ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!

ற்ற வைட்டமின்களெல்லாம் உணவில் கிடைப்பவை. வைட்டமின் டி மட்டும் இயற்கையாக, சூரிய வெளிச்சத்தில் கிடைக்கிறது. வைட்டமின் டி-யினால் நம் உடலுக்குப் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, இது நம்முடைய எலும்புகளுக்கு மிகவும் நல்லது. ஆனால், சமீபகாலமாக இதயம் சார்ந்த பிரச்னைகளோடு மருத்துவமனைக்கு வருகிற பலருக்கும் வைட்டமின் டி3 குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கவனித்திருக்கிறார்கள். இதுகுறித்து நிகழ்ந்த தொடர் ஆராய்ச்சிகளில், இந்த வைட்டமினால் இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு நல்ல பலனுண்டு என்பது தெரியவந்திருக்கிறது.

ஒஹையோ பல்கலைக்கழகத்தைச் (Ohio University) சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, வைட்டமின் டி3-யின் மூலம் சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் ஏற்பட்டிருக்கும் சேதம் குறையக்கூடும், உடல் பழையநிலைக்கு மீளக்கூடும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இதன்மூலம் இதயம் சார்ந்த நோய்கள் வரும் வாய்ப்பும் குறையுமாம். இனிமேல் வெயில் அதிகரித்தால், அலுத்துக்கொள்ளாதீர்கள், அது இதயத்துக்கு நல்லது!

டாக்டர் நியூஸ்!

ம் நாட்டில் திராட்சைப் பழங்களின் பருவம் தொடங்கியிருக்கிறது. இன்னும் சில மாதங்களுக்குக் குறைந்த விலையில் பலவிதமான திராட்சைகளை ருசிக்கலாம். இதுவரை திராட்சைப்பழங்களை உண்ணுவதற்கு ருசியும் சத்தும்தான் காரணங்களாக இருந்தன. இப்போது, இன்னொரு காரணமும் கிடைத்திருக்கிறது... `திராட்சைப்பழத்தைச் சாப்பிடுவது நம்முடைய மனநலனுக்கு நல்லது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

டாக்டர் நியூஸ்!

நியூயார்க்கிலிருக்கும் Icahn மருத்துவக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியிருக்கும் இந்த ஆய்வின்படி, மனச்சோர்வு, பதற்றம் போன்ற குறைபாடுகளைக் கொண்டவர்களுடைய பிரச்னைகளைத் தீர்க்கும் குணம் திராட்சையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. உலகெங்கும் இந்தப் பிரச்னையுள்ளவர்கள் பலர் இருப்பதால், இதுபோன்ற இயற்கையான சிகிச்சைமுறை பெரும் வரப்பிரசாதமாக அமையக்கூடும். ஆகவே, இதுபற்றிய ஆய்வுகள் இன்னும் வேகம்பெற்றிருக்கின்றன. திராட்சை மட்டுமல்ல, பொதுவாகவே அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்பது உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது!

புகைபிடிப்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம்தான். ஆனாலும், பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது. காரணம், அவர்கள் வெளிவிடும் புகையால் பிறருடைய ஆரோக்கியம் கெடக்கூடாதல்லவா? சிலர், குழந்தையோடு நடந்து வரும்போது புகைபிடிப்பார்கள்; அந்தப் புகையைச் சுவாசித்துக் குழந்தை இருமும், தடுமாறும். அதைப் பார்த்து நமக்குக் கோபம் வரும்; ஆனால் அவர்களோ, சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து ஊதுவார்கள்.

அமெரிக்காவிலிருக்கும் அலபாமா மாநிலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவர உத்தேசித்திருக்கிறது... இளையோரோடு ஒரே வண்டியில் பயணம் செய்கிறவர்கள் புகைபிடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவரவிருக்கிறார்கள்.அதாவது, ஒரு காரில் தந்தை, தாய், ஒரு குழந்தை ஆகியோர் செல்கிறார்கள் என்றால், அந்தக் காருக்குள் தந்தையோ, தாயோ புகைபிடிக்கக் கூடாது. அப்படிப் புகைபிடித்தால் நூறு டாலர் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தைகள் மட்டுமல்ல, பத்தொன்பது வயதுக்குட்பட்ட யார் வண்டியில் இருந்தாலும், புகைபிடிக்க அனுமதியில்லை. `நீங்கள் உங்கள் உடம்பை என்னவோ செய்துகொள்ளுங்கள், இளைஞர்களைத் துன்புறுத்தாதீர்கள்’ என்கிறது அலபாமா அரசாங்கம்!

தயத்துக்குப் ‘பேஸ்மேக்கர்’ வைப்பார்கள், பார்த்திருக்கிறோம். அதுபோல, மூளைக்கும் ஒரு ‘பேஸ்மேக்கர்’ வைத்தால் எப்படியிருக்கும்?

டாக்டர் நியூஸ்!

கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு கண்டுபிடிப்பு அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது: அல்சைமர் பிரச்னையுள்ள மூன்று நோயாளிகளுடைய மூளையில் வயர்களைப் பொருத்தி, ‘Deep Brain Stimulation’ எனப்படும் முறையில் சிகிச்சையைத் தந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பார்க்கின்ஸன் போன்ற சில பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை பயன்படுத்தப் பட்டுவருகிறது. இப்போது இதனை அல்சைமர் பிரச்னைக்கும் பயன்படுத்தி ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

முதலில், இந்த வகைச் சிகிச்சை பாதுகாப்பானதுதானா என்கிற கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு, இதன்மூலம் கிடைக்கும் பலன்கள் எல்லோருக்கும் பொருந்துமா என்பதை ஆராயப் போகிறார்கள். ஒருவேளை இந்தச் சிகிச்சை முறை வெற்றியடைந்தால், மூளை சார்ந்த பல பிரச்னைகளுக்கு ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கலாம்.

யட் விரும்பிகள் காலையில் இட்லி, தோசைக்குப் பதில் ஒரு கிண்ணம் நிறைய கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும் சாப்பிடுவார்கள். அதுதான் ஆரோக்கியம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

‘ஆனால், அதைவிட ஒரு ஸ்லைஸ் பீட்சா சாப்பிட்டுவிடலாம்’ என்கிறார் செல்செ அமெர். பிரபல ஊட்டச்சத்து நிபுணரான இவருடைய இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பீட்சா எப்படி கார்ன் ஃப்ளேக்ஸைவிட ஆரோக்கிய மானதாகும்?

டாக்டர் நியூஸ்!

‘கலோரி கணக்குப்பார்த்தால், ஒரு கிண்ணம் நிறைய கார்ன் ஃப்ளேக்ஸ் போன்ற சீரியல் (Cereal) ஒன்றைப் போட்டு அதில் பால் சேர்த்துச் சாப்பிடுவதும், ஒரு துண்டு பீட்சா சாப்பிடுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்’ என்பது செல்செயின் வாதம். ‘ஆனால், பீட்சாவில் புரதம் அதிகமாக உள்ளது. அது உடம்புக்கு நல்லது!’ என்றும் சொல்கிறார்.

அதனால், பீட்சா ஆரோக்கியமான உணவாகிவிடாது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும், வெறுமனே விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது என்றுதான் செல்செ சொல்லவருகிறார். ‘பீட்சாவிலும் நல்லதுண்டு, சீரியல் உணவிலும் கெட்டதுண்டு, நாம் எதை வாங்கினாலும் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதுதான் நல்ல உணவு.!

- என்.ராஜேஷ்வர்