Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

'மற்றவர்கள் மாதிரி நான் இல்லையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை...’ என்று எப்போதும் புலம்பிக்கொண்டிருந்த ஒருவன், ஒரு ஞானகுருவைச் சந்தித்தான். அப்போது அந்த ஞானகுரு சொன்னார். 'உன் பிரச்னை - நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்பதல்ல; 'மற்றவர்களைப் போல நாம் இல்லையே என்கிற உன் நினைப்புதான் உன்னுடைய பிரச்னை’ என்றாராம். 

இதுபோலவே செக்ஸ் பிரச்னை உள்ள பலருடைய கவலை என்னவெனில், 'மற்ற தம்பதி போல தாங்களும் இல்லையே’ என்பதுதான்.

ஒரு தம்பதிக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளத் தடைகளாக உடம்பு சார்ந்த பிரச்னைகளும், மனம் சார்ந்த பிரச்னைகளும் எப்படி அமைகின்றன என்பதை இந்த இதழில் பார்ப்போம்.

குட் நைட்

உடல்:

செக்ஸுக்குத் தடைகளாக அமையும் ஆணின் உடல்ரீதியான பிரச்னைகள்.  

 ஆணுறுப்பு மிகமிகச் சிறிதாக இருப்பது.

 ஆணுறுப்பு வளைந்து இருப்பது.

குட் நைட்

 ஆணுறுப்பின் முன் தோல் விறைப்பு சமயத்தில் பின்பக்கம் செல்லாது இருப்பது.

 பிறவிக் குறைபாடு காரணமாக இடுப்பு எலும்புப் பகுதிகள் போதிய அளவு வளர்ச்சி அடையாது இருப்பது.

 முதுகுத்தண்டில் - அடிபட்டதனால் அல்லது கிருமித் தொற்று காரணமாக பிரச்னை இருப்பது.

 அதிக உடல் பருமனாக இருப்பதும் செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக இருக்கும்.

செக்ஸுக்குத் தடைகளாக அமையும் பெண்ணின் உடல் சார்ந்த பிரச்னைகள்:

 பெண்ணின் பிறப்புறுப்பில் அடைப்பு (obstruction) இருப்பது.

 பெண்ணுறுப்பில் பிறவியிலே குறைபாடு இருப்பது.

 பெண்ணின் இடுப்புப் பகுதி எலும்புகள் சரிவர வளர்ச்சி அடையாமல் இருப்பது.

குட் நைட்

 மனம்

செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக இருக்கும் ஆணின் மனரீதியான பிரச்னைகள்:

 அதீத பயத்தின் காரணமாக - உடலுறவு வைத்துக்கொண்டால் கடுமையாக வலிக்கும் என்று தவறாக நம்பிக்கைகொண்டிருப்பது.

 விறைப்புத்தன்மைப் பிரச்னைகள்.

 விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துகொள்வதன் காரணமாக மனைவி மீது ஆசையோ, ஆர்வமோ இல்லாது இருப்பது.

 'குழந்தை இப்போது வேண்டாம்’ என்று கணவன் கருதுவான். மனைவி 'இப்போது குழந்தை வேண்டும்’ என்று நெருக்கடி கொடுப்பார். இதனால் சம்பந்தப்பட்ட ஆண் செக்ஸை கூடுமானவரை தவிர்ப்பான்.

 உடலுறவு பற்றிய அறியாமைகூட சில ஆண்களின் செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக அமைந்துவிடும்.

வெஜினா டென்டேடா எனப்படும் மனப் பிரச்னை சில ஆண்களுக்கு இருக்கும். அதாவது, உடலுறவு சமயத்தில் தன்னுடைய ஆணுறுப்பை, பெண்ணுறுப்பு கடித்துவிடும் (சிறிய மீனைக் கடிக்கும் சுறாமீனைப் போல) என்கிற மனபயம் இருக்கும். இதுவும் இன்பம் பெறத் தடைபோடும்.

செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக அமையும் பெண்ணின் மனரீதியான பிரச்னைகள்:

 உடலுறவில் ஈடுபட்டால் பயங்கரமாக வலிக்கும் என்று நம்புவார்கள். உடலுறவில் ஈடுபடும்போது உடல்ரீதியில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், வலிக்குது என்று அலறுவார்கள். இது ஒரு மனப் பிரச்னைதான். இதற்கு சைக்கோஜெனிக் டிஸ்பானியா என்று பெயர்.

 உடலுறவு சமயத்தில் - வலிக்கும் என்று மனப் பதற்றத்தில் பெண்ணுறுப்பு இறுகி மூடிக்கொள்ளுதல்.

 மனதில் ஆசை இருக்கும். ஆனால், உடலுறவில் ஈடுபட்டால் உடனே குழந்தை உண்டாகிவிடும். அதனால் அழகு கெட்டுவிடும் என்று கருதி செக்ஸைத் தவிர்ப்பது.

 பணி சார்ந்த சூழல் காரணமாக வேறு வேறு தளங்களுக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவார்கள். இந்தக் குளறுபடிகளால் செக்ஸையே தவிர்ப்பார்கள்.

 வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்துகொண்டுவிட்டு, கணவனிடம் நெருக்கம் இல்லாமலே வாழ்வது.

 பிரசவ சமயத்தில் - தான் இறந்துவிடுவோமோ என்கிற பொய்யான நம்பிக்கை சில பெண்களுக்கு இருக்கும். இதனால் இவர்கள் உடலுறவையே தவிர்ப்பார்கள்.

 கர்ப்பம் ஆகாமல் இருப்பவர்களில் சிலர் ஒழுங்கான உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்கக்கூடும். இதனை பல சோதனைகளுக்குப் பிறகு தெரிந்துகொண்டு என்ன பயன்?

- இடைவேளை...