மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22

ஹெல்த்

ல்லறம் இனிமையாக அமைய தாம்பத்யம் அவசியம். ஆனால், இன்று பெரும்பாலான தம்பதிகள் மத்தியில் இல்லறத்தில் இனிமை இல்லை. காரணம், தாம்பத்யத்தில் குறைபாடு. இதனால் தம்பதியரிடையே இணக்கமில்லாத நிலை... மணமுறிவு ஏற்பட்டு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய  தீர்வு கண்டால் மகிழ்ச்சியான இல்லறத்தை மீண்டும் மீட்டெடுக்கலாம். `புகைபிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு’ என்பது  அனைவருக்கும் தெரியும். ஆனால், புகைபிடிப்பது தாம்பத்யத்தைப் பாதிக்கும் என்பது பலர் அறியாதது. இன்று பெண்களையும் புகைபிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. அது மேலும் விபரீதமானது. 

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22

அமெரிக்காவில் உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஜம்ப்ளிங் ஃப்ராங்ளிங், தான் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் புகைபிடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று பட்டியலிட்டிருக்கிறார். புகைபிடிக்கும்போது  60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிகரெட் எரிந்து, 400 வகையான விஷம் நிறைந்த ரசாயனங்கள் வெளியாகும். அவற்றில் நிகோடின், கார்பன் மோனாக்சைடு போன்றவை முக்கியமானவை. நிகோடின், சிறிய போதையை அளித்து, மீண்டும் மீண்டும் புகைபிடிக்கத் தூண்டும். நாளடைவில் அது பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். குறிப்பாக,  ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறையும். அதாவது, `மற்றவர்களைவிட புகைபிடிப்பவர்களுக்கு 26 சதவிகிதம் விரைப்புத் தன்மை குறையும்’ என்று ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக 30 முதல் 50 வயதுவரை உள்ளவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.  புகைபிடிக்கும்போது ரத்தக்குழாயில் நிகோடின் படியும். காலப்போக்கில் ரத்தக்குழாய் கெட்டியாகி,  நெகிழ்வுத் தன்மை குறைந்துவிடும். அதனால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தாம்பத்யத்தின்போது ஆண்களுக்கு ஏற்படும் விரைப்புத் தன்மைக்கு நிறைய ரத்த ஓட்டம் தேவை. அதற்கு ரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22

புகைபிடிப்பதால் ஆண்களைவிட பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்ணுறுப்பில் இயல்பாகச் சுரக்கும் திரவம் தடைபடும். அதனால் தாம்பத்யத்தின்போது நெகிழ்வுத்தன்மை குறைந்து, பெண்ணுறுப்பு சேதமடைவதுடன் எரிச்சலும் ஏற்படும். மேலும், பெண்ணுறுப்பிலுள்ள ‘கிளிட்டோரிஸ்’ பகுதிக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, உறவில் முழுமை கிடைக்காது. இது போன்ற நிலை தொடர்ந்தால், தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புகைபிடிப்பதால் தாம்பத்யக் குறைபாடு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், ‘நிகோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’ (Nicotine Replacement Therapy) என்ற சிகிச்சையளிக்க வேண்டும். விரைவில் பலன் கிடைக்கும்  அல்லது போதை மறுவாழ்வு மையத்துக்குச் சென்று (Alcoholic Anonymous Centre) உளவியல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். இதன் மூலம் மேற்கொண்டு ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 22

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

- எஸ்.ரவீந்திரன்