Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

''நீந்தும் ஆசை வந்தால், உடன் நீச்சல்தானே வரும்'' என்று ஒரு சினிமா பாடல் வரி உண்டு. ஆம், எந்த ஒரு செயலும் ஆர்வத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

 செக்ஸ் விஷயத்தில் சிலருக்கு உடம்பு ஆரோக்கியமாக இருந்தாலும் ஆர்வம் மட்டும் துளியும் இருக்காது. செக்ஸ் ஆர்வமின்மைக்கு hypoactive sexual desire என்று பெயர்.

செக்ஸ் ஆர்வம் எல்லோருக்கும் ஒரே அளவில், ஒரே மாதிரி இல்லாமல், மனிதனுக்கு மனிதர் வேறுபடும். ஆனால், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஏதோ ஒரு காலகட்டத்தில் செக்ஸ் ஆர்வம் இல்லாமலோ அல்லது குறைந்த அளவோ இருக்கலாம்.

சூழ்நிலைகள், குடும்பப் பிரச்னைகள், பொருளாதார நிலைமை, அவசரப் பணிகள் போன்ற நெருக்கடிக்கு ஒருவர் ஆளாகும்போது, அவருக்கு செக்ஸ் ஆர்வம் குறைவாக இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால், பிரச்னை தீர்ந்தவுடன், எப்போதும் போல ஆர்வ அலை அடிக்க ஆரம்பித்துவிடும்.

இப்படி இல்லாமல், தொடர்ந்து ஒருவருக்கு செக்ஸில் ஆர்வமே இல்லாமல் இருந்தால், அவர் செக்ஸாலஜிஸ்ட்டை அணுகுவது அவசியம். இந்த செக்ஸ் ஆர்வமின்மை ஆண், பெண் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

குட் நைட்

செக்ஸ் ஆர்வத்தின் தீவிரம் அவரவர் வயது, உடல் நலன் மற்றும் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். இன்றைய நவீன யுகத்தில் நேரமின்மை, அவசர வாழ்க்கை போன்றவை மக்களை வேகவேகமாக விரட்டுகின்றன. இவை எல்லாமும்கூட தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செக்ஸ் ஆர்வத்தைப் பாதிக்கின்றன.

நிரந்தரமாக ஒருவருக்கு செக்ஸ் ஆர்வமின்மைக்கான காரணங்களை உடல் ரீதியானவை, மனரீதியானவை, உடல் மற்றும் மனரீதியானவை என வகைப்படுத்தலாம்.

உடல்ரீதியான காரணங்கள்:

  மரபியல்ரீதியாக உடம்பில் குரோமோசோம் குறைபாடுகள்.

  ஹார்மோன் கோளாறுகள், ஆணின் செக்ஸ் ஹார்மோன் ஆன டெஸ்டாஸ்டீரோன் குறைவாக இருத்தல். பொதுவாக - சர்க்கரை நோய், சிறுநீரகச் செயல் இழப்பு, கல்லீரல் செயல் இழப்பு, மூளைக்கட்டி, வலிப்பு நோய், பார்கின்சன் என்கிற நரம்பு தளர்ச்சி நோய் போன்றவை ஆண்களின் செக்ஸ் ஹார்மோனைப் பாதிக்கலாம். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் - பெண்ணின் உடம்பிலும் குறைவான அளவில் டெஸ்டாஸ்டீரோன் சுரக்கும். இந்தக் குறைவான அளவில் இருக்கும் டெஸ்டாஸ்டீரோன் இல்லாதுபோனால், பெண்ணுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்துவிடும். ஆணின் உடம்பில் விதைப்பையில் உருவாகும் டெஸ்டெஸ்டீரோன் ஹார்மோன், பெண்களுக்கு அட்ரினல் சுரப்பியில் இருந்தும், கருமுட்டைப் பையில் இருந்தும் உற்பத்தியாகும்.

சில மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, அந்த மருந்துகளில் உள்ள ஸ்டீராய்டுகளின் காரணமாக செக்ஸ் ஆர்வம் குறையலாம். உதாரணமாக மன அழுத்தத்துக்கும், மனநலக் குறைபாடுக்கும் சாப்பிடுகிற மருந்துகளைக் குறிப்பிடலாம். மது, புகை போன்ற போதைப் பழக்கங்களுக்கும் செக்ஸ் ஆர்வத்தைப் பாதிக்கும் ஆற்றல் உண்டு.

மனரீதியான காரணங்கள்:

 எதிர்மறையான எண்ணங்கள்: உதாரணமாக, பிறர் மீது கோபம் அல்லது பயம்கொண்டவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு வரலாம்.

 செயல்பாட்டில் மனப்பதற்றம்: (Performance anxiety) தன்னால் முடியுமோ, முடியாதோ என மனப்பதற்றம் அடைவதுகூடக் காரணமாகலாம். எதிர்பார்த்தது கிடைக்காதபோது (Lack of Pleasure in sex) சிலருக்கு ஆர்வமின்மை ஏற்படலாம்.

 செக்ஸ் என்பதைத் தவறாக நினைத்துக்கொள்வது. ((Guilt about sex and pleasure) உதாரணத்திற்கு செக்ஸ் என்பது குழந்தைப் பிறப்புக்கானது மட்டுமே... சுகம் பெறுவதற்கானது அல்ல என்று நினைப்பதுகூட செக்ஸ் ஆர்வத்தைக் குறைத்துவிடலாம்.

 நெருங்கவிடக் கூடாது (unconcious fear of intimacy)  என்று நினைப்பது. அதாவது சிக்கல் வருமோ என்கிற பயத்திலேயே மனைவியிடம்கூட நெருக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும், கட்டாயம் செக்ஸ் ஆர்வம் இருக்கவே இருக்காது.

 உடல் மனப் பிரச்னைகள்:  எலியும் பூனையும் போல சில தம்பதிகள் (marital discord)இருப்பார்கள். இவர்களிடையேயும் செக்ஸ் ஆர்வம் இருக்காது.

இந்த செக்ஸ் ஆர்வமின்மையை எப்படிப் போக்கலாம்?

உடல்ரீதியான பிரச்னை என்றால், காரணத்துக்கு ஏற்ற சிகிச்சை தேவை. மனரீதியான காரணம் என்றால், கவுன்சிலிங், சைக்கோதெரபி, செக்ஸ்தெரபி தேவைப்படும். தம்பதிகள் எலியும் பூனையுமாக இருந்தால் (maritial discord)மேரிட்டல் தெரபி தரப்படவேண்டும்.

- இடைவேளை...