ஹெல்த்
Published:Updated:

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது
பிரீமியம் ஸ்டோரி
News
சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

வசந்தி பாபு, மனநல ஆலோசகர்ஹெல்த்

ரியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது எப்போதுமே எளிதானதல்ல. ஆனால், அதை நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும். பிஸியான வேலை, வீட்டுச்சூழல் காரணமாக நம்முடைய முக்கியமான நோக்கங்கள்கூட சில நேரங்களில் நிறைவேறாமல் போகலாம். ஆனால், உடல்நலம் அப்படிப்பட்டதல்ல. நம் ஆரோக்கியத்தையும் உடல் உறுதியையும் பராமரிக்க முடியாமல் போவதற்கு நமக்கு நாமே ஏதாவது சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். இது தவறு. அந்தச் சமாதானங்களைத் தவிர்க்கவும் ஆரோக்கியப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும் சில ஆலோசனைகள் இங்கே...

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சமாதானம்: `வேலை, வீட்டைப் பார்த்துக்கொள்வது என நான் ரொம்ப பிஸி. உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இல்லை.

ஆலோசனை: `எனக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை’ என்று சொல்வதற்குப் பதிலாக, `உடற்பயிற்சி செய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும்’ என்று சொல்லி முதலில் மனநிலையை மாற்றப் பழக வேண்டும். இதைக் காலையிலும், இரவு தூங்கப்போவதற்கு முன்பாகவும் பத்து முறை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டும் அல்லது வீட்டில் கண்களில் படுகிற மாதிரி ஏதாவது ஓரிடத்தில் எழுதியும் வைக்கலாம்.  இது உங்களுக்கு ஊக்கமளிக்கும். ஆரம்பத்தில் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அதற்குப் பதிலாக உங்கள் தினசரி நடவடிக்கைகளையே உடற்பயிற்சியாக மாற்றலாம். லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். வேலை முடிந்த பிறகு நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யுமிடத்துக்குப் போகலாம். இரவு உணவுக்கு முன்பாகக் குடும்பத்தோடு சிறு நடை நடந்துவிட்டு வரலாம். இவையெல்லாம் உங்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும்; மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சமாதானம்: `என்னால் மதுப்பழக்கத்தை விட முடியவில்லை. மன அழுத்தத்தோடு கழிந்த ஒரு தினத்திலிருந்து என்னைப் பிரித்தெடுக்க மது எனக்கு உதவுகிறது.’

ஆலோசனை: மன அழுத்தத்தைக் குறைக்கத் தினமும் இரவு மது அருந்துவது போன்ற மோசமன பழக்கத்தில் விழுவது எளிது. மற்ற பழக்கங்கள் போலவே இதையும் மாற்றிவிடலாம். ஆனால், அதற்கு விருப்பமும் மன உறுதியும் தேவை. முதலில், மன அழுத்தம், இறுக்கம், பயம் என எந்த மனநிலையில் இருக்கும்போது குடிப்பதற்கான விருப்பம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். மது அருந்தும் வேட்கை வரும்போது, `இப்போது இது எனக்குத் தேவைதானா?’ என்று உங்களுக்கு நீங்களே நேர்மையாகக் கேட்டுக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நண்பர்களுடன், குடும்பத்தாருடன் பேசலாம்; குழந்தைகளுடன் விளையாடலாம்; நிதானமாக ஒரு குளியல் போடலாம். இந்த மாற்றுவழிகளை 30 நாள்கள் பின்பற்றினாலே போதும், இந்தப் பழக்கத்தை விட்டுவிடலாம்.

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சமாதானம்: `காலையில் ஒரு கப் காபி குடித்தால்தான், எனக்கு உற்சாகமாக இருக்கும். இந்தப் பழக்கத்தை என்னால் விடவே முடியவில்லை.’

ஆலோசனை: காலை எழுந்தவுடன் அதிகம் சர்க்கரை சேர்க்காத காபி குடிப்பது புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும்தான். காபியிலிருக்கும் கஃபைனைக் (Caffeine) கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்வது அறிவாற்றலை அதிகரிக்கும். ஆனால், கஃபைனை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் பதற்றம், தூக்கமின்மை, தலைவலி போன்ற எதிர் விளைவுகள் ஏற்படும். ஒரு நாளைக்கு 300 முதல் 400 மில்லிகிராம் கஃபைன் உட்கொள்ளலாம். இது சுமார் நான்கைந்து கப் காபிக்குச் சமம். குழந்தைகள், கர்ப்பிணிகள், இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் குறைவாகத்தான் கஃபைன் உட்கொள்ள வேண்டும். இதை விடுவதற்கு முயற்சி செய்பவர்கள், கஃபைன் இல்லாத மூலிகை டீ போன்றவற்றைக் குடிக்கலாம்.

