Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04
##~##

ற்றைச் செல்லாக இருந்த கரு மிக வேகமாக முழு உருவம் எடுத்து வளரும் காலம் முதல் மூன்று மாதங்கள். குழந்தை உருப்பெறும் இந்த முக்கியமான நாட்களில் அதற்கு எவ்வித இடையூறும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். குழந்தையின் ஒவ்வோர் உறுப்பும் இந்தக் காலக்கட்டத்தில்தான் உருவாகிறது. அதனால்தான் தேவையற்ற மாத்திரைகளைச் சாப்பிடுவதை இந்தக் காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், வலிப்பு நோய், தைராய்டு போன்ற பாதிப்பு இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவராக இருந்தால், முதற்கட்டப் பரிசோதனையின்போதே மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். அதற்கு ஏற்றபடி அவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார். மேலும் இந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த அவசியமான பரிசோதனைகளைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

ஸ்கேன்

ஆறு அல்லது ஏழு வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு ஸ்கேனில் தெரிய ஆரம்பிக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி (இர்ரெகுலர் பீரியட்ஸ்), அடிவயிற்றில் வலியுடன் கூடிய ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கட்டாயம் டாக்டரின் பரிந்துரைப்படி ஸ்கேன் எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனைப் பயன்படுத்தி கீழ்கண்டவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04
கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

 கருப்பைக்கு உள்ளே அல்லது வெளியே குழந்தை வளர்கிறதா என்பது இந்த  ஸ்கேனில் தெரிய வரும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

 கர்ப்பத்தில் இருப்பது ஒரு குழந்தையா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாகி இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

 அந்த வாரத்துக்கு உண்டான சரியான வளர்ச்சி இருக்கிறதா? குழந்தைக்கு இதயத்துடிப்பு

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 04

சரியானபடி இருக்கிறதா?  குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா, இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்பதெல்லாம் பரிசோதிக்கப்படும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி, முதுகுத்தண்டு வளர்ச்சி, மற்றும் நரம்பு மண்டலம் சரியாக உருவாகி இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க, மூன்றாவது மாதத்தில் ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். இதில் குழந்தையின் மண்டை ஓடு, இதயம், கை கால்கள், வயிற்றுப் பகுதிகள் எல்லாம் முழுமையான வளர்ச்சியில் இருக்கிறதா என்பது பரிசோதிக்கப்படும். இதில் ஏதாவது ஒரு குறைபாடு இருந்தாலும், அல்லது வருவதற்கான வாய்ப்பு தெரியவந்தாலும், தீவிரப் பரிசோதனைக்குப் பரிந்துரைப்போம்.

மார்க்கர்ஸ்

பின்னால் வரக்கூடிய பிரச்னைகளை முன்னரே கண்டறிவதை 'மார்க்கர்ஸ்’ என்கிறோம். இதனை அறிந்துகொள்ள, குழந்தையின் கழுத்துப் புறத்தில் சேரும் நீரின் அளவைப் பார்க்கிறோம். இவை தவிர, குழந்தையின் மூக்கு எலும்பு (Nasal Bone)  உருவாகி இருக்கிறதா, இல்லையா என்பதைப் பார்க்கிறோம். அடுத்து டாப்ளர் முறையில் இதயத்தில் ரத்த ஓட்டத்தில் எதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதையும் பார்ப்போம். இவை ஸ்கேனில் தெரியக்கூடிய பிரச்னைகள். இதனுடன் தாயின் ரத்தத்தில் சில பயோகெமிக்கல் மார்க்கர்ஸ்PAPP-A, Free Beta HcG போன்றவை பரிசோதிக்கப்படும்.

மரபணு பிரச்னை எதுவாக இருந்தாலும் மேற்சொன்ன இரண்டு சோதனைகளின் மூலம் கண்டறிந்து, அதன் பின் குழந்தை மரபணுக் குறைபாடுகளுடன் பிறக்கக்கூடிய எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, குறைவான சாத்தியம் எனில் எவ்விதமான மருத்துவக் கண்காணிப்பு கொடுக்கலாம் என்பதும், அதிகப்படியான சாத்தியம் இருக்கும்போது, அடுத்தக் கட்டத் தீவிரப் பரிசோதனையான (Invasive Test) CVB  (Chorion Villus Biopsy) மற்றும்  Amnio Centesis போன்றவற்றை  பரிந்துரைப்போம். அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்கள் கர்ப்பத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களைத் தரும்.

குழந்தைக்கு ஏதாவது தீவிரமான மருத்துவப் பிரச்னை இருக்கும் எனில், அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இத்தகைய சோதனைகள் மிக அவசியம். இதனால் குழந்தைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால், கர்ப்பிணிகள் பயப்படத் தேவை இல்லை.

ஆனால் கர்ப்பக் காலத்தில் எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கக் கூடாது என்பது முக்கியம். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதுபற்றி டாக்டரிடம் தெரிவிப்பது நல்லது. அவர்கள் எக்ஸ்-ரே எடுப்பதை நிறுத்தவோ, அதற்கு மாற்று நடவடிக்கையையோ மேற்கொள்வார்கள்.

கரு வளரும்...