Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

'நோ யாளிக்கு மூச்சுத்திணறலா? உடனே ஆக்சிஜன் வைக்க வேண்டும்’ என்பது அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று சாதாரணமாகப் பேசப்படும் விஷயம். உயிர்காக்கும் வாயுவாக இருப்பதால் பிராணவாயு என்று 'ஆக்சிஜன்’ அழைக்கப்படுகிறது. இந்த வாயுவைக் காற்றிலிருந்து தனியாகப் பிரித்தெடுத்து அறிமுகப்படுத்தியவர் 'யார்க்சைர்’ நகரைச் சேர்ந்த 'ஜோசப் பிரீஸ்ட்லீ’. 

1733-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஒரு துணி வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் பிரீஸ்ட்லீ. 1762-ல் மேரி வில்கின்சன் என்பவரை மணந்தார்.  

'வடக்கின் ஏதென்ஸ்’ என்று வர்ணிக்கப்படும் வாஷிங்டன் நகரில் பணிபுரிந்து உடலியல், தத்துவம் போன்ற துறைகளில் வகுப்பெடுத்த பிரீஸ்ட்லீக்கு 'பெஞ்சமின் ப்ராங்க்ளின்’, 'வாட்சன்’ போன்ற இயற்பியல் மேதைகளின் நட்பு கிடைத்தது. அதன் மூலம் இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிரீஸ்ட்லீ, 1766-ம் ஆண்டு ராயல் சொசைட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

முன்னோடிகள்

1772-ல் பார்வை, ஒளி, நிறம் போன்ற ஒளியியல் (OPTICS) சம்பந்தமாக ஆராய்ச்சி நூல் ஒன்றை வெளியிட்டார் பிரீஸ்ட்லீ. கடலில் பயணம் செய்யும் மாலுமிகளுக்கு, 'சோடா’ செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார்.  'கடல் பயணத்தின்போது வரும் நோய்களுக்கு அது மருந்தாகச் செயல்படும்’ என்று தவறாக பிரீஸ்ட்லீயால் நினைக்கப்பட்ட 'சோடா’தான், இன்றும் பெருமளவில் விற்பனையாகும் குளிர்பானங்களின் முன்னோடி (சிகிஸிஙிளிழிகிஜிணிஞி ஞிஸிமிழிரிஷி). காற்றை (சிகிஸிஙிளிழிகிஜிணிஞி) நீரில் செலுத்தி சோடா உருவாக்கலாம் என்று கையேடு வெளியிட்ட பிரீஸ்ட்லீ, அதை வர்த்தக ரீதியாகச் செயல்படுத்தவில்லை. (ஜே.ஜே.ஸ்வெப்பே என்பவர் வர்த்தகரீதியாகச் செயல்படுத்தியவர்)

'பல வகையான காற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளும், முடிவுகளும்’ (Experiments and Observations on Different kinds of Air) என்ற தலைப்பில் ஆறு தொகுதிகள் கொண்ட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார் பிரீஸ்ட்லீ. காற்றைப் பிரித்தெடுத்து ஆராய்ச்சி செய்வோர் அனைவருக்கும் இந்த நூல்தான், அஸ்திவாரம்!

தான் பிரித்தெடுத்த அனைத்து வாயுப் பொருட்களுக்கும் அன்றைக்கு நிலவி வந்த முறையில் பெயரிட்டார் பிரீஸ்ட்லீ. நைட்ரஸ் வாயு, கடல் அமில வாயு, ஹைட்ரோ குளோரிக் ஆசிட், கார வாயு, நைட்ரஸ் ஆக்சைடு, டிபிளாஜிஸ்டிகேட்டட் வாயு (DEPHLOGISTICATED AIR) ஆக்சிஜன்  போன்றவை அதில் சில. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை (PHOTO SYNTHESIS)பற்றியும் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டார். நைட்ரஸ் வாயுப் பரிசோதனை என்ற முறையை அறிமுகப்படுத்தி தண்ணீரின் தன்மையைக் கணித்தவரும் பிரீஸ்ட்லீதான். கார்பன் மோனாக்சைடு (CO) என்ற வாயுவைப் பிரித்தெடுத்தாலும் அதைத் தனியான வாயு என்று அவர் அறிமுகப்படுத்தவில்லை.

1774-ம் ஆண்டு சூரிய ஒளியை மெர்குரி ஆக்சைடில் செலுத்தி ஒரு புதிய வாயுவைக் கண்டறிந்தார். அதை 'டிபிளாஜிஸ்டிகேட்டட் வாயு’ என்று குறிப்பிட்டார். அதை முதலில் எலிக்குச் செலுத்திப் பின்னர் தனக்கும் செலுத்தி 'காற்றைவிட ஐந்து மடங்கு சுத்தம் வாய்ந்தது’ என்றும், இது சுவாசிப்பதற்கும், பொருட்கள் எரிவதற்கும் முக்கியமானது என்றும் கண்டறிந்தார். இன்றைக்கு மருத்துவ உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன். காற்றில் ஆக்சிஜன் 20.9 சதவீகிதம் (கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பாகம்) உள்ளது. அதைத் தனியாகப் பிரித்தெடுத்தால் காற்றில் உள்ள மீதி நான்கு பாகம் நீக்கப்பட்டு (ஐந்து மடங்கு) சுத்தமான வாயுவாகச் செலுத்தப்படும். காற்றில் அதன் சதவீகிதத்தை அறியாமல் ஐந்து மடங்கு சுத்தமானது என்று கண்டறிந்த பிரீஸ்ட்லீ, அறிவியல் உலகில் ஓர் அதிசயம்.

- திரும்பிப் பார்ப்போம்...

 'நட்சத்திர’ நாயகன் பிரீஸ்ட்லீ

வாரிங்டன் மற்றும் லீட்ஸ் நகரில் தலா ஒரு கல்லூரிக்கும், 1986-ல் கண்டு பிடிக்கப்பட்ட வால் நட்சத்திரத்துக்கும் 'பிரீஸ்ட்லீ’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிக்கின்சன் கல்லூரியால் வழங்கப்பட்டது. லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பரிசோதனை நிலையமும் பிரீஸ்ட்லீயின் பெயரால்தான் அழைக்கப்படுகிறது.

'மனிதகுல மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்பு’களில் சிறந்து விளங்குவோர்க்கு பிரீஸ்ட்லீ பதக்கம் வழங்கப்படுகிறது.  பிரீஸ்ட்லீயின் இயற்கைத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட ராயல் சொசைட்டி அவருக்கு 'கோப்ளி பதக்கம்’ வழங்கி கௌரவித்தது.