ஹெல்த்
Published:Updated:

மருத்துவமனை பயம்

மருத்துவமனை பயம்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவமனை பயம்

அச்சம் தவிர்

டாக்டர் ஊசி போடுவார் என்கிற  பயத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தயங்கும் குழந்தைகளைப் பார்க்கலாம். வளர்ந்த பின் அவர்களுக்கு இந்த பயம் போய்விடும். ஆனால் நோசாகம்போபியாவால் (Nosocomephobia) பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வயதிலும் மருத்துவமனைக்குச் செல்வதில் பயமிருக்கும். அமெரிக்க அதிபராக இருந்த ரிச்சர்ட் நிக்ஸன் போன்ற பல பிரபலங்களும் இந்த போபியாவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.

மருத்துவமனை பயம்

காரணங்கள்: மருத்துவமனைக்குச் சென்றால் உயிருடன் வெளியே வர முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள், மருத்துவமனை என்றாலே இழப்பு, நோய் என்ற எண்ணம் கொண்டவர்கள், கடந்த கால எதிர்மறை நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளைக் கிருமிகளின் கூடாரங்களாகப் பார்ப்பவர்கள், மருத்துவமனையின் வாசனையை விரும்பாதவர்கள், நரம்புக் கோளாறு மற்றும் அட்ரீனல் சுரப்புப் பிரச்னைகள் உள்ளவர்கள் இவ்வகை போபியாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

மருத்துவமனை பயம்


அறிகுறிகள்: மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதோ அல்லது மருத்துவமனைகளைப் பற்றி நினைக்கும்போதோ நடுக்கம், வெறுப்பு, அதிகரிக்கப்பட்ட இதயத்துடிப்பு, விரைவான சுவாசம், அதிக வியர்வை போன்றவை.

சிகிச்சைகள்: பதற்றத்தைக் குறைக்கும் Anti Anxiety மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சுய உதவி நுட்பங்கள், பேச்சு சிகிச்சை போன்றவை பயத்தின் காரணத்தைக் கண்டறிய உதவும். ஊசியில்லா அக்குபஞ்சர் நவீன சிகிச்சை முறையின் மூலம் பயத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

- இ.நிவேதா