ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

டாக்டர் நியூஸ்!

வெயில்காலம் தொடங்கப்போகிறது. அடுத்த சில மாதங்களுக்குக் கோடையின் ஆதிக்கம்தான். ஆனால், அதை நினைத்து மகிழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது: சூரிய வெளிச்சம் நம்முடைய எடைக்குறைப்பு முயற்சிகளைத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  

டாக்டர் நியூஸ்!

கனடாவிலிருக்கும் அல்பெர்டா பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு, சூரிய வெளிச்சத்தால் மனிதர்களின் கொழுப்பு செல்களில் உண்டாகிற மாற்றங்களைக் கவனித்திருக்கிறது. அதன்படி, கோடைக்காலத்தில் நம்முடைய உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றோடு சேர்ந்து சூரியவெளிச்சமும் நம் எடைக்குறைப்புக்கு உதவுகிறதாம்.  குளிர்காலத்தில் நாம் என்னதான் மெனக்கெட்டாலும் உடல் எடை அதிகம் குறையாமலிருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

வருடத்தில் பெரும்பகுதி வெயில் அதிகமுள்ள காலநிலை நம்முடையது. பயன்படுத்திக்கொண்டு உடல் மெலிவோம்!    

டாக்டர் நியூஸ்!

ருத்துவத்துறையில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன; அவற்றின் மூலம் லட்சக்கணக்கான நோயாளிகள் பலன்பெறுகிறார்கள்.

ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் பணக்காரர்கள்தாம்; ஏழைகளுக்கு வரும் நோய்கள், அவர்களுடைய நலப்பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளில் அதிகம்பேர் ஈடுபடுவதில்லை. அப்படியே ஈடுபட்டாலும், அவர்களுடைய கண்டுபிடிப்புகள் உண்மையான தேவையுள்ளோருக்குச் சென்றுசேர்வது சிரமம்.

டாக்டர் நியூஸ்!



இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, ‘டாடா டிரஸ்ட்’ அறக்கட்டளையும், பாத்  (PATH) என்ற நலப்பராமரிப்பு நிறுவனமும் சேர்ந்து டெல்லி ஐ.ஐ.டியில் ஓர் ஆய்வகத்தை அமைத்திருக்கின்றன. சுமார் பத்து மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் தாய், சேய் நலன், ஊட்டச்சத்து, தீவிரத் தொற்றுநோய்களைக் கண்டறிதல் போன்ற துறைகளில் இங்கே ஆய்வுகள் நடைபெறும். இதன்மூலம் கண்டறியப்படும் விஷயங்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சென்றுசேரும்!

குழந்தைகள் சிறுவயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டாலோ, பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ புறக்கணிக்கப்பட்டாலோ, அந்த அனுபவங் களின் வலி அவர்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்நாள்களில் அவர்கள் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிற வாய்ப்பு மிக அதிகம்.

டாக்டர் நியூஸ்!

அந்த ஆபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக்கூடிய ஒரு வழி சமீபத்தில் கண்டறியப்பட்டிருக்கிறது: விளையாட்டு!

ஆம், துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகளைச் சந்திக்கும் குழந்தைகள் நன்றாக ஓடியாடி விளையாடும்போது, அவர்களுக்கு மனநலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்பு குறைவதாகக் கண்டறிந்திருக்கிறது ஓர் ஆய்வு. இங்கிலாந்தின் பாங்கூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு, விளையாட்டின் மூலம் இந்தக் குழந்தைகளுடைய மன நலம் காக்கப்படுவதை உறுதிசெய்கிறது.

ஓடியாடி விளையாடினால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நன்மைதான்!

ந்நேரமும் உட்கார்ந்துகொண்டே வேலை பார்ப்பது உடம்புக்குக் கெடுதல் என்பது தெரியும். ஆனால், அப்படிப்பட்ட வேலைதான் பலருக்கு அமைந்துவிடுகிறது. என்ன செய்வது? 

டாக்டர் நியூஸ்!

சில நிறுவனங்கள், நின்றுகொண்டே வேலைசெய்கிற மேசைகளை அமைக்கின்றன. இதன்மூலம் தங்கள் ஊழியர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்று நம்புகின்றன.

இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு வாய்ப்பும் உள்ளது.அதுதான் சிறந்த ஆரோக்கியத்தைத் தருகிறது என்று சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் சொல்கிறது. வழக்கமாக மேசையில் உட்கார்ந்து வேலை பார்க்கிறவருடைய கால்கள் சற்றும் நகராது. ஆனால், இந்த ஆய்வில் நகரக்கூடிய கால்பகுதியைக்கொண்ட மேசைகள் பயன்படுத்தப்பட்டன. அதாவது, ஒருவர் தன்னுடைய வேலையைப் பார்த்தபடி காலை முன்னும் பின்னும் நகர்த்தி ஊஞ்சலாடலாம், சுழற்றலாம்... இப்படியெல்லாம் செய்யும்போது அவருடைய வளர்சிதை மாற்றத்தில் கணிசமான முன்னேற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது நிச்சயம் உடற்பயிற்சிக்கு இணையாகி விடாது. அதேசமயம் அசையாமல் அமர்ந்துகொண்டிருப்பதைவிட இது சிறந்தது. யார் வேண்டுமானாலும் இதனை எளிதில் முயன்றுபார்க்கலாம்!

2018-ல் மருத்துவத்துறையில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? புகழ்பெற்ற க்ளீவ்லேண்ட் க்ளினிக் வழங்கும் பட்டியல் இது:  

டாக்டர் நியூஸ்!

* ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ என்று அழைக்கப்படும் LDL அளவுகளை 75  சதவிகிதம் வரை குறைக்கக்கூடிய, அதன்மூலம் இதய நோயைக் கட்டுப்படுத் தக்கூடிய மருந்துகள் அறிமுகமாகும்.

* நோயாளிகளைக் கண்காணித்துச் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கக்கூடிய அமைப்புகள் மேம்படும்; இதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

* தூக்கம் சார்ந்த நோய்களைக் குணப்படுத் தக்கூடிய சிகிச்சைகள் முன்னேறும்.

* செயற்கைக்  கணையம் கண்டுபிடிக்கப்படும். இது நீரிழிவுப் பிரச்னை கொண்ட பலருக்கும் பெரிய அளவில் உதவும்.

* Inherited Retinal Diseases எனப்படும் விழித்திரை சார்ந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கான மரபணுச் சிகிச்சை அறிமுகமாகும்.

- நி.ராஜேஷ்வர்