தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

உணவே மருந்து!

உணவே மருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
உணவே மருந்து!

உணவே மருந்து!

வாயுவை விரட்டும் பெருங்காயம்!

உணவே மருந்து!

வாயுத்தொல்லை, அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படும் நேரத்தில் கால் ஸ்பூன் பெருங்காயப் பொடியை மோரில் கலந்துகுடித்தால் ஏப்பத்துடன் வாயு வெளியேறி நிவாரணம் கிடைக்கும்.

தூக்கத்துக்கு சீரகம், வெங்காயம்

உணவே மருந்து!

சிலர் தூக்கம் வராமல் தவிப்பார்கள். அந்த நேரங்களில் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, இரவு 9 மணிக்கு முன்பு சாப்பிட்டால் நல்ல  பலன் கிடைக்கும். ‘வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்க மாட்டேன்’ என்று சொல்பவர்களாக இருந்தால், சீரகத்தை மென்மையாக வறுத்து பொடி செய்து, வாழைப்பழத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

கல்லீரலைக் காக்கும் விளாம்பழம்

உணவே மருந்து!

துபானம் குடித்து சிலருடைய கல்லீரல் கெட்டுப்போய் கிடக்கும். இதற்கு நிவாரணம், விளாம்பழத்தை நாட்டுச்சர்க்கரையோடு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதே!

நீரிழிவுக்கு மாங்கொழுந்து

உணவே மருந்து!

நீரிழிவாளர்கள், யார் எதைச் சொன்னாலும் சாப்பிட்டு விடுகிறார்கள். இவர்கள் மாவிலைக் கொழுந்தை துவரம் பருப்பு, உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டுவந்தால் நோய் கட்டுக்குள் இருக்கும்.

தாய்ப்பால் பெருக்கும் உருளை!

உணவே மருந்து!

ருளைக்கிழங்கு என்ற பெயரைக் கேட்ட துமே, ‘அது வாயுவை உண்டாக்குமே’ன்னு அலற வேண்டாம். குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாமல்  தவிக்கும் தாய்மார்கள் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால், தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து, அத்துடன் மிளகுப்பொடி, உப்பு, நெய் சேர்த்து சாப்பிடுங்கள்... எந்தப் பிரச்னையும் வராது.

மூக்குப் பிரச்னைக்கு முசுமுசுக்கை!

உணவே மருந்து!

ளிப்பிரச்னை யாருக்கு, எப்போது, எப்படி வரும் என்று தெரியாது. வேலிகளில் வளர்ந்து கிடக்கும் முசுமுசுக்கை இலையை காலையில் தோசை மாவுடன் சேர்த்துக் கலந்து சாப்பிட்டுவந்தால் மூக்குப் பிரச்னைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சத்தான முருங்கை

உணவே மருந்து!

முருங்கை மரத்தின் பலன் அதிகம். குறிப்பாக, முருங்கையிலை மிகவும் சத்தானது. நன்கு வளர்ந்த முருங்கையிலைகளை உருவி, சுத்தம்செய்து, வெயிலில் உலரவைத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். எந்தவித பொடி செய்யும்போதும் (கறிவேப்பிலைப்பொடி, பருப்புப்பொடி போன்றவை) இந்த முருங்கைப்பொடி சிறிது கலந்துவிடலாம். சாம்பார், கூட்டு வகைகளிலும் தூவலாம்.

ரத்தப்போக்கைத் தடுக்கும் வாழைப்பூ

உணவே மருந்து!

வாழைப்பூவை நசுக்கி சாறெடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவந்தால், மாதவிலக்கின்போதான அதிக ரத்தப்போக்குப் பிரச்னை சீராகும்.

இருமலைக் குறைக்கும் தக்காளி சூப்!

உணவே மருந்து!

ருமல் அதிகமாக இருக்கிறதா? ஒரு தக்காளி யைக் கையால் பிசைந்து, அத்துடன் நாலைந்து பூண்டு பற்களை நசுக்கிப்போட்டு, கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் குடித்தால் சட்டென்று இருமல் குறையும்.

அல்சரை விரட்டும் பூசணி

உணவே மருந்து!

ல்சர் வந்து அவதிப்படுகிறவர்கள் கல்யாணி பூசணியை ஜூஸாக்கி அதில் வெல்லம், சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் குணமாகும்.

நெஞ்செரிச்சலை தீர்க்கும் பாதாம்

உணவே மருந்து!

நெஞ்செரிச்சல் ஏற்படும்போது நான்கு பாதாம் பருப்புகளை நன்றாக மென்று விழுங்கில் உடனடி பலன் நிச்சயம்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் கீரை

உணவே மருந்து!

ணத்தக்காளிக் கீரை அல்லது அகத்திக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் 10 உரித்துப் போட்டு வதக்கி, அரிசி களைந்த திக்கான தண்ணீர்விட்டு வேகவைத்து கால் கப் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கி சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.