ஹெல்த்
Published:Updated:

நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை

நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை
பிரீமியம் ஸ்டோரி
News
நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை

அம்பிகா சேகர், ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

மையலில் பிரியாணி இலையை வெறும் நறுமணத்துக்காகச் சேர்க்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை

* பிரியாணி இலையில் உள்ள காஃபிக் அமிலம் (Caffeic Acid), க்யூயர்சிடின் (Quercetin) மற்றும் யூஜினால்  (Eugenol) போன்றவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடைசெய்துப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

* பிரியாணி இலை டைப் 2 சர்க்கரை நோய்க்கு நல்லது. இது ரத்தச் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கும். சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகக் கற்களைப் போக்கும்.

நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை

* பிரியாணி இலையில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளேவனாய்டுகள், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. ஆன்டி - பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மைகளும் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்புத் திறன் தரும் பிரியாணி இலை


* டீயுடன் பிரியாணி இலையைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்கப் பிரச்னைகள் குணமாகும். செரிமானப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

* பிரியாணி இலையை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி, அந்நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயங்கள் குறையும். நிம்மதியான தூக்கம் வரும்.

* பிரியாணி இலையில் இருந்து தயாரிக்கும் எண்ணெய் பல்வேறுவிதமான மூட்டு வலிகளுக்கு மருந்து.