Published:Updated:

அழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்

அழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்

முக அழகைப் பிரதிபலிப்பதிலும், உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் உதட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. உச்சரிக்கும் வார்த்தைகளுக்கு ஏற்ப, உதடு அசைவதைத்தான் உன்னிப்பாய் கவனிக்கின்றனர். அனைவரையும் ஈர்க்கும் உதடுகள் அழகான சிவந்த நிறத்தில், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டாமா?

லிப்ஸ் பற்றிய டிப்ஸ் தருகிறார் தோல் மருத்துவர் ரத்னவேல்.

அழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்

பாதிப்புகள்...

உதட்டில் பூஞ்சைக் கிருமியால் நோய்த் தொற்று வரலாம். அதிக வெயில் பட்டாலும் உதடு பாதிக்கப்படும். சூடான உணவு, பானம் அருந்துகையில் உதட்டில் சூடுபட்டுத் தோல் உரியலாம். உதட்டைக் கடிப்பதன் மூலம் பாதிப்பு வரலாம். விட்டிலிகோ (vitiligo) எனும் வெள்ளைப்படையால் பிரச்னை வரலாம். நீண்ட காலம் புகைபிடிக்கும் பழக்கம், பான்பராக், பாக்கு, குட்கா

அழகாய் பூக்குதே... லிப்ஸ் டிப்ஸ்

மெல்பவர்களுக்கு, அதன் சாறு உதட்டில் படுவதால் கறுத்துப்போகலாம். உடலில் தண்ணீர் சத்து குறைவதாலும், உதடு வறண்டு,  வெடிப்பு ஏற்படலாம்.

யு கருமை / வறட்சி நீங்க...

• பாலாடை மற்றும் நெல்லிக்காய் சாறு கலந்து உதட்டில் தடவிவந்தால், கறுமை நீங்கி சிவப்பாகும்.

•  தினமும் உதட்டில் பாதாம்பால் அல்லது பாதாம் எண்ணெயைத் தடவினால், போதைப் பழக்கத்தால் ஏற்பட்ட கறுத்த உதடு கலராகும்.

•  தினமும் இரவில் மாதுளை சாற்றினைத் தடவுங்கள்.  

•   உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால், வறட்சி நீங்கி, நிறம் மாறிவிடும்.

•  வெயில், வெடிப்பிலிருந்து உதட்டைப் பாதுகாக்க நல்ல தரமான நிறுவனம் தயாரித்த லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள்.

• தினமும் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். உதடு நாளடைவில் அழகான நிறம் பெறும்.

- உமா ஷக்தி,

படம்:ரா. மூகாம்பிகை