சமாதானம்: `எனக்கு ஐ.பி.எஸ் (Irritable Bowel Syndrome - IBS) என்கிற கழிச்சல் பாதிப்பு இருக்கிறது, ஆனால், பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்த சங்கடமாக இருக்கிறது.’

ஆலோசனை: இரிடபுள் பவல் சிண்ட்ரோம் பிரச்னை இருப்பவர்கள் வெளியே செல்லும்போது பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்த சங்கடப்பட்டுக்கொண்டு, மலம் கழிக்க மாட்டார்கள். இப்படிச் செய்வதால் பிரச்னை மேலும் பெரிதாகும். இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால், மலம் வரும் உணர்வே இல்லாமல் போகலாம். இது மலச்சிக்கலை ஏற்படுத்தும். ஆரம்பநிலை மலச்சிக்கலைத் தீவிரப்படுத்தும். நாள்பட்ட செரிமானக் கோளாறுடன் இந்த பாதிப்பு இருந்தால் துர்நாற்றத்துடன் மலம் வெளியேறும். இதைச் சரிசெய்ய  `புரோபயாடிக்’ (Probiotic) உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் உதவும். புரோபயாடிக்கில் இருக்கும் `லேக்டோபேசிலஸ்’ (Lactobacillus) பாக்டீரியாக்களும்,   `பைஃபைடோ பாக்டீரியாக்களும்’ (Bifidobacteria) பாக்டீரியாக்களும் செரிமானக் கோளாறைச் சரி செய்துவிடுகின்றன. எனவே, புரோபயாடிக் உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினால் வெளியே செல்லும்போது பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தத் தேவையிருக்காது அல்லது சங்கடப்பட மாட்டீர்கள்.

சமாதானம்: `நான் சைவ உணவுக்கு மாற விரும்புகிறேன். ஆனால், எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை.’

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது


ஆலோசனை: `அசைவத்திலிருந்து சைவ உணவுக்கு மாறுவது கடினமான காரியம்தான். முதலில் உங்கள் உடலுக்கு என்னென்ன தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை சாதாரணமாக எந்த உணவில் கிடைக்கும் என்று அறிந்துகொள்ள வேண்டும். தினையில் உடலுக்குத் தேவையான முழுமையான புரதச்சத்து இருக்கிறது. இதில், சைவம் சாப்பிடுபவர்களுக்குத் தேவையான அமினோ அமிலங்களும் இருக்கின்றன. மாட்டுப் பால் குடிப்பதை விட்டுவிட்டு, பாதாம் பால், தேங்காய்ப் பால், ஓட்ஸ் கஞ்சி, அரிசிக் கஞ்சிகளை உட்கொள்ளலாம். தானியங்களான பீன்ஸ், கொண்டைக்கடலை, பருப்பு வகைகளை வேகவைத்துச் சாப்பிடலாம். பருப்புகள், காய்கறிகளை சூப்புகளாகவும், பாதாம் பருப்பை வறுத்தும், கொண்டைக்கடலையை வேகவைத்து கிரேவிபோலச் செய்தும் சாப்பிடலாம். காய்கறிகளிலும் அதிகமாகச் புரதச்சத்து இருக்கிறது. அவகேடோ, நிலக்கடலை, புரோகோலி ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இந்த உணவுகள் அனைத்தும், அசைவ உணவுகளுக்கு இணையான ஊட்டச்சத்துகள் கொண்டவை.

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சமாதானம்: `உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கிறேன். ஆனால், பிரியாணி, ஸ்வீட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவற்றை அதிகமாகச் சாப்பிட்டாலும், மறுநாள் தீவிரமாக உடற்பயிற்சி செய்துவிடுவேன். அது போதும், உடல் எடை கூடாது.’

ஆலோசனை: உடல் எடை குறைக்க நினைப்பவர்களாகவோ, சர்க்கரை நோயாளிகளாகவோ இருந்தால் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள், பார்ட்டி, விருந்துகளில் குறைவாகச் சாப்பிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டே செல்வார்கள். அங்கே போனதும், `நாளைக்கு உடற்பயிற்சி செய்து, இதைச் சரிகட்டிவிடலாம்’ என்று நினைத்து பிரியாணி, ஸ்வீட், அனைத்தையும் அளவுக்கு அதிகமாக ஒரு கட்டு கட்டிவிட்டுவார்கள். உணவு, டயட் விஷயத்தில் நாம் என்னதான் சரியாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அதை நம்மால் செய்ய முடிவதில்லை. இதைத் தவிர்க்க, ஒரு விருந்துக்குச் சென்றால், சாலட், சூப் என ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது எப்போதுமே பிரச்னைதான்.

- மு.இளவரசன்