ஹெல்த்
Published:Updated:

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை

ஆ.பிரின்ஸ், சித்த மருத்துவர்ஹெல்த்

முருங்கை மரத்தின் விதைகள் மிகுந்த மருத்துவக் குணம் கொண்டவை. நரம்புக் கோளாறு முதல் தூக்கமின்மை வரை பல நோய்களுக்கு மருந்து.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை

* முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடியாக்கி 48 நாள்கள் தொடர்ந்து பாலுடன் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் நரம்புகள் பலப்படும்.  சோர்வு மறையும்; ரத்தச் சோகை நீங்கும்; எலும்புகள் பலப்படும்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை* செல்கள் சிதையாமல் பாதுகாப்பதுடன் புதிதாக செல்கள் உருவாகப் பெரிதும் துணைபுரியும்.

* முருங்கை விதை, தாம்பத்யத்தை மேம்படுத்தும். முருங்கை விதையின் உள்ளேயிருக்கும் பருப்பைத் தினமும் சாப்பிட்டு வந்தால் நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* முருங்கை விதையை அரைத்து சம அளவு கடலை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி மூட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் முருங்கை விதை

* முருங்கை விதைப் பொடியைக் காலை, மாலை இருவேளையும் மூன்று கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

* இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றுவதுடன் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் சக்தி முருங்கை விதைக்கு உண்டு. சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

- எம்.மரிய பெல்சின்