ஹெல்த்
Published:Updated:

தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை

தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை
பிரீமியம் ஸ்டோரி
News
தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை

ஜீவா சேகர் இயற்கை மருத்துவர்ஹெல்த்

தூதுவேளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம், கூதளம் எனப் பல பெயர்களைக்கொண்ட மூலிகை தூதுவளை. இதன் இலை, பூ, காய், கனி, தண்டு, வேர் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை. 

தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை

தூதுவளையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டால் தும்மல், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், சளி பிரச்னைகள் தீரும். தூதுவளையில் ரசம், சூப் செய்தும் சாப்பிடலாம்.

தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை



நெஞ்சுச்சளி, இருமல் பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. ஐந்து இலைகளுடன் சின்ன வெங்காயம், கல் உப்பு சேர்த்து நசுக்கி, சாறு எடுத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் கொடுத்தால் குணம் கிடைக்கும்.

கைப்பிடி அளவு இலையை மையாக அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டுச் சாப்பிடலாம். கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தியாகவும் செய்து சாப்பிடலாம். தொண்டைவலி குணமாகும்.

தூதுவளை இலைகளை நெய்யில் வதக்கி, துவையலாக்கி வாரத்தில் இரண்டு நாள்கள் சாப்பிட்டால் வாய்வுக்கோளாறு விலகும். உடல் வலிமை பெறும்.

தூதுவளையில் கால்சியம் மிகுந்திருக்கிறது. எலும்பு, பற்களில் பிரச்னை இருந்தால் தூதுவளையுடன் பருப்பு, நெய் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

தொண்டைச்சதைக்கு மருந்தாகும் தூதுவளை

தூதுவளைப் பூக்களைப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். நெய்யில் வதக்கி, தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு தூதுவளை இலைகளுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு தலா 10 கிராம் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சவும். இந்தக் கஷாயத்தை 50 மி.லி அளவு தினம் அருந்தினால் தொண்டைச்சதை கரையும்.

தூதுவளை இலைச்சாற்றுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தீவிர ஆஸ்துமா குணமாவதுடன், அதனால் ஏற்படும் குரல் மாற்றம், பசியின்மை போன்ற பிரச்னைகளும் சரியாகும்.

- எம்.மரிய பெல்சின்