ஹெல்த்
Published:Updated:

STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்

STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்

ஃபிட்னெஸ்

``எவ்வளவு வேலை இருந்தாலும், பல் துலக்குவதையும் கழிவறைக்குப் போவதையும் எப்படி வழக்கமாக வைத்திருக்கிறோமோ... அப்படி உடற்பயிற்சி செய்வதையும் கட்டாயப் பழக்கமாகவே வைத்திருக்கிறேன். இது நடிகர் சத்யராஜ் எனக்குக் கற்றுக்கொடுத்தது’’ என்கிறார் `நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ``முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்’’ என்பவரின் உடற்பயிற்சிக் காணொளிகள் இணையத்தில் பிரபலம்! 

STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்

``தோள்பட்டை, மார்பு, கைகால் என உடலின் ஒவ்வோர் உறுப்புக்குமான பிரத்யேகப் பயிற்சிகளைப் பட்டியல் போட்டுக்கொண்டு வரிசையாக ஒவ்வொரு நாளும் செய்துவருகிறேன். இதில், வயிற்றுப் பகுதிக்கான பயிற்சியை மட்டும் தினந்தோறும் செய்துவிடுவேன்’’ என்று தனது ஃபிட்னெஸ்  ரகசியம் பேசும் சீமான், உடற்பயிற்சியின்போது ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இரண்டு மடக்கு தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கிறார். இல்லையென்றால், தசைப்பிடிப்பு வந்துவிடுமாம்!

STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்



‘‘சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராமத்தில், பள்ளிச் சிறுவனாக இருந்தபோது கபடியும் நீச்சலும்தான் பொழுதுபோக்குகள். கிராமங்களில் பெரியவர்கள் இறந்துபோனால், நீர்மாலை எடுத்துவரும்போது சிலர் சிலம்பாடிக்கொண்டு வருவார்கள். அதைப் பார்த்து ஆர்வம் வந்து சிலம்பம் கற்றுக்கொண்டேன்.

மேற்படிப்புக்காக இளையான்குடி வந்த பிறகு கைப்பந்து, கால் பந்து எனப் பயிற்சிகள் விரிவடையத் தொடங்கின. அப்போது தொலைக்காட்சியில் புருஸ் லீ  படங்களைப் பார்த்துப் பார்த்து, தற்காப்புக்கலையான கராத்தே மீது தீராக் காதல் வந்தது’’ என்கிறவருக்கு நண்பர்களோடு சேர்ந்து கைப்பந்து அல்லது இறகுப் பந்து விளையாடுவது பிடித்த விஷயம்!

STAR FITNESS: “முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்!” - சீமான் சீக்ரெட்ஸ்

‘‘உணவுப் பழக்க வழக்கத்தில், அப்பா நம்மாழ்வாருக்குப் பிறகு ஐயா சைதை துரைசாமிதான் என்னுடைய ஆரோக்கிய குரு. காலையில், அரைவேக்காட்டில் அவித்த காய்கறி உணவு அல்லது முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுவேன். இவற்றோடு புரோட்டீனுக்காக அவித்த முட்டையின் வெண் கருவும் உண்டு.

வீட்டில் இருக்கும்போது குதிரைவாலிக் கஞ்சி, தினை உப்புமா, சாமை அடை, கம்பங் கூழ் அல்லது தோசை என இவற்றில் ஏதாவதொன்று காலை உணவாக இருக்கும். மதியம், சிறுதானிய உணவோடு சிறு வெங்காயம் சேர்த்துக்கொள்வேன். இவற்றோடு கீரையும் பாகற்காயும் உண்டு. இரவில் வெறும் பழங்கள் மட்டும்தான்! வாழைப்பழம் பிரச்னையில்லை. ஆப்பிளில் மெழுகு பயம் இருப்பதால், தோலைச் சீவிவிட்டே சாப்பிடுகிறேன். திராட்சையில் பூச்சிக்கொல்லி மருந்து பயம் இருப்பதால், தண்ணீரில் நன்றாக ஊறவைத்துச் சாப்பிடுகிறேன். அத்திப்பழமும் சாப்பிடுவதுண்டு!

நாள் முழுவதும் சோர்வுறாமல் இருக்க நான்கைந்து பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்புகளோடு பேரீச்சம் பழத்தையும் அவ்வப்போது சாப்பிடுவேன். சமீபத்தில், கைதாகிச்  சிறையில் இருந்தபோதும் இதுதான் என் சாப்பாடு! ‘பதவி, புகழ், கல்வி, செல்வம்... என எத்தனையிருந்தாலும் உடல்நலமில்லாமல் இருந்தால், அத்தனையும் வீண்’ என்கிறார் சைதை துரைசாமி ஐயா. உண்மைதானே..!’’ - அர்த்தத்தோடு சிரிக்கிறார் சீமான்!

- த.கதிரவன், படம்: தி.குமரகுருபரன்