மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

பெருமாள் கோயில் போயிருந்தேன். இந்தா கோயில் தீர்த்தம்.. என்றபடியே, சங்கிலிருந்த தீர்த்தத்தை அம்மணி கையில் ஊற்றினாள் வாசம்பா...

 'துளசி தண்ணிதானே... வாசமா இருக்கு வாசம்பா’.  

''அம்மணி..., 'சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணி’ தீர்த்தத்தை, தண்ணினு சொல்லக்கூடாது.

''துளசி செடில, ஏராளமான மருத்துவ குணம் இருக்கு. ஆனா, ஆன்மிகத்துல துளசிக்கு இருக்குற மகத்துவம் எனக்குத் தெரியாதே வாசம்பா.''

''காலம்காலமா துளசி செடியை ஒரு பெண்ணா நெனைச்சு வழிபடுறது வழக்கம். துளசி மாலையை கழுத்துல போட்டுக்கிட்டா, உடம்பும், மனசும் சுத்தமாயிடும்னு என் அப்பத்தா கதை கதையா சொல்லுவாக.''

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

''துளசி செடியை, ஒரு பெண்ணா வணங்கறது நூத்துக்கு நூறு உண்மை வாசம்பா. ஒரு பெண்ணுக்குதானே பெண்ணோடப் பிரச்னை புரியும்.

துளசி இலைகூட, ஐந்து மிளகை அரைச்சு மூணு நாள் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்துல

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

பெண்ணுக்கு வர்ற வயித்துவலி சரியாகிடும்.  திருமணமாகியும் குழந்தை இல்லாம தவிக்கிற பெண்கள் துளசி இலையோட மூணு மிளகு வெச்சு அரைச்சு மாசம் மூணு நாள்னு, மூணு மாசம் சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புகள் இருக்கு.

கர்ப்பமா இருக்கிற பெண்கள், துளசி இலைகளைக் கொதிக்க வெச்சு மூலிகை தேநீராக் குடிச்சிட்டு வந்தால் பிரசவ காலம் எளிதாயிடும். அப்பப்ப, துளசி இலைகளை மென்னுட்டே இருந்தா, வலியில்லாம பிரசவம் சுலபமா முடியும்டீ.  சர்க்கரை நோயும் சரியா போயிடும். பசியைத் தூண்டும்.  நல்ல ஜீரணச் சக்தியைக் கொடுக்கும். நரம்புக் கோளாறு, வயிற்றுப் பொருமலையும் போக்கிடும். சிறுநீரகப் பிரச்னையைகூடச் சரியாக்கிடும். தெனமும் சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் கிட்டயே நெருங்கவே நெருங்காது'' - பேசியபடியே, துளசி இலையை அம்மியில் அரைச்சு அதில் எலுமிச்சைசாறை விட்டு ஜூஸாகக் கலக்கி வாசம்பாவிடம் நீட்டினாள் அம்மணி.  

'' 'வாய் கருப்பட்டி, கை கருணைக்கிழங்கு.’ 'கண் பார்த்தா... கை வேலை செய்யணும்’னு சொல்லுவாங்க... அது உன் விஷயத்துல சரியா இருக்கு அம்மணி.''

''நோயோட வர்றவங்ககிட்ட, பேச்சுக் கொடுத்தபடியே, என் அம்மாயி நிமிஷத்துல மருந்தைக் கிண்டிடுவாக.''

''கொசுத் தொல்லையைப் போக்க,  துளசியில ஏதாச்சும் வைத்தியம் இருக்கா அம்மணி?''  

''துளசியும் ஒரு கிருமிநாசினிதான். தாஜ்மஹாலைப் பாதுகாக்கறதுக்காக, அதைச் சுத்தி, 20 ஆயிரம் துளசி செடியை நட்டு வெச்சிருக்காங்களாம். துளசி மகிமை அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. துளசிச் செடியை வளர்த்தாலே போதும்டீ... கொசு மட்டுமில்ல எந்தக் கிருமி தொல்லையும் இருக்காது.  

துளசியை, எலுமிச்சைச் சாறு விட்டு மை போல அரைச்சு நம்ம தோல் மேல தடவிட்டு வந்தால், கொசுக்கடி, படை, சொரி, தேமல்னு எல்லா மறைஞ்சிடும்.

பன்றிக் காய்ச்சல்ல படுத்தப் படுக்கையாக் கிடந்த நம்ம முத்தழகுக்கு, துளசி மூலிகைச் சாறு கொடுத்து தெம்பா எழுந்திருச்சு நடமாட வெச்சதே நான்தான்.'' என்றாள் அம்மணி பெருமிதத்துடன்.    

'''ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்குமாம்.’ நீ இந்த ஊருக்கே அம்மா.உன் வைத்தியத்துலதான் ஊரே நோயில்லாம கிடக்கு.''  

'''துளசி இலைச் சாறுல இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேனை கலந்து தெனமும் ஒரு தேக்கரண்டி மூணு வேளைக்குச் சாப்பிட்டு வந்தால், மன இறுக்கம் போகும். நாள்பட்ட இருமல், தும்மல், சளியைக்கூட தூர விரட்டிடும்.''

''பெண்ணைப் பத்தி சொல்லியாச்சு... குமரியைப் பத்தி சொல்லவேண்டாமா?'' என்று அம்மணி சிரிக்க, வாசம்பா விழிக்க...

''துளசி பெண்ணுன்னா சோற்றுக் கற்றாழைதான் குமரி...'' என்றதும் இருவரும் குஷியாகக் கைகோத்து நடக்க,

அடுத்து என்ன.... கத்தாழை கண்ணாலதான்!    

- பாட்டிகள் பேசுவார்கள்...