ஹெல்த்
Published:Updated:

ஆதலால் காதல் செய்வீர்

ஆதலால் காதல் செய்வீர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதலால் காதல் செய்வீர்

ஹெல்த்

நீண்ட நாள் காதலில் திளைக்கும் போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன தெரியுமா?

மன அழுத்தம் மாயமாகும்

கார்டிசோல் எனும் ஹார்மோன் உருவாவது மற்றும் நரம்புத் தூண்டல் கடத்தியில் இருக்கும் செரடோனின் என்னும் ஹார்மோனின் அளவு குறைவது, இவை இரண்டும்தான் ஆரம்பக் காலத்தில் மோகம் (infatuation) உருவாகக் காரணம். நாளடைவில், செரடோனின் அளவு நிலைப்படுத்தப்பட்டவுடன் இந்தப் பரவசம் குறைந்துவிடுகிறது. ஆனால், இதை ஈடுகட்டும் வகையில் உடல் உருவாக்கும் ஆக்சிடோசின் (oxytocin) மற்றும் வாஸோப்ரெஸின் (vasopressin) ஹார்மோன்கள் காதல் பிணைப்பைச் சாத்தியமாக்குகின்றன.

ஆதலால் காதல் செய்வீர்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

புற்றுநோய் உள்ளவர்கள் என்றாலும் திருமணப் பந்தத்தில் இருப்பவர்களுக்கு, மரண அபாயம் மற்றவர்களைவிடவும் 20 சதவிகிதம் குறைவு. துணையின் உதவியுடன் சரியான நேரத்தில் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுவிடுகின்றனர் என்பதே காரணம்.

மகிழ்ச்சி பெருகும்

டோபாமைன் (Dopamine) அதிகமாகச் சுரக்கும் தருவாயில், அதாவது காதல் பெருக்கெடுக்கும் போது மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. பல வருடங்களாகக் காதலில் இருப்பவர்களுக்கு இந்த டோபாமைன் நிறைந்த மகிழ்ச்சி மையங்கள் நன்றாகச் செயல்படுகின்றன.

இதயம் பலப்படும்

சிங்கிளாக இருப்பவர்களைக் காட்டிலும், நீண்ட நாள் காதல் உறவில் திளைப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் மட்டுமல்ல, இதய நோய் ஏற்படவும் வாய்ப்புகள் குறைவுதான்.

- ர.சீனிவாசன், படம்: மதன்சுந்தர்