ஹெல்த்
Published:Updated:

தொற்றுநோய்களின் உலகம்!

தொற்றுநோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்றுநோய்களின் உலகம்!

வி.ராமசுப்பிரமணியன் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த் - 3

பாக்டீரியாக்கள் எல்லாம் ஒரு கூட்டம் போட்டு, `இந்த மனிதனை இன்றோடு ஒழித்துக் கட்டிவிடவேண்டும்’ என்று நினைத்தால் ஐந்து விநாடிகளில  அழித்துவிட முடியும். நம் உடம்பில் இருக்கிற பாக்டீரியாக்கள் வெளியிடுகிற நச்சை (Endotoxin) அளந்தோமானால் நான்கு முதல் ஐந்து கிராம் அளவுக்குத் தேறும். அவற்றில் வெறும் 0.5 மில்லிகிராம் போதும், நம்மைக் காலி செய்ய. ஆனால், ஏதோ ஒரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அவை தங்களின் ராட்சத சுயத்தை வெளிப்படுத்தாமல் அடங்கியிருக்கின்றன. 

தொற்றுநோய்களின் உலகம்!

நம் வாயில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. மூக்கில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நம் தோலில் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்கள் இல்லாவிட்டால், நம் உடலில் பல வேலைகள் நடக்காது. அதே நேரம் பாக்டீரியாக்கள் அதிகரிக்குமேயானால், நம் உடலின் இயல்பு மாறிப்போகும்.

வாயில் இருக்கிற பாக்டீரியாக்கள் பற்களில் தேங்கியிருக்கும் உணவுத் துகள்களைச் சாப்பிட்டுவிட்டு, கிடைக்கும் இடங்களில் தேங்கியிருக்கும். நாம் தினமும் பல் துலக்கும்போது அவை வெளியேற்றப் பட்டுவிடும். மீண்டும் புதிய பாக்டீரி யாக்கள் அங்கே குடியேறும். நாம் தொடர்ச்சியாகப் பல் துலக்காமல் விட்டோமானால், அந்த பாக்டீரியாக்கள் வசதியாகத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். பற்களில் ஏறி, அவற்றைச் சொத்தையாக்கிவிடும்.  இன்னோர் அதிரச்சிகரமான செய்தியைச் சொல்கிறேன். ஜீரணிக்கச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். நம் பிறப்புறுப்பில் இருக்கும் பாக்டீரியாக்களைவிட, நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகம். பாக்டீரியாக்களை வளரவிடாமல் தினமும் பல் துலக்குவதால் அவைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின் றன. 

வாயில், மூக்கில், தோலில், பிறப்புறுப்பில் என உடலின் சகல பாகங்களிலும் இருக்கும் பாக்டீரியாக்கள் சரிவிகிதமாக இருந்து உடம்பு தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையோடு இருந்தால், எந்தத் தொந்தரவும் இல்லை. உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து, பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் பிரச்னை தொடங்கிவிடும். இதுதான் உடலியலின் அடிப்படை. 

தொற்றுநோய்களின் உலகம்!



பாக்டீரியாக்கள் உடலுக்குள் செல்லும்போது, அவற்றைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் நம் உடலில் இயல்பாகவே இருக்கின்றன. வாய், மூக்கு, வயிறு எல்லா இடங்களிலுமே இந்த எதிரிகளை அழிக்கிற ராணுவ அமைப்புகள் உள்ளன. நாம் சுவாசிக்கும்போது ஏராளமான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காற்றின் வழியாக உள்ளே போகின்றன. இருக்கும் இடத்தைப் பொறுத்து இதன் அளவு மாறுபடும். மருத்துவமனைக்கு அருகில் இருந்தால் அளவு அதிகமாகும். நல்ல விசாலமான காற்றுள்ள பூங்காவில் இருந்தால் அளவு குறைவாக இருக்கும். சினிமா தியேட்டரில் அதிகமாக இருக்கும். ஆபரேஷன் தியேட்டரில் குறைவாக இருக்கும்.

தொற்றுநோய்களின் உலகம்!

ஏ.சி பொருத்தப்பட்ட அடைக்கப்பட்ட அறைகளில் அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருக்கும். இருமல், தும்மல், காஸ் போன்ற வழிகளில் இவை மனிதர்களிடம் இருந்து வெளிப்பட்டு அதிவேகமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது. சுவாசத்தின் வழியாக உள்ளே செல்லும் பாக்டீரியாக்கள் அப்படியே நுரையீரலுக்குள் சென்றால் நாம் காலி. உள்ளே போகும்போது அவற்றைத் தடுப்பதற்கான தடுப்பான்கள் ரோமங்கள் வடிவில் மூக்கிலேயே இருக்கின்றன. அந்த ரோமங்கள் பெரும்பாலான பாக்டீரியாக்களைத் தடுத்து அழித்துவிடும். அந்த ரோமங்களைக் கடந்து உள்ளே செல்லும் பாக்டீரியாக்களை தொண்டையில் இருக்கும் அமிலங்கள் அழிக்கப் போராடும். அந்த நிலையில் பெரும்பாலான பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதையும் தாண்டி உள்ளே செல்லும் பாக்டீரியாக்களை, மூச்சுக்குழாயில் ஒட்டியிருக்கும் செல்களில் உள்ள சிறுசிறு ரோமங்கள் பிடித்து அழித்துவிடும். அதேபோல தோல் வழியாக ஒரு பாக்டீரியா உள்ளே நுழைய முயன்றால், தோலில் உருவாகும் ஆசிட் அவற்றைப் பிடித்துக் கொன்றுவிடும். இப்படி நம் உடல் தினமும் போராடிக் கொண்டேயிருக்கிறது. அந்தப் போராட்டத்துக்கு நம் பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறைகள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றன என்பதைப் பொறுத்து நம் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.

- களைவோம்...