
கை கழுவுங்க பாஸ்
கைகளை முறையாகக் கழுவுவது என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. நோய்க் கிருமிகளை எதிர்ப்பதில் முறையான கை கழுவுதலே முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது.
அவசியம் கைகளைக் கழுவ வேண்டிய தருணங்கள்...

1846-ம் ஆண்டு, ஹங்கேரி மருத்துவர் இக்னாஸ் செம்மல்வேய்ஸ் (Ignaz Semmelweis) ஓர் அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். `மருத்துவர்கள் முறையாகக் கைகளைக் கழுவுவதால், பிரசவத்தின்போது ஏற்படும் தாயின் மரணம் 40 மடங்கு குறைந்திருக்கிறது’ என்பதைத் தன் ஆய்வில் முன்வைத்தார்.

`நான் ஒருநாளைக்கு எத்தனை தடவை கை கழுவுறேன் தெரியுமா?’ என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். `பெரும்பாலானோர் பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்திய பிறகுகூடக் கைகளைக் கழுவுவதேயில்லை அல்லது முறையாகக் கழுவுவதில்லை’ என்கின்றன சில ஆய்வுகள்.
முறையாகக் கைகளைக் கழுவுவது எப்படி?

- ச.கலைச்செல்வன்