ஹெல்த்
Published:Updated:

ஏன்? எதற்கு? எதில்? - மெதையோனின் (Methionine)

ஏன்? எதற்கு? எதில்? - மெதையோனின் (Methionine)
பிரீமியம் ஸ்டோரி
News
ஏன்? எதற்கு? எதில்? - மெதையோனின் (Methionine)

அம்பிகா சேகர், டயட்டீஷியன்உணவு

மெதையோனின் என்பது ஒரு வகை அமினோ அமிலம். அமினோ அமிலம் என்பது நமது உடலில் புரதச்சத்து உற்பத்திக்குத் தேவையான உயிர்ச்சத் தாகும். புதிய ரத்த செல்கள் உற்பத்திக்கு மெதையோனின் தேவை.

ஏன்? எதற்கு? எதில்? - மெதையோனின் (Methionine)

மெதையோனின் பயன்கள்

* கல்லீரல் சிதைவைத் தடுக்கப் பயன்படுகிறது.

* மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

* கதிரியக்கத்தின் பின் விளைவுகளைக் குணப்படுத்தப்  பயன்படுகிறது.

* பார்க்கின்சன் நோயைக் குணப்படுத் துவதில் பங்கு வகிக்கிறது.

* போதை மருந்தை மறக்கச் செய்வதில் மிக முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது.

* புண்களைக் குணப்படுத்த உதவுகிறது.

* க்ரியாட்டினின் என்கிற வேதிப் பொருளை அதிகமாகச் சுரக்க வைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.

மெதையோனின் குறைவதால் உண்டாகும் பிரச்னைகள்

* ரத்தச்சோகை

ஏன்? எதற்கு? எதில்? - மெதையோனின் (Methionine)* தலைமுடி நரைத்தல், இளநரை

* புற்றுநோய் வாய்ப்பு ( ஐந்து சதவிகிதம்)

எதில் மெதையோனின்?

* இறைச்சி, மீன், முட்டை

* சீஸ் உள்ளிட்ட  பால் பொருள்கள்

* பாதாம், அக்ரூட் போன்ற கொட்டை வகைகள்

* பீன்ஸ், சோயா

மெதையோனின் அளவு அதிகமானால் ஏற்படும் பக்க விளைவுகள்

* உடலில் க்ரியாடினின் அளவை அதிகரிக்கும்  என்பதால், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மெதையோனின் அதிகம் உள்ள உணவுப்பொருள்களைச் சாப்பிடக் கூடாது.

* பார்க்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகத் தரும் போது, அளவு அதிகமானால் ஒருவித மயக்கநிலை ஏற்படும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு மெதையோனின்?

தினமும் 20 கிராம் அளவுக்கு ஐந்து நாள்களுக்கு (மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்)