மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்

றுமணம்... இதற்கு செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் முக்கியப் பங்கு இருக்கிறது. செக்ஸ் ஆரோக்கியம் என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியே. ஆக, தாம்பத்ய வாழ்க்கை இனிக்க ஆண், பெண் இருவரும், தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

 கணவன், டைனிங் டேபிளில் அமர்ந்து புகைபிடித்துக் கொண்டே செய்தித்தாள்களைப் படித்துக்கொண்டிருக்கிறான். காலையிலிருந்து இது நான்காவது சிகரெட். கணவன் புகைபிடிப்பது மனைவிக்குப் பிடிக்கவில்லை. புகைபிடிப்பதை விடச்சொல்லி பல முறை கெஞ்சியிருக்கிறாள். அவனோ, `ஆஃபீஸ்ல ரொம்ப ஸ்ட்ரெஸ், அதான் பிடிக்கிறேன்’ என்று சொல்லி வாயடைக்கிறான்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15

சிகரெட் நாற்றத்தால், கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளவோ, காதல் விளையாட்டுகளில் ஈடுபடவோ, கட்டியணைத்து முத்தமிடவோ ஆசையிருந்தும் செய்ய முடியாமல் தவிக்கிறாள் அந்தப் பெண். அவனுடைய உடல், துணி, பயன்படுத்தும் பொருள்கள்... அனைத்திலும் சிகரெட் நாற்றம். இப்படி நாற்றமடித்தால் பெண்ணுக்குக் காம இச்சை எப்படி ஏற்படும்? ஆனாலும், பிடிவாதமாக அவளை முத்தமிடுகிறான். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. இது, பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்வு.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15


ஆணுறுப்பின் முன்புறத்தின் அடிப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஸ்மெக்மா (Smegma) என்ற அழுக்கு சுரந்து, படியும். குளிக்கும்போது அந்த அழுக்கை நன்றாகக் கழுவிப் போக்க வேண்டும். சரியாகச் சுத்தம் செய்யவில்லையென்றால், அது படிந்து படிந்து பாக்டீரியா வளரக் காரணமாகிவிடும்.

பெண்கள், குளிக்கும்போது பெண்ணுறுப்பின் உதடுகளைப் (Clitorous) பிரித்து, முன்பகுதி, மேல்பகுதி, சிறுநீர் வெளியேறும் பகுதிகளை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். சாதாரணக் குளியல் சோப்புகளே இதற்குப் போதுமானவை. இதற்காக சந்தைகளில் பிரத்யேகமாக விற்கப்படும் வேதிப்பொருள்களைப் (Vaginal Wash) பயன்படுத்தக் கூடாது. உள்ளாடைகளைத் தினமும் துவைத்து வெயிலில் உலரவைக்க வேண்டும். பருத்தியால் ஆன உள்ளாடைகள் பயன்படுத்தலாம். அவை வியர்வையை நன்றாக உறிஞ்சி, தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் ஆசனவாயைச் சுத்தம் செய்யும்போது மலம் பெண்ணுறுப்பில் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்டால் பாக்டீரியா, சிறுநீர்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்று பெற்றோர்தான் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 15

ஆனந்தமாக செக்ஸில் ஈடுபட, முதலில் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது நல்லது. அதை விடுவதற்குக் கொஞ்சநாள் ஆகுமென்றால், செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்னர் பல் துலக்கலாம். முடிந்தால் வாயில் மவுத் வாஷ் ஊற்றிக் கொப்பளிக்கலாம். ஏலக்காய் அல்லது பெப்பர்மின்ட் மிட்டாய்களை வாயில் போட்டு மெல்லலாம். இவையெல்லாம் வாய் நாற்றத்தைக் குறைக்க உதவும்.

வாயிலிருந்து நாற்றம் வருவதை ஹாலிடோசிஸ் (Halitosis) என்று சொல்வார்கள். தொண்டையில், பல் இடுக்குகளில் தொற்றுகள் இருந்தால், நுரையீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் இருந்தால், வாயில் நாற்றம் வீசும். தினமும் சரியாக மலம் கழிக்க வேண்டும். வாயில், உடலில் துர்நாற்றம் வீசினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும். நல்ல மருத்துவரைப் பார்த்து இந்தப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் சுத்தமாக, நறுமணத்துடன் இருந்தால் ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆர்வம் அதிகரித்து, காமம் கரைபுரண்டு ஓடும்.

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- மு.இளவரசன்