Published:Updated:

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!
News
கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

வெள்ளைக்கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.

Published:Updated:

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

வெள்ளைக்கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!
News
கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எல்லோரும் வெயிலுக்கு இதமாக ஜில்லென்ற ஏதோ ஒரு பானத்தை தேடிச் செல்கிறோம். அதில் பெரும்பாலான மக்களின் சாய்ஸாக கரும்புச்சாறு உள்ளது. குறைந்த விலையில் சட்டென்று தாகத்தைத் தணித்து நம்மைப் புத்துணர்வு அடையச் செய்யும் கரும்புச்சாறு, கலர் கலராக விற்கும் குளிர்பான பாட்டில்களை விடப் பல மடங்கு ஆரோக்கியமானது எனினும் கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? குழந்தைகளுக்குக் கரும்புச்சாறு வாங்கிக் கொடுப்பது ஆரோக்கியமானதா? ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும்? என்பது போன்ற நம்முடைய இயல்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கார்த்திக் - சித்த மருத்துவர்:

ஆயுர்வேதத்தை பொறுத்தவரை கரும்புச்சாறு மற்றும் செங்கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைகள் மருந்துகளாகப் பயன்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆரம்பக் காலங்களில் கரும்புச்சாறு எடுக்க செங்கரும்புகளைத்தான் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் வெள்ளைக் கரும்புகள் புழக்கத்திற்கு வந்தன. செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் எனினும் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

பொதுவாகக் கரும்புச்சாறு எல்லா சீஸனிலும் எளிதாகக் கிடைக்கும் என்றாலும், வெயில் நேரத்தில் கரும்புச்சாறு குடிப்பது மிகவும் ஆரோக்கிமானது. வெயில் நேரத்தில் அதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க முடியும். மேலும் வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.

கரும்புச்சாறு என்றவுடன் அதனுடைய ஜில் தன்மைதான் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் கரும்புச்சாற்றுடன் ஐஸ் கலந்து குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். கரும்புச்சாற்றில் ஐஸ் கலந்து குடிப்பதன் மூலம் கருப்புச்சாறு அதன் இயற்கை நன்மைகளை இழந்து, நம் உடலில் எதிர்வினையாற்றி கபம், சளி, தும்மல் போன்றவற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான கரும்புச்சாறு கடைகளில், கரும்பு அரைக்கும் மிஷினிலே கரும்புடன் சேர்த்து எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொடுப்பார்கள். இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் கிடைக்கும்.

உடல் சூடு காரணமாக சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்சி தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது ஆரோக்கியமானது.

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் தினமும் 150 மில்லி கிராமிலிருந்து 200 மில்லி கிராம் வரை எடுத்துக்கொள்வது போதுமானது. குழந்தைகள் எனில் 80 மில்லி கிராம் வரை கொடுக்கலாம்.

அதிகப்படியான அளவில் கருப்புச் சாற்றினைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பேதி, குமட்டல், வயிற்றுவலி போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரும்புச்சாறு கொடுப்பதை தவிர்க்கலாம்.

கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது நல்லது.

கரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு பருகலாம்.

கரும்புச்சாற்றினை வாங்கிய மூன்று மணி நேரத்திற்குள் பருகிவிட வேண்டும். அதனால் பாட்டில்களிலோ, பாக்கெட்டுகளிலோ விற்கும் கரும்புச்சாற்றினை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

குழந்தைகள் மற்றும் பொது நலன் மருத்துவர் பிரேம் குமார்:

கரும்புச்சாற்றில் அளவுக்கு அதிகமாக கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்துகள் இருப்பதால் வாரம் இரு முறை குழந்தைகளுக்கு கரும்புச்சாற்றினை வாங்கிக்கொடுக்கலாம். இது குழந்தைகளின் எலும்புகளை உறுதிப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் பணிகளைச் செய்வதோடு எப்போதும் எனர்ஜியாகவும் வைத்திருக்கும்.

கரும்புச்சாற்றில் உள்ள 'லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்' உடலில் சீராக ரத்தத்தின் அளவை அதிகரிக்கச்செய்வதால் சர்க்கரை நோயாளிகள் கூட பருகலாம். எனினும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? - மருத்துவ விளக்கம்!

சில இடங்களில் கரும்புச்சாற்றில் அளவை அதிகரிக்க சாக்ரீன் பவுடர்கள் கலக்கிறார்கள். சாக்ரீன் கலந்த கரும்புச்சாற்றினைப் பருகும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம்.

கரும்பு பிழியும் இயந்திரங்கள் சுத்தமின்மை, சுத்தமில்லாத ஐஸ், ரோடுகளில் உள்ள தூசிகள் இவையெல்லாம் உடல் நலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.