மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11

ஹெல்த்

ந்தேகம்... புதிதாகத் திருமணமானவர்களுக்கு அதிகம் ஏற்படும். குறிப்பாக, தாம்பத்ய உறவில்! எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் தீராத, திரும்பத் திரும்ப எழுகிற சந்தேகங்கள் அவை.

புதிதாகத் திருமணமான ஓர் இளம்ஜோடி என்னிடம் வந்தார்கள். அந்த ஆண் `எங்களுக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் ஆகின்றன. மனைவி கர்ப்பமாகிவிட்டாள். `இனிமேல் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்கிறார்கள் வீட்டிலிருக்கும் பெரியவர்கள். உண்மையா டாக்டர்?’ என்று கேட்டார். நான் விளக்கம் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தேன். இது தொடர்பாக இரண்டு சந்தேகங்கள் எல்லோருக்குமே ஏற்படும். ஒன்று, கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, கூடாதா? இரண்டாவது, பிரசவத்துக்குப் பிறகு எத்தனை நாள்கள் கழித்து செக்ஸில் ஈடுபடலாம்? ஆனால், இது குறித்துக் கேட்கக் கூச்சப்படுகிறார்கள். மருத்துவர்களும், சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11

இதற்குப் பெண்ணின் உடல் ஆரோக்கியம் கர்ப்பத்தின்போது எப்படி இருந்தது என்பதைப் பரிசோதித்தால்தான் தெரியவரும். பொதுவாகவே, ஒன்பதாவது மாதம் வரை செக்ஸ்

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11

வைத்துக்கொள்ளலாம். ஆணின் உடல் எடை கர்ப்பமான பெண்ணின் வயிற்றை அழுத்தாதபடிக் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், இருவரும் பிறப்புறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வேகமாகவோ, கடுமையாகவோ உறவில் ஈடுபடக் கூடாது.  அதேபோல ஏற்கெனவே குறைமாதத்தில் குழந்தை பிரசவித்திருக்கும் பெண்கள் மீண்டும் கருவுற்றால், கர்ப்பப்பை வாய் (Cervix Dilated) கிழிந்திருந்தால், சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்திலும் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு ஏற்படும்; அவர்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால், கர்ப்பப்பையில் குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் கொடுக்கும் `நஞ்சுக்கொடி’ (Plecenta), கர்ப்பப்பையின் வாய் பகுதியில் அமைந்திருந்தால் (Placenta Previa) உறவுகொள்ளக் கூடாது. இதையெல்லாம் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 11

சுகப்பிரசவமாக இருந்தால் மூன்று வாரங்கள் கழித்து உறவுகொள்ளலாம். அதுவும் பெண்ணின் உடல்நிலையைப் பொறுத்தது. பிரசவத்தின்போது பிறப்புறுப்புக்கும் ஆசனவாய்க்கும் நடுவில் இருக்கும் பகுதி கிழிந்து (Episiotomy), தைக்கப்பட்டிருந்தால், அது முழுமையாகக் குணமாகும்வரை உறவில் ஈடுபடக் கூடாது.  சிசேரியன் பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்து 6 வாரங்கள் கழித்தே உறவுகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பிறகு, சில பெண்களுக்கு உடலுறவின்போது பிறப்புறுப்பில் சுரக்கும் திரவம் நின்றுவிடும். இதன் காரணமாக, செக்ஸில் ஈடுபடும்போது எரிச்சல், வலி ஏற்படும். இதைத் தவிர்க்க, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தகங்களில் விற்கப்படும் எண்ணெய் போன்ற ஜெல்களைப் பயன்படுத்துவது நல்லது. கர்ப்பமாக இருப்பது செக்ஸ் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை அல்ல. இதைப் புரிந்துகொள்வோம்; இல்லறத்தில் சந்தோஷம் காண்போம்.

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

தொகுப்பு: மு.இளவரசன்