
இப்படிக்கு இருமல்

சளி, ஃப்ளூ...
நெஞ்சுச் சளி, தலையில் நீர்கோத்து சளிபிடித்தல், பருவகாலத்தில் வரும் ஃப்ளூ ஆகியவை வைரஸ்களால் ஏற்படுபவை. அவற்றுடன் இருமலும் சேர்ந்துகொள்ளும்.

அலர்ஜி
ஒவ்வாமை, சைனஸ் மற்றும் சுவாசத் தொற்றால் மூக்கில் நீர் வடிந்து, அதனால் சுவாசிக்க முடியாமல் இருமல் வரும்.

புகைபிடித்தல்
புகைபிடிப்பதால் மூச்சுக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக இருமல் வரலாம்.

கக்குவான்
பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, சளிப் பிடிப்பதால் உண்டாகிற இருமல். மிக வேகமாக மற்றவர்களுக்கும் பரவும்.

ஆஸ்துமா
நாள்பட்ட நுரையீரல் பிரச்னை, சுவாசக் குழாய் அடைப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக இருமலும் வரும்.

எதுக்களித்தல்
இரைப்பையிலிருக்கும் அமிலம் உணவுக்குழாயின் மேலேறி வரும்போதும் இருமல் வரலாம்.
இருமலுக்கான காரணங்கள் வேறுபடுவதைப் போலவே அதற்கான சிகிச்சைகளும் மருந்துகளும்கூட வேறுபடும். எனவே, மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக இருமல் மருந்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- மு.இளவரசன்