ஹெல்த்
Published:Updated:

உங்க டூத் பேஸ்ட்டுல பிளாஸ்டிக் இருக்கா?

உங்க டூத் பேஸ்ட்டுல பிளாஸ்டிக் இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்க டூத் பேஸ்ட்டுல பிளாஸ்டிக் இருக்கா?

ஹெல்த்

‘உங்கள் எதிர்ப்பாலினருடன் நெருங்கிப் பழக ஒரு வாய்ப்பு! இது தரும் சுவாசப் புத்துணர்ச்சி!’

எத்தனை பேர் இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து டூத் பேஸ்ட் வாங்கியிருக்கிறோம்? கண் கவரும் இத்தகைய டூத் பேஸ்ட் மற்றும் ஸ்க்ரப் போன்ற அழகு சாதனப் பொருள்களில் ‘மைக்ரோ கிரிஸ்டல்ஸ்’ (Micro Crystals) என்ற பொருள் சேர்க்கப்படுகிறது.

உங்க டூத் பேஸ்ட்டுல பிளாஸ்டிக் இருக்கா?

‘மைக்ரோ கிரிஸ்டல்ஸ்’ என்பவை உண்மையில் பிளாஸ்டிக் உருளைகள். இவை தயாரிக்கப்படும்போது வெளியாகும் பிளாஸ்டிக்கும் நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது வெளியாகும் கழிவுநீரில் இருந்துவரும் பிளாஸ்டிக்கும் நேரே நீர்நிலைகளைச் சென்றடைகிறது. இவை 5 மி.மீ-க்கும் குறைவாக இருப்பதால் கடல் உயிரினங்கள் இவற்றைத் தங்கள் உணவோடு சேர்த்து உட்கொள்கின்றன. விதவிதமான உணவு வகைகளாக மீன்களோடு சுவையான பிளாஸ்டிக்கும் நம் தட்டிற்கு வருகின்றன. (இது சருமப் புற்றுநோயை உண்டாக்கும் என்பது தனிக்கதை) நாம் தினமும் பயன்படுத்தும் பொருள்களால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் ஆண்டுக்கு சுமார் எட்டு மில்லியன் டன் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் நம் அகமும் புறமும் மாசடைகிறது.

பிராய்லருக்குப் பயந்தும் ஒமேகா 3-க்கு ஆசைப்பட்டும் நாம் வாங்கும் மீன்கள் தங்களோடு காரீயம், மெர்க்குரி போன்ற உலோகங்களையும் நமக்கு இலவச இணைப்பாக வழங்குகின்றன.  தவிர இதிலிருக்கும் ‘டைமெதைல் சல்பேட்’ (Dimethyl sulphate) சருமப் புற்றுநோயை மட்டுமில்லை... குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடு, நோய் எதிர்ப்புசக்திக் குறைவுகளையும் ஏற்படுத்தும். தவிர பிளாஸ்டிக் கழிவு நீரில் இருக்கும் பிஸ்பெனால் (Bisphenol) ஹார்மோன் குறைபாட்டை ஏற்படுத்தும்.

மேலை நாடுகளில் பல ஆய்வுகள் மேற்கொண்டு பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் மைக்ரோ கிரிஸ்டல்களைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டன. அங்கே அரசாங்கமும் இதற்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது. இயற்கையாக ஸ்க்ரப் செய்யும் சர்க்கரை போன்றவற்றைப் பயன்படுத்தவும் அறிவுரைகள் வருகின்றன. நாமோ ‘பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்’ என்று கூறிக்கொண்டே மறைமுகமாக நம்மிடம் திணிக்கப்படும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே கழிவு சேர்வதைத் தவிர்க்க முடியும். அதற்கு ஒரே வழி நாம் நம் இயற்கை முறைக்குத் திரும்புவது.

- அபிராமி நெல்லைக்குமார்