மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

ர் இசை நிகழ்ச்சியில் பாடகர், இசைக்கருவிகளை இசைப்பவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

சங்கமமானால்தான் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். அதேபோலத்தான் செக்ஸும். ஆண், பெண் இருவரும் விருப்பத்தோடு இணைந்து ஈடுபட்டால்தான் பரஸ்பர இன்பம் சாத்தியமாகும். என் மருத்துவமனைக்கு ஒருவர் வந்திருந்தார். வயது 40. ``டாக்டர், என் மனைவி செக்ஸுக்கு கூப்பிட்டா வர மாட்டேங்கிறா. ரொம்ப விரக்தியாகப் பேசுறா’’ என்று முறையிட்டார். ``அதுக்கு உங்க மனைவி என்ன காரணம் சொல்றாங்க?’’ என்று கேட்டேன். அவர் ஒரு நிமிடம் மௌனம் காத்தார்.  பிறகு, `` `செக்ஸுல எனக்கு எந்த சுகமும் கிடைக்கறதில்லை. என்னைத் தூண்டிவிட்டுட்டு, நீங்க சீக்கிரமாக முடிச்சுக்கிறீங்க’ என்கிறாள்.’’ ``நீங்க எவ்வளவு நேரம் செக்ஸில் ஈடுபடுவீங்க?’’ என்று கேட்டேன். ``எனக்குக் கொஞ்ச நேரத்துலேயே விந்து வெளியேறிடுது. அதனால...’’ என்று தலையைச் சொரிந்துகொண்டே இழுத்தார்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

செக்ஸின்போது விந்து சீக்கிரம் வெளியேறும் (Premature Ejaculation) பிரச்னை ஆண்களுக்குப் பரவலாக இருக்கத்தான் செய்கிறது. பொதுவாகவே, விந்து வெளியேறிய பிறகு பல ஆண்களுக்கு செக்ஸில் நாட்டம் இல்லாமல் போய்விடும். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகே மீண்டும் அந்த உணர்வு தலைதூக்கும். இதன் காரணமாகப் பெண்களுக்கு இன்பம் கிடைக்காமலேயே போய்விடும். இப்படிப் பெண்களுக்குத் தொடர்ந்து செக்ஸில் ஏமாற்றம் ஏற்படும்போது, `எனக்கு எதற்கு செக்ஸ்?’ என்று கணவன் அழைத்தாலும் ஈடுபட மாட்டார்கள்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 8

விந்து சீக்கிரத்தில் வெளியேறுவதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன. பைமோசிஸ் (Phimosis) என்ற ஆணுறுப்பின் முன்புறத் தோலைப் பின்னோக்கித் தள்ள முடியாமல் இருப்பது; ஆணுறுப்பின் முன்புறத்தின் அடியில் இருக்கும் இணைப்புத்தோல் கூர்மையாக இருப்பது; சிறுநீர்ப்பாதையில் தொற்றுகள் இருப்பது; புராஸ்டேட் தொற்று; நரம்பு மண்டலங்களில் கோளாறு; சர்க்கரைநோய்; அதிக நாள்கள் இடைவெளிவிட்டு செக்ஸில் ஈடுபடுவது... இவையெல்லாம் முக்கியமான காரணங்கள்.

கணவன் - மனைவி இடையே சண்டை; மனக் கசப்பு; பெண்கள் மீதிருக்கும் வெறுப்பு மனநோய்; பதற்றம்; விந்து சீக்கிரமாக வந்துவிடுமோ என்ற பதற்ற மனநிலை போன்றவை மன ரீதியான காரணங்கள். செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்னர், உணர்ச்சிகளைத் தூண்டும்விதமான விளையாட்டுகளில் ஈடுபடுவதை (Sex Foreplay) ஆண்கள் செய்வதில்லை, பலருக்குத் தெரிவதுமில்லை. ஃபோர்ப்ளேயில் ஈடுபட்டால் பெண்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அவர்களுக்கு இன்பம் கிடைக்க வழி கிடைக்கும். ஆண்களுக்கு விந்து சீக்கிரத்தில் வெளியேறும் பிரச்னையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

உடல் பிரச்னைகளுக்கான சோதனைகளைச் செய்து, அதற்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம். மனரீதியான பிரச்னைகளுக்கு செக்ஸ் தெரபி (Sex Therapy), நடத்தை தெரபி (Behavioural Therapy) போன்ற சிகிச்சைகள் உதவுகின்றன. இந்தப் பிரச்னைக்காக மருந்துக்கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மருத்துவரின் பரிந்துரைப்படிதான் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- மு.இளவரசன்