சிறு துவாரங்கள் மூலம் சிறிய கேமரா மற்றும் கருவிகள் கொண்டு அடிபட்டக் குழிமட்டத் திசுவைச் சீர்செய்ய முடியும். க்ரூசியேட் திசுப் பிரச்னைக்கு நுண் துளை மூலம் அறுவை சிகிச்சை செய்யும்போது, மூட்டின் அருகே உள்ளத் தசை நார்களைக் (Tendon) கொண்டு கிழிந்த க்ரூசியேட் திசுவுக்குப்  பதிலாகப் பொருத்தப்படும். நுண்துளை மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் காயங்கள் துரிதமாக ஆறுவது மட்டுமல்லாமல், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பும் மிகக் குறைவு.

(தொடரும்...)