மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த் - 3

ழங்கால இந்தியாவில் செக்ஸை வாழ்க்கையின் பிரிக்கமுடியாத  ஓர் அங்கமாக நினைத்தார்கள். அதை ஒதுக்கி வைக்கவோ, ரகசியப் பொருளாகப் பதுக்கி வைக்கவோ அவர்கள் நினைத்ததில்லை. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான் முழுமை பெறுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது. செக்ஸ் உறவில் ஆண் பெண் என்ற பாகுபாடு ஏதுமில்லை. கணவன்-மனைவி உறவு நிலைத்து நீடிப்பதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளுதலோடுகூடிய தாம்பத்யமும் முக்கியம். 

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

திருமணமான புதிதில் பொங்கி வழியும் ரொமான்ஸ் போகப்போக நீர்த்துப் போய்விடும் தம்பதிகளையும் பார்க்கிறோம். ‘மகிழ்வித்து மகிழ்' என்ற சொற்பதம் செக்ஸுக்கு சாலப்பொருந்தும். செக்ஸ் உறவில் காலம்காலமாகப் பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன. எனக்குச் சமீபத்தில் வந்த வித்தியாசமான கேள்விகள் இவை.

கேள்வி: எனக்கு வரப்போகும் பெண் நல்லவளா கெட்டவளா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? திருமணத்துக்கு முன்பு உறவில் ஈடுபட்ட ஒரு பெண்ணை எப்படி இனம் காணுவது?

என் பதில்: திருமண பந்தத்தின் அடிப்படையே நம்பிக்கைதான். திருமணத்திற்குப் பிறகு மனைவியின் கடந்த காலத்தை ஆராய்ச்சி செய்தால் உறவில் முறிவுதான் வரும். ஒரு பெண் கன்னித்தன்மை உள்ளவளா இல்லையா எனக் கண்டுபிடிக்கவே முடியாது. திருமணத்துக்கு முன்பு பெண்ணுறுப்பு விரல் நுழையும் அளவுக்கே இருக்கும். ஆனால், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த காரணிகளால் இயற்கையாகவே கன்னித்திரை கிழிந்து, உறுப்பு தளர்வாக இருக்கும். அதை வைத்தே கன்னித்தன்மை இழந்ததாக நினைக்கக் கூடாது. அதேபோல ஆண் ஈடுபடுவது போல இன்றைய பெண்களும் சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். சுய இன்பம் என்பது ஓர் ஆணோ பெண்ணோ நார்மலாக இருப்பதற்கான அறிகுறி. சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்ணின் குறி விரிவடைந்திருக்கும். இப்படிப் பல்வேறு காரணிகள் இருப்பதால் சந்தேகத்தோடு இதை அணுக வேண்டாம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! கேள்வி: என் தாத்தாவின் தாத்தா பல பெண்களை மணந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தவர். இப்போது என் மனைவியும் நானும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். ஆனால், என் மனைவி, பெண்களோடு நான் பழகினாலே பயந்து சண்டை போடுகிறார். எனக்கு நல்ல தோழிகள் நிறைய பேர் உண்டு. என் மூதாதையர் வழி என் ஜீனிலும்  பலதார மணம் என்ற விஷயமோ செக்ஸ் ஆசையோ இருக்கும் என்கிறாள். மனைவியைத் தவிர யாருடனும் வேறுமாதிரியான உறவினையும் கனவிலும் நினைத்ததில்லை நான். எப்படிப்  புரிய வைப்பது?

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை!

 என் பதில்: அந்தக் காலத்தில் நிறைய பெண்களைக் கல்யாணம் செய்வதை ஒரு சோஷியல் ஸ்டேட்டஸாக நினைத்தார்கள். 'பார்த்தியா பொருளாதார ரீதியா நான் இத்தனை பேரை சமாளிக்கிறேன்னு' உலகத்துக்குக் காட்டத்தான்.

அதற்குத் தோதாக அன்றைய பெண்களின் மனநிலையும் கல்விச்சூழலும் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் படித்த விபரமறிந்த பெண் அதற்குச்  சம்மதிக்க மாட்டாள். எனக்குத் தெரிந்து அந்தக் காலத்தில் பலதார மணம் செய்த பல ஆண்கள் அந்தப்  பெண்களைக்  கண்டுகொள்ளாமல் பொருளாதார ரீதியாகக்  கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் சமூகச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

இன்று சட்டத்திலும் அதற்கெல்லாம் இடமில்லை. உங்கள் மனைவியுடன் முதலில் மனம் விட்டுப் பேசுங்கள். அவரும் உங்கள் தோழிதான்: தோழிகளில் முதன்மையான அந்தரங்கமான சிநேகிதி அவர் ஒருவர் மட்டும் தான்  என்று புரிய வையுங்கள். செக்ஸ் ஆசைக்கும் ஜீனுக்கும் சம்பந்தமில்லை என்ற அறிவியல் உண்மையை எடுத்துச் சொல்லுங்கள்!

- தொகுப்பு: ஆர்.சரண்

 (இன்னும் கற்றுத் தருகிறேன்)