ஹெல்த்
Published:Updated:

புதிய இடம் தரும் பயம் (Agoraphobia)

புதிய இடம் தரும் பயம் (Agoraphobia)
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய இடம் தரும் பயம் (Agoraphobia)

அச்சம் தவிர்

ய்வுக்கு வீடுதான் சொர்க்கம். வீட்டில் இருக்கும்போது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால், ஒருவர் வீட்டிலேயே தனியாக அதிக நேரத்தைச் செலவழித்து வெளியே செல்லப் பயப்படுவதே அகோராபோபியாவாகும். புதிதாக ஓரிடத்துக்குச் சென்றால் அங்கே அவர்களால் நீண்ட நேரம் இருக்க முடியாது. ஏதும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்துகொண்டே இருப்பார்கள்.

காற்று அதிகமில்லாத இடமாகவோ ஆபத்துகள் நிறைந்த இடமாகவோ அது இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் சென்றிடாத புதிய இடத்துக்குப் போனாலே இந்தப் பிரச்னை வந்துவிடும். உடனே வீட்டுக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

புதிய இடம் தரும் பயம் (Agoraphobia)

காரணங்கள்: ஜீன்களிலே இந்த பயம் இருக்கலாம்; அதனால் தலைமுறைகள் கடந்து இந்த நோய் நீடிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், சுற்றுப்புறக் காரணிகளாலும் இந்த பயம் வரலாம். நீண்ட காலமாக மாத்திரை உபயோகிப்பவர்கள், ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் உபயோகிப்பவர்கள், அதிர்ச்சிகரமான குழந்தைப்பருவ சம்பவங்கள், இறப்பு, விவாகரத்து போன்ற உறவுச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே செல்ல பயப்படுகின்றனர். இது இவர்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும்.

அறிகுறிகள்: வெளியே செல்லும்போது விரைவான சுவாசம், மூச்சுத்திணறல் அல்லது உடல் நடுக்கம், குமட்டல், தலைவலி போன்ற உடல் அறிகுறிகளாலும், இறக்கும் எண்ணம், மன அழுத்தம், அச்சம், கவலை உணர்வுகள், சுயமரியாதை இழப்பு அல்லது நம்பிக்கை இல்லாமை போன்ற உளவியல் அறிகுறிகளாலும் இந்த நோயைக் கண்டறியலாம்.

சிகிச்சை: அகோராபோபியாவுக்கு ஆரம்பத்தில் சிகிச்சை அளிப்பது இன்றியமையாதது. சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது மிகவும் தீவிரமான பிரச்னைகளை உருவாக்கும். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மனச்சோர்வு அல்லது தற்கொலை எண்ணம்கூட வரலாம். மிதமான பயத்தை ஏற்படுத்தும் இடங்களுக்கு அடிக்கடி சென்று பழகுவதன் மூலம் அந்த பயம் தீவிரமடையாமல் தவிர்க்கலாம்.

- இ.நிவேதா