Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!
##~##

'உடலில் தேவையற்ற நீர், உப்புகளை வெளியேற்றுவது, எலும்புக்கு ஏற்றவகையில் வைட்டமின் டி-யை மாற்றிக்கொடுப்பது எனப் பல வேலைகளைச் செய்து, நம் உடலின் துப்புறவுத் தொழிலாளியாகச் செயல்படுகிறது சிறுநீரகம். ஆனால், தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல், உணவில் உப்பு, காரம் அதிகம் சேர்த்துக்கொள்வது, ஃபாஸ்ட் புட் உணவுப் பழக்கம் என சிறுநீரகத்தைப் பாதிக்கும் பல விஷயங்களை நாம் செய்துகொண்டே இருக்கிறோம். விளைவு சிறுநீரகத்தில் கல், சிறுநீரகச் செயல் இழப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன' என்கிறார், சென்னையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர£ன ஆர்.விஜயகுமார்.

 ''நூறில் எட்டு நபர்களுக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதற்கு உணவு முறை, அதிக வெப்பமான சூழ்நிலை, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவை காரணமாகும். 92 சதவிகிதக் கற்கள் கால்சியத்தால் உருவாகிறது.

நலம், நலம் அறிய ஆவல்!

ஒருவருக்கு சிறுநீரகக் கற்கள் இருந்தால் முதுகுவலி, வாந்தி, காய்ச்சல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சில சமயம் சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவது போன்ற பிரச்னைகள் வரலாம். சிறுநீரகத்தில் உருவாகும் சிறுநீரகக் கற்களில் 80 சதவிகிதம் தானாகவே வெளியேறிவிடும்'' என்கிற டாக்டர், சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்கான சிகிச்சை முறைகளையும் விளக்குகிறார்.

''முன்பெல்லாம், சற்று பெரிய அளவில் கல் இருந்தால், விலாப்பகுதியில் திறந்து, ஓப்பன் முறையில்தான் கல் அகற்றப்பட்டது. அதன் பிறகு, எக்ஸ்ட் ராகார்போரியல் ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி(Extracorporeal Shock Wave Lithotripsy) எனப்படும் முறை அறிமுகமானது. இந்தச் சிகிச்சையின்படி, வெளியில் இருந்து லேசர் செலுத்தி கல் உடைக்கப்படும். இதன் மூலம் ஒரு செ.மீ. அளவுக்கு மேல் உள்ள கல்லை உடைக்க முடியும். தற்போது வளையக்கூடிய யு.ஆர்.எஸ். என்ற கருவியை சிறுநீர்ப் பாதை வழியே செலுத்தி சிறுநீரகக் கல்லை உடைத்து வெளியேற்றும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.  இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்டால், ஒரே நாளில் வீடும் திரும்பலாம்'' என்று நம்பிக்கை அளிக்கிறார் டாக்டர்.

டாக்டர் விகடனின் நலம், 'நலம் அறிய ஆவல்’ பகுதியில் ஜூன் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தினந்தோறும் சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீரகத்தில் கல் தோன்றுவது எப்படி? சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமா? பெரிய கல்லாக இருந்தால் அதை அகற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக பேசும் டாக்டர் விஜயகுமார்,

ஆண்களின் விந்தணுக்களுக்கு சத்து அளிக்கும் வகையில் புராஸ்டேட் சுரப்பியில் திரவம் சுரக்கிறது. வயதான ஆண்களுக்கு டெஸ்ட்டோஸ்டீரோன் அளவு மாறுபாட்டால் புராஸ்டேட் சுரப்பி வளர ஆரம்பித்து, சிறுநீர் செல்லும் பாதையைச் சுருக்கிவிடுகிறது.  இந்த  புராஸ்டேட் ஏன் வளர்கிறது? இதன் வளர்ச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது... என்பது பற்றியும் விளக்குகிறார்.

- பா.பிரவீன்குமார்

படம்: பொன்.காசிராஜன்

நலம், நலம் அறிய ஆவல்!