Published:Updated:

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

கருவாய்... உருவாய்... அருள்வாய்...
பிரீமியம் ஸ்டோரி
News
கருவாய்... உருவாய்... அருள்வாய்... ( கருவாய்... உருவாய்... அருள்வாய்... )

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05
##~##

ருவுற்ற நான்காவது மாதத்தின் தொடக்கத்தில், அதாவது 13 வாரங்களில் பெண்களின் வயிறு சற்றே மேடிடத் தொடங்கும். இந்தக் காலக்கட்டத்தை இரண்டாவது ட்ரைமெஸ்டர் என்று சொல்லுவோம். வயிற்றுத்தசைகளும் தோலும், கருவின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல விரிவடையும். சில பெண்களுக்கு மார்பகம்கூடப் பெரிதாகிக் கடினமாகும். இவை பிரசவத்துக்குப் பின் குழந்தைக்குப் பாலூட்டுவதற்கான உடல் நிலை மாறுதல்கள். கர்ப்ப காலத்திலேயே அதிகத் தொல்லைகள் இல்லாத காலகட்டம் இந்த இரண்டாவது ட்ரைமெஸ்டர்தான். மசக்கை முற்றிலும் நீங்கிவிட, கர்ப்பிணிகளால் உணவைச் சுவைத்து நன்றாகச் சாப்பிட முடியும். சந்தோஷமாக இருக்க முடியும். காரணம் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நன்றாகச் சுரப்பதால், இந்த ட்ரைமெஸ்டரில் பெண்களின் முகம் தாய்மையின் பொலிவுடன் அழகுறும்.

 உணர்வும் உறவும்

தனக்குள் நடக்கும் மாறுதல்களையும், தன் குழந்தையின் அசைவுகளையும் கர்ப்பிணி நன்றாக உணர முடிவதால், சொல்லில் அடங்காத பரவச உணர்வை அடைகிறாள். இந்த நேரத்தில் மனதுக்குப் பிடித்த எல்லா விஷயங்களையும் செய்யத் தோன்றும். இந்தக் காலக்கட்டத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசையைக் கேட்பதும், நல்ல புத்தகங்களைப் படிப்பதும், நல்லெண்ணங்களுடன் இருப்பதும் அவசியம். மனதை அமைதியாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால், பிறக்கும் குழந்தையும் அதே போல இருக்கும். கருவில் இருக்கும் குழந்தை நான்கு மாதத்தில் இருந்தே, தாயின் குரலைக் கேட்க ஆரம்பித்துவிடும். எனவே, கர்ப்பிணிகள் பயம், பதட்டம் ஏதும் இன்றி அமைதியாக இருப்பது மிகவும் அவசியம்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

போதுமான அளவுக்குச் சரிவிகித ஊட்டச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். வேலைகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி ஆலோசகரிடம் கலந்துபேசி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் அதே நேரம், முடிந்த அளவுக்கு வேலைகள் செய்வதும், நடைப் பயிற்சியின் மூலம் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக்கொள்வதும் அவசியம். கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் 10 கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது. ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இயற்கையான முறையில் கர்ப்பம்தரித்த பெண்கள் பயமின்றித் தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். அடிக்கடிக் கருச்சிதைவு, செயற்கைமுறை கரு ஊட்டல் செய்த பெண்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தாம்பத்ய உறவில் ஈடுபடலாம். டாக்டர்கள் தாம்பத்ய உறவு கூடாது என்றால், பிரசவம் வரையிலும் அதைத் தவிர்ப்பதே நல்லது.

 கவனம் தேவை

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 கருவுற்ற பெண்கள் மிதமான சூடு நீரில் குளிக்க வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 குளிர்ந்த காற்று, அதிகப் பனிக் காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 நன்கு கொதிக்கவைத்து, ஆறிய தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 குளிர்பதனப் பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 அதிகக் காரம், அதிகப் புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளையே சாப்பிட வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 புயல், மழை, இடி, மின்னல் ஏற்படும்போது, வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 மூச்சுத் திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்குச் செல்வது நல்லது அல்ல.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 அதிக சத்தம் போட்டுப் பேசுவதால், வயிற்றில் உள்ள கருவுக்கு அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 இரவு நேரங்களில் அதிக வெளிச்சம் இல்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

- கரு வளரும்...

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

 தடுப்பு ஊசி + மாத்திரைகள்

டிடி தடுப்பு ஊசி இரண்டு டோஸ்களாகத் தரப்படும். நான்காவது மாதத்தில் முதல் டோஸும், அதன் பின் ஒன்றரை மாதங்கள் கழித்து இரண்டாவது டோஸும் போடப்படும். இரும்புச் சத்து மாத்திரைகள், கால்ஷியம் மாத்திரைகைகள் மற்றும் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகள் ஆகியனவற்றை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுகளைத் தவறாமல் சாப்பிடுபவர்களாக இருந்தாலும், டாக்டர்கள் பரிந்துரைக்கும் மாத்திரை, மருந்துகளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

கருவாய்... உருவாய்... அருள்வாய்... - 05

உடற்பயிற்சி + பலன்கள்

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். உடலை ஸ்ட்ரெட்ச் செய்யும்படியான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி நிபுணரையும் மகப்பேறு ஆலோசகரையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்வது நல்லது.