Published:Updated:

ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert

ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert
News
ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert

``நாய்க்கடியால இறந்த கடைசி நபர் எங்க அப்பாவா இருக்கட்டும்" - கலங்கும் செவிலியர் பௌலின்

Published:Updated:

ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert

``நாய்க்கடியால இறந்த கடைசி நபர் எங்க அப்பாவா இருக்கட்டும்" - கலங்கும் செவிலியர் பௌலின்

ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert
News
ரேபிஸால் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும் ரேபிஸ் பாதிக்கலாம்! #Alert

``நாய் கடிச்ச உடனே சொல்லியிருந்தா ரெண்டு, மூணு ஊசியோட போயிருக்கும். அறுபது நாளுக்குப் பெறகு, கடைசி நேரத்துல கண்டுபிடிச்சதால  அப்பா உயிரைக் காப்பாத்த முடியல. ரேபிஸ் பாதிப்பால செத்துப்போன கடைசி ஆளா எங்க அப்பாவே இருக்கட்டும். இனிமே, யாரும் கவனக்குறைவா இருக்காதீங்க  ``தந்தையை இழந்த துக்கத்திலும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கிறார் செவிலியர் பௌலின்.

 `ரேபிஸ்' வைரஸ் பாதித்த நாய் கடித்தால் மட்டுமல்ல... காலால் வறண்டினாலோ, நாயின் உமிழ்நீர் பட்டாலோ கூட  ஆபத்து. அலட்சியம் உயிரையே பறித்துவிடும். பௌலியின் தந்தைக்கு நேர்ந்தது அதுதான்.  

சிவகங்கை மாவட்டம், பண்ணை திருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. தச்சுத்தொழிலாளியான இவருக்கு வயது 52. மகள் பௌலின், தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். மகன் பொறியாளர். எந்தவித உடல்நலக் குறைகளும் இல்லாமல் பெயருக்கேற்ப ஆரோக்கியமாக வாழ்ந்த ஆரோக்கியசாமிக்கு, கடந்த வாரம் திடீரென்று கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவரைப்  பரிசோதித்த டாக்டர்கள், `அவரைப் பாதித்திருப்பது ரேபிஸ் நோய்' என்று சொல்லியிருக்கிறார்கள். காலம் கடந்துவிட்டதால் பரிதாபமாக இறந்திருக்கிறார் ஆரோக்கியசாமி. 

உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கொடுமையானதா ரேபிஸ். இது எதனால் ஏற்படுகிறது. ரேபிஸ் நோய் தாக்கினால் உயிர் பிழைக்க முடியாதா?

`ரேப்டோ வைரஸ்' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ்தான் `ரேபிஸ்'. இது நாய், பூனை, குதிரை, வௌவால் போன்ற விலங்குகளைத் தாக்கும். அந்த விலங்குகளின் மூலம்  மனிதர்களுக்கும் பரவும். உலகளவில் ஆண்டுக்கு 59,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 15,000 பேர். `மொத்த உயிரிழப்பில், 45 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில்தான் ஏற்படுகின்றன' என்கிறது உலக சுகாதார நிறுவனம்.  

இந்த வைரஸ் பாதிப்பை வருமுன் தடுக்க இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. நாய் கடித்தவுடன் ஆன்டி-ரேபிஸ் ஊசி போட்டுக்கொண்டால் தப்பிக்க முடியும். இந்தியாவில் பெரும்பாலும் நாய் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட நாய்க்கு நாக்கின் நிறம் மாறியிருக்கும். கீழ்த்தாடை வழக்கத்துக்கு மாறாக கீழே தொங்கிக்கொண்டிருக்கும். கண்ணில் படும் மனிதர்களை எல்லாம் கடிக்கத் தொடங்கும். செல்லமாக வளர்த்தவர்கள் கூப்பிட்டால்கூட திரும்பிப் பார்க்காது. 

