முன்னோடிகள்

##~## |
ஈதர் எனும் நிஜ மயக்க மருந்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் 'மார்ட்டன்’ என்ற மருத்துவ மேதை. அதன் பிறகும்கூட மயக்க மருத்துவம் என்பது மிகவும் சிக்கலான மருத்துவத் துறையாக இருந்தது. சிறப்புப் பயிற்சி பெற்று, தேர்வு எழுதி வெற்றி பெற்றால் மட்டுமே மயக்க மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது. 1935-ம் ஆண்டில் கடினமான இந்தப் பயிற்சியை எளிமையாக்கி,D.A. (Diploma In Anesthesiology) என்ற மயக்க மருத்துவப் பட்டயப் படிப்பை ஒரு தனித் துறையாக்கினார் சர் இவான் மெகில்.
அயர்லாந்து நாட்டில் 1888-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி பிறந்தவர் மெகில். பள்ளியில் படுசுட்டியான மெகில், அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்தவராக விளங்கினார்.
1916-ம் ஆண்டு ஈடித் என்ற மருத்துவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார் மெகில். மயக்க மருத்துவத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்து பட்டம் பெற்ற மெகிலின் சான்றிதழில் ''படிக்கும் காலத்தில் இவர் ஒருவருக்கு மயக்க மருந்து அளித்துள்ளார்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நாளில் மயக்க மருத்துவராகப் பணியாற்ற இந்தச் சான்றிதழ் மட்டுமே போதுமானதாக இருந்தது. மிகவும் அபாயகரமான மருந்துகளைப் பயிற்சி பெறாத மருத்துவர்கள் செலுத்துவதைப் பார்த்து மனம் நொந்த மெகில், மயக்க மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்வதையும், அதைப் பாதுகாப்பாகச் செலுத்துவதையும் கடமையாகக் கொண்டார்.

1919-ம் ஆண்டு காயம் அடைந்த போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் பணி நியமனம் செய்யப்பட்டார் மெகில். மயக்க மருத்துவத் துறை உருவான அடித்தளம் அந்த குவின்ஸ் மருத்துவமனைதான்.
அன்றைய காலகட்டத்தில் முகத்தின் மேல் முகமூடி ஒன்றை வைத்து, அதன்மேல் ஈதர் அல்லது குளோரோ ஃபார்ம் திரவத்தை ஊற்றி அதன் ஆவியை நோயாளி நுகரும்போது மயக்கம் அடைவதுதான் வழிமுறையாக இருந்தது. முகத்தில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு இந்த முறையில் மயக்க மருந்து செலுத்தினால், அறுவை சிகிச்சை செய்வது கடினம். எனவே, மூக்கின் வழியாக ஒரு குழாயைத் தொண்டைப் பகுதியில் வைத்து மயக்க மருந்து செலுத்தினார் மெகில். அப்போது, நோயாளியின் முகத்தில் சிகிச்சை செய்வது எளிதாக இருந்தது. ஆனால், ஆவியாகும் மயக்க மருந்து அறுவை அரங்கில் இருந்த அனைவரையும் மயக்கியது. நோயாளியும் மயக்க நிலையில் மூச்சுக் குழாய் அடைப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
தாடைப் பகுதி சேதமடைந்த ராணுவ வீரருக்கு மூச்சடைப்பு ஏற்பட்டபோது, மூக்கின் வழியாக ஒரு ரப்பர் குழாயைச் செலுத்தினார் மெகில். அது எதிர்பாராத விதமாக மூச்சுக் குழாய்க்குள் சென்று, நோயாளியின் மூச்சடைப்பும் சரியானது. இனிமேல் இப்படித்தான் மயக்க மருந்து செலுத்த வேண்டும் என்று தீர்மானித்தார் மெகில். இதுதான் உலகில் முதல் ணிஸீபீக்ஷீஷீtக்ஷீணீநீலீமீணீறீ டெக்னிக். இன்றளவும் மயக்க மருத்துவத்தில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.
1928-ம் ஆண்டில் உறுப்புகளின் மேற்பரப்பை உணர்விழக்கச் செய்து மூக்கின் வழியாக மூச்சுக்குழாயில் ரப்பர் குழாய் பொருத்துவதைச் செய்து காட்டினார் மெகில் இதன் பிறகு மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், நோயாளியின் சுவாசம் தடைபடுவது வெகுவாகக் குறைந்தது. ஆனால், நோயாளி மூச்சை வெளியில் விடும்போது குழாய் வழியாக வெளிவரும் மயக்க மருந்தை ஒரு ரப்பர் குழாயை வடிவமைத்து அதன் மூலம் காற்றைப் பாதுகாப்பாக ஒரு கருவிக்குள் செலுத்தினார். அதே கருவியின் மூலம் மயக்க மருந்து செலுத்தவும் வழிவகை செய்தார். இன்றளவும் இந்த சுவாசமுறை 'மெகில் சர்க்யூட்’ என்றே அழைக்கப்படுகிறது.
மெகில் தனது மருத்துவப் பணியில் இருந்து 1955-ல் ஓய்வுபெற்றார். தனது 84-வது வயதில் கடைசி நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த மெகில், தனது 98-வது வயதில் மரணம் அடைந்தார்.
1978 ஜூலை 9-ம் தேதி ராயல் சொசைட்டியின் மருத்துவக் கூட்டமைப்பில் மெகில் உரையாற்றியபோது, நோயாளியின் பாதுகாப்பில்தான் மயக்க மருத்துவர்களின் முழுக் கவனமும் இருக்க வேண்டும்; அறுவைசிகிச்சை நிபுணர்களின் வசதியில் அல்ல'' என்றது இன்றளவும் மயக்க மருத்துவர்கள் பின்பற்ற வேண்டிய செய்திதான்!
- திரும்பிப் பார்ப்போம்...
மெகில் வடிவமைத்த கருவிகள்
மூக்கின் வழியாக தொண்டைக்குள் செலுத்தப்படும் குழாயை மூச்சுக் குழாயில் கொண்டுசெல்வதற்காக, நேர்த்தியாக ஓர் இடுக்கியை வடிவமைத்தார்.

1923-ம் ஆண்டில் ஈதர், ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவற்றைக் கலந்து செலுத்தும் கருவியை வடிவமைத்தார்.
1927-ல் கார்பன்டை ஆக்ஸைடு செலுத்தும் கருவியை வடிவமைத்தார்.
மூச்சுக் குழாயை வாய் வழியாகப் பார்ப்பதற்கு வசதியாக Magills Lartngoscope என்ற ஒரு வளைந்த உபகரணத்தையும் வடிவமைத்தார்.