Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

'வயாகரா’ என்றாலே, சிலர் மனதுக்குள் நயாகரா பொழியும். காரணம், விறைப்புத்தன்மையில் நிலவும் பிரச்னைகள். விறைப்புத்தன்மைக் குறைபாட்டுக்கு உடல்ரீதியான காரணங்கள் என்றால், அதற்கேற்ற முறையில் சிகிச்சை தர வேண்டும். உதாரணமாக, ஆணின் ஆண் பாலின ஹார்மோன் ஆன டெஸ்டோஸ்டீரோன் குறைவாக இருப்பதன் காரணமாக ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல் இருந்தது என்றால் - இதனைச் சரிசெய்ய டெஸ்டோஸ்டீரோன் மாத்திரை, டெஸ்டோஸ்டீரோன் ஊசி,  டெஸ்டோஸ்டீரோன் ஜெல், டெஸ்டோஸ்டீரான் பாச் (patch) எனப்படுகிற பேண்ட் எய்டு மாதிரி உள்ள ஸ்ட்ரிப் போன்றவற்றில் எது தேவையோ அதனை மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். ஒருவேளை இரும்புச் சத்துக் குறைவு காரணமாக ஆணுறுப்பு எழுச்சி அடையவில்லை எனில், மாத்திரை அல்லது ஊசி, அல்லது சிரப் மூலமாகவோ இரும்புச் சத்து எடுத்துக்கொள்ள வலியுறுத்துவார்கள். சிலர் மனரீதியான தயக்கங்களாலேயே விறைப்புத்தன்மை சிக்கலுக்கு ஆளாகுவார்கள். மனத்தயக்கம் விலகினாலே, இவர்கள் தைரியமாக நிமிர்ந்து நிற்கலாம்.

குட் நைட்

நவீன செக்ஸாலஜி மருத்துவத்தில் 1998-ம் ஆண்டில் ஒரு புரட்சிகரமான மருந்துக் கண்டுபிடிப்புதான் வயாகரா. உலகின் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆணுறுப்பு விறைப்புத்தன்மைக்கான, பாதுகாப்பான, விரைவாக செயல்படக்கூடிய மருந்து இது. வயாகராவின் ரசாயனப் பெயர்: சில்டெனாஃபில் சிட்ரேட் (Sildenafil citrate). . 30-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வயாகராவை வெவ்வேறு பெயர்களில் தயாரித்து விற்பனை செய்கின்றன.

ஆணுறுப்பானது செக்ஸுவல் தூண்டுதல் பெற்று, உணர்ச்சிவசப்பட்ட உடன், ஆணுறுப்பின் சதைப் பகுதியில் நைட்ரிக் ஆக்ஸைடு என்கிற ரசாயனம் உற்பத்தியாகும். இது வேறு சில வேதிப்பொருட்களுடன் வினைபுரிந்து ஆணுறுப்பின் ரத்தக் குழாய்களை விரிவடைய வைத்து, அதிக அளவு ரத்தத்தை ஆணுறுப்பின் உள்ளே வரவைக்கும். இதனால் விறைப்புத்தன்மை உண்டாகி, ஆணுறுப்பு எழுச்சியுடன் இருக்கும்.

குட் நைட்

இயற்கை எப்போதும் நல்லது, கெட்டது இரண்டையுமே மாற்றி மாற்றித் தருவதுபோல, நீண்ட நேரம் இப்படியே விறைப்புத்தன்மையுடன் ஆணுறுப்பு இருந்தால் இயல்பானதாக இருக்காது என்பதால், இயற்கை பிடிடி-5 என்கிற (Phospho Diesterasetype-5)  ரசாயனத்தை உற்பத்திசெய்து ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையைக் கொஞ்சம் நேரம் கழித்து மட்டுப்படுத்தி, இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்யும். பிடிடி-5ன் வேலையைத் தாமதப்படுத்தி, நீண்ட நேர உடல் உறவைத் தருகிற வேலைக்குத்தான் சில்டெனாஃபில் சிட்ரேட் மருந்து தரப்படுகிறது. இதுதான் வயாகராவின் வெற்றி ரகசியம்.

எனவேதான், வயாகரா என்கிற பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதற்குப் பதில் PDE-5  inhibitors என்று அழைக்கப்படுகிறது. நவீன செக்ஸுவல் மருத்துவத்தில் சில்டெனாஃபில் சிட்ரேட் ரசாயனத்தைப்போல வேலை செய்யக்கூடிய, ஆணுறுப்பு விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் வேறு சில ரசாயன மருந்துங்களும் உள்ளன. இவை எல்லாமே PDE-5 inhibitors  என்கிற பொதுப் பெயரால்தான் அழைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் மிக முக்கியமானது. யாருக்கு என்ன மருந்து என்பதை மருத்துவர்தான் முடிவு செய்வார்.

மிகமிக முக்கியமாக இதய நோய் இருந்து, அதற்குரிய மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளவே கூடாது. உயிரோடு விளையாடும் அபாயம் அது. கண்ணின் ரெட்டினாவில் குறைபாடு உள்ளவர்களும் கண்டிப்பாக இத்தகைய மருந்தைப் பயன்படுத்தவே கூடாது. அதிக சுகத்துக்கு ஆசைப்பட்டுப் பார்வையைப் பறிகொடுக்கும் துயரத்துக்கு ஆளாகிவிடக் கூடாது. உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்து சாப்பிடுபவர்களும் இந்த மருந்தை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவை எல்லாம் இப்போது வந்துள்ள நவீன மருந்துகள். ஆனால், இந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஆணுறுப்பில் ஊசி போட்டு விறைப்புத்தன்மையை உண்டாக்க சில ரசாயனங்களைப் பயன்படுத்தினார்கள். இந்த ஊசி மருந்தினைப் பயன்படுத்திய 100 பேரில் ஐந்து பேருக்கு எழுச்சி அடைந்த ஆணுறுப்பு இயல்பு நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் ஆனது. இதனால், ஆணுறுப்பில் மிகுந்த வலி ஏற்படும். இந்த நிலைக்கு 'பிரியாபிஸம்’(priapism) என்று பெயர். (என்னங்க... மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் வயாகரா குறித்த ஜோக் நினைவுக்கு வருதா?) இந்த ஊசி மருந்தைப் பரவலாக எந்த மருத்துவர்களும் தற்போது பயன்படுத்துவது இல்லை.

மற்றபடி ஆணுறுப்பு விறைப்புக்கு வேறு சிகிச்சைகள் ஏதுமே இல்லையா? இருக்கிறது...

- இடைவேளை...