ஹெல்த்
Published:Updated:

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை
பிரீமியம் ஸ்டோரி
News
சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை

சிவப்ரியா மாணிக்கவேல் உணவியல் ஆராய்ச்சியாளர்உணவு

*கிடைப்பதற்கு அரிதானது செவ்வாழைப்பழம். மஞ்சள் வாழைப்பழத்தைவிட அதிக ஆற்றல் கொண்டது. இது, ஆந்தோசையானின் (Anthocyanin) நிறமியைக் கொண்டிருப்பதால், சிவப்பு நிறத்தில் இருக்கிறது. செவ்வாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை

*பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலை உணவோடு செவ்வாழைப்பழத்தைக் கொடுத்தால், நாள் முழுவதும் அவர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். காலை உணவு சாப்பிட நேரமில்லாதவர்கள் செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் சோம்பல், மந்தம் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக  இயங்க உதவும்.

*செவ்வாழைப்பழம் விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் தரும். அதனால்தான், விளையாட்டு வீரர்கள் இடைவேளையின்போது சிவப்பு வாழைப்பழங்களை உண்ணுகிறார்கள்.

*சிவப்பு வாழைப்பழத்தில், `பீட்டா கரோட்டின்’ (Beta-carotene) என்னும் ஆரஞ்சு நிறமியும் இருக்கிறது. இது, வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஏ நிறைந்திருப்பதால், கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை*நார்ச்சத்து நிறைந்த செவ்வாழைப்பழத்தை மலச்சிக்கல், அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்டால் அவற்றின் தீவிரம் குறையும்.

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை

*செவ்வாழைப்பழம் வைட்டமின் பி 6  நிறைந்தது. இது, ரத்தச் சிவப்பு அணுக்களும் ஹீமோகுளோபினும் உருவாக மிக அவசியமானது. ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹீமோகுளோபின்  அளவை மேம்படுத்த  செவ்வாழைப்பழத்தைச் சாப்பிடலாம்.

*ஒரு செவ்வாழை நான்கு கிராம் நார்ச்சத்தைத் தருகிறது. குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த செவ்வாழைப்பழம் உதவுகிறது. மூலநோயைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை  குறைக்க, உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் ஒரு செவ்வாழைப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

*செவ்வாழையிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.