Published:Updated:

குட் நைட்!

பெண்ணுக்கு தெரியாத பெண்ணுறுப்பு ரகசியங்கள்!

குட் நைட்!
##~##

பெண்கள் தங்களின் பிறப்பு உறுப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். உள்ளுக்குள் இருக்கும் பகுதிகள், கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு வெளியில் இருக்கும் பகுதிகள்  என்று பெண்ணின் பிறப்பு உறுப்பை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 

பெண்ணுடைய பிறப்பு உறுப்பின் உள் இருக்கும் பகுதிகளில் முக்கியமானவை நான்கு. அவை... ஓவரீஸ் எனும் கருமுட்டைப் பை, ஃபெலோப்பியன் குழாய், கருப்பை, வெஜினா எனும் பிறப்பு உறுப்பின் பாதை.

இந்த நான்கு பகுதிகளும் கருமுட்டைப் பைகளில் கருமுட்டைகளை முதிர்வடையும் வரை பாதுகாக்கும். அத்துடன் கரு உருவான பிறகு, கருப்பையில் அதைத் தாங்கிப் பாதுகாக்கும். மேலும்,

குட் நைட்!

ஃபெலோப்பியன் குழாய்களையும் வெஜினாவையும் ஆரோக்கியமான செயல்பாட்டில் வைத்திருப்பதும் இந்தப் பகுதிகள்தான்.

ஃபெலோப்பியன் குழாய் என்பது முதிர்ச்சியான கருமுட்டையைக் கர்ப்பப்பைக்குள் கொண்டுவந்து சேர்க்கும் பாதை.

பாலுறவின்போது ஈடுபாட்டை உருவாக்குவதோடு, ஆணின் உயிரணுக்களைப் பெண்ணின் கருப்பைக்குள் கொண்டுசெல்வதும் குழந்தைப் பிறப்புக்கு வாசலாக இருப்பதும் வெஜினாவின் பணி.

இந்த வாரம் மருத்துவ மாணவர்களுக்குப் போதிப்பதுபோல 'டெக்னிக்கல் தூக்கலாகப் பேச ஆரம்பித்துவிட்டாரே டாக்டர்’ என்று நினைக்க வேண்டாம். பல பிரச்னைகளையும் வழிமுறைகளையும் பின்னால் நாம் தெரிந்துகொள்வதற்கு, பெண்ணின் பிறப்பு உறுப்பைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

அடுத்து, கருப்பை பற்றி பார்ப்போம். கருப்பை மூன்று அடுக்குகளைக்கொண்டு இருக்கும்.

1 என்டோமெட்ரியம் அடுக்கு: கருவான முட்டை இதன் மீதுதான் வந்து ஒட்டி இருக்கும். இதன் மூலம்தான் கருவுக்கு உணவும் ஆக்சிஜனும் கிடைக்கும். 40 வாரங்கள் இந்த என்டோமெட்ரியம் அடுக்கில் கரு இருக்கும்.

2 மயோமெட்ரியம் அடுக்கு: வயிற்றில் குழந்தை நன்கு வளர்ந்த பிறகு கருப்பையை அழுத்தி குழந்தை வெளிவர இந்தப் பகுதிதான் வசதி செய்துதரும்.

3 எக்டோமெட்ரியம் அடுக்கு: பெண்ணின் பாலியல் செயல்பாடுகளுக்கான முக்கியமான சுரப்பி என்றால், அது கருமுட்டைப் பைதான். இதன் வேலை, கருமுட்டைகளை உருவாக்குவது, ஈஸ்ட்ரோஜன் புரொஜெஸ்டீரோன் ஹார்மோன்களைத் தயார் செய்வது. ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே கருமுட்டைப் பையில் கிட்டத்தட்ட 10 லட்சம் பக்குவம் பெறாத முட்டைகள்(Follicle)  இருக்கும்.

குட் நைட்!

இந்த 10 லட்சம் கருமுட்டைகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் முட்டைகள்தான் முதிர்ச்சி அடைவதற்கான தகுதியைப் பெறும். இவற்றில் ஒரு பெண் பூப்பெய்திய காலம் முதல் மாதவிலக்கு நிற்கும் வரையிலான காலம் வரை, சுமார் 200 முட்டைகள் முதிர்ச்சி அடைகின்றன.

கருப்பை பேரிக்காய் அளவுதான் இருக்கும். கருப்பையின் அடிப்பகுதிக்கு செர்விக்ஸ் (cervix)  என்று பெயர். வெஜினாவிலும் இந்த செர்விக்ஸிலும் சில திரவங்கள் தயாராகும். இதனால்தான் அந்தப் பகுதி எப்போதும் ஈரப்பதத்துடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. வெஜினாவின் ஆரம்பத்தில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். தவறிப் போய் கிருமிகள் நுழைந்தால், அதைத் தடுத்து வெளியேற்றத்தான் இந்த அமிலத் தன்மையை இயற்கை வெஜினாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்ணின் பிறப்பு உறுப்பின் வெளிப் பகுதிகள் வல்வா (Vulva) எனப்படும். இவற்றில் வெஜினாவின் நுழைவு வழி, வெஜினாவின் உதடுகள், பார்த்தோலின் கிளாண்ட்ஸ், யோனிமலர் எனும் கிளிட்டோரிஸ் போன்ற பகுதிகள் அடங்கும்.

வெஜினாவின் நுழைவாயிலின் உள்ளே கன்னித்திரை (Hymen) இருக்கும். வெஜினாவின் அடிப்பகுதிக்கும் ஆசனவாய்க்கும் இடையில் இருக்கும் பகுதிக்கு பெரினியம் என்று பெயர். பார்த்தோலின் சுரப்பியில் இருந்து சுரக்கும் திரவங்கள் வெஜினாவின் உதடுகளை ஈரப்படுத்தி உராய்வுத்தன்மை இல்லாமல் பாதுகாக்கும். கிளிட்டோரிஸ் என்பது ஆண் உறுப்புக்கு இணையானது ஆகும். பெண்கள் குறித்து சொல்ல வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம் உண்டு.

- இடைவேளை