மனிதர்களை இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது என்பதை சில அறிகுறிகளின் வாயிலாக அறியலாம். அதிகமான காய்ச்சல், தலைவலி, தொண்டைப்பகுதிகளில் உள்ள தசைகளில் நடுக்கம் உண்டாகும். மிக முக்கியமாக `ஹைட்ரோஃபோபியா' எனப்படும் `தண்ணீரைக் கண்டால் அச்சப்படும்' நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாயில் அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும். தேவையற்ற மன அழுத்தம், பதற்றம், பயம் உண்டாகும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் ரேபிஸ் நோய் பாதித்த மூன்றாவது வாரத்திலிருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். சிலருக்கு இந்தக் கால அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆரோக்கியசாமிக்கு எட்டாவது வாரத்தில்தான் தெரியவந்திருக்கிறது. நோய் முற்றினால், நாயின் செயல்பாடுகள் தொற்றிக்கொள்ளும். நாக்கை வெளியில் வைத்துக்கொள்வார்கள். அவர்களை அறியாமல் உமிழ்நீர் வடியத் தொடங்கும். இறுதியில் மரணம்தான்.  

ஆரோக்கியசாமி மகள் பௌலினிடம் பேசினோம். 

``இரண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்க அப்பாவுக்கு நாய் கடிச்சிருக்கு. ஆனா, அப்பா அதை பெருசா எடுத்துக்கல. ஊசி போட்டுக்காம அப்படியே விட்டுட்டாங்க. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஒருநாள் திடீர்ன்னு பேதியாச்சு. பொதுவா அசைவம் சாப்பிட்டா அப்பாவுக்கு பேதியாகும். அதனால பெருசா எடுத்துக்கல. ரெண்டு நாள் கழிச்சு கால்கள் வீங்கிடுச்சு. உடனே பக்கத்துல உள்ள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க மருந்து, மாத்திரை கொடுத்தாங்க. சாப்பிட்டதும் சரியாகிடுச்சு. 

போனவாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டுச்சு. சளித் தொந்தரவும் இருந்துச்சு. தண்ணியைக் கண்டாலே பயந்தார். சரியா பேசவும் முடியல. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுபோய் இசிஜி, ஸ்கேன் பண்ணிப் பார்த்தோம். `உடம்புல எந்தப் பிரச்னையும் இல்ல'ன்னு சொன்னாங்க. ஆனா,
`ரொம்ப சீரியஸா இருக்காரு, அவரைக் காப்பாத்த முடியாது; வீட்டுக்குக் கூட்டிட்டு போயிடுங்க'ன்னு சொல்லிட்டாங்க. உடனே பக்கத்துல இருக்குற இன்னொரு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போனோம். அங்கதான் நாய் கடிச்சிருக்கிறதைக் கண்டுபிடிச்சாங்க. அப்பதான், நாய் கடிச்ச விஷயத்தையே எங்க அப்பா எங்கக்கிட்ட சொன்னார். அந்த ஆஸ்பத்திரியிலயும் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க..." என்று கண் கலங்குகிறார் பௌலின். 

ஆரோக்கியசாமிக்கு இறுதியாக சிகிச்சையளித்த ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனினிடம் பேசினோம்,

`` கடைசி நேரத்தில் வந்ததால் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ரேபிஸால் பாதிக்கப்பட்ட நாய்

கடித்தால் மட்டுமல்ல, நக்கினாலும் வறண்டினாலும், நாயின் உமிர் நீர் மூலமாகவும் கூட ரேபிஸ் வரலாம். ஆரோக்கியசாமியின் விஷயத்தில், அது மேலும் உறுதியாகியிருக்கிறது. நாய் கடித்தால் யாரும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் `` என்கிறார் மருத்துவர் ஆஷா லெனின்.

நாய் மட்டுமல்லை... வேறு எந்த விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கடித்தவுடன் ஒன்று, கடித்த மூன்று நாள்களில் ஒன்று, ஏழு நாள்களில் ஒன்று, இருபத்தெட்டு நாள்களில் ஒன்று என நான்கு ஆன்டி-ரேபிஸ் ஊசிகள் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த ஊசிகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கின்றன. நாய்தானே... என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. மேலே சொன்னவாறு, நாய் கடித்தால் மட்டுமல்ல, நாக்கால் நக்கினாலோ, விரல்களால் வறண்டினாலோ கண்டிப்பாக ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல, நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் ரேபிஸ் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுவிடவேண்டும். 

ரேபிஸ் பாதிப்பால் இறந்த கடைசி நபர் ஆரோக்கியசாமியாக இருக்கட்டும்!