என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
ஸ்பெஷல் -1
Published:Updated:

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

அழகு ரகசியம் சொல்கிறார் மேக்னா ராஜ்

##~##

''நாங்கள்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங்கைப் போடுறவங்க!'' - பளீர் பல் வரிசை காட்டிச் சிரிக்கிறார் மேக்னட்... ஸாரி.... மேக்னா ராஜ்!

 'காதல் சொல்ல வந்தேன்’ மூலம் உறுத்தாத அழகில் ஈர்த்தவர், மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'ஆகஸ்ட் 15’ முடித்துவிட்டு, மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார்!  

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

''சின்ன வயசுல இருந்தே நீச்சல் ரொம்பப் பிடிக்கும். 24 மணி நேரமும் தண்ணிக்குள்ளேயே இருக்கச் சொன்னாலும் இருப்பேன். காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம். சும்மா, சூரியனுக்கு 'ஹாய்... ஹலோ’ சொல்ற நமஸ்காரம் இல்லை. அதில் 12 ஸ்டெப் பயிற்சிகளைப் பக்காவா பண்ணிட்டு ஜிம்முக்குப் போவேன். அடுத்து, அக்கடான்னு நீச்சல் குளத்தில் விழுந்தேன்னா, நீந்திக்கிட்டே இருப்பேன். எந்த டயட்டும் இல்லாம நான் சாப்பிடுற சாப்பாட்டுக்கு, ஏகப்பட்ட வெயிட் போட்டுஇருக்கணும் நான். ஆனா, செல்லத் தொந்திகூட இல்லாம என் உடம்பு சிக்குனு இருக்குன்னா, அதுக்குக் காரணம் ஸ்விம்மிங்!''- காற்றிலேயே கை களை அகல விரித்து நீச்சலடிக்கிறார் மேக்னா ராஜ்.

''யோகாவில் எல்லாவிதமான பயிற்சிகளும் ஆரம்பத்தில் பண்ணிட்டு இருந்தேன். ஆனா, நம்ம உடம்புக்குத் தேவையான உற்சாகத்தையும் ஃபிட்னெஸ் பயிற்சிகளையும் பெற சூரிய நமஸ்காரம் மட்டுமே போதும். வெளியூர் ஷூட்டிங் போறப்ப, ஜிம் தேடி அலையணும். ஆனா, சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை நல்லா கத்துக்கிட்டா, அதுக்கெல்லாம் தேவையே இல்லை. மொட்டை மாடி மிதமான வெயிலில் சூரிய நமஸ்காரம் பண்றப்ப, மனசு லேசாகிடும். காலைக் காற்று நம் உடம்பைப் பரவசமாக்கும். உடம்பை வருத்திக்கிற அளவுக்கு சூரிய நமஸ்காரம் கஷ்டமான பயிற்சி இல்லை. நோய் எதிர்ப்பு சக்திக்கான அனைத்து ஆற்றலும் நமக்கு அதிலேயே கிடைச்சிடும். நேரம் இல்லாம ஜிம், நீச்சல்கூட மிஸ் பண்ணுவேன். ஆனா, அஞ்சு மணிக்கு எழுந்து சூரிய நமஸ்காரம் பண்றதை மட்டும் மிஸ் பண்ணியதே இல்லை.

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் பேஸ்கட் பால் விளையாடுவேன். ஃப்ரெண்ட்ஸை அழைச்சுக்கிட்டு வாக் போவேன். பொதுவா, தனியாத்தான் வாக்கிங் போகணும்னு சொல்வாங்க. ஆனா, அடிக்கடி பார்க்க முடியாத ஃப்ரெண்ட்ஸோட கலகலன்னு பேசிச் சிரிச்சுக்கிட்டே, வியர்க்க வியர்க்க நடக்குறப்ப மனசும் சேர்ந்து ரீ-சார்ஜ் ஆகுது!'' எனும் மேக்னா, உணவுப் பழக்கத்துக்கு என எந்தக் கட்டுப்பாடும் வைத்துக்கொள்ளவில்லை.  

''ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட்டுட்டு இருந்தேன். நாக்கைக் கட்டுப்படுத்த முடியாத ஆள் நான். ஆனா, இப்போ கன்ட்ரோலா இருக்கேன். வீட்டுச் சாப்பாட்டுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறேன். சத்தான உணவுகளை மிதமான அளவில் மட்டும் சாப்பிடுறேன். மோர்க் குழம்பும் வெண்டைக்காய் கூட்டும் என் ஃபேவரைட். சிக்கன் சாப்பிடும்போது மட்டும் ஜிம்மில் கூடுதல் பயிற்சி எடுத்துக்குவேன்.

சாப்பாட்டுக்கும் உடல் பருமனுக்கும் சம்பந்தம் இல்லைன்னு நம்புபவள் நான். குண்டா இருக்கிற எத்தனையோ பேர் ரொம்பக் கொஞ்சமா சாப்பிடுறவங்களா இருப்பாங்க. நம்ம மேல் நம்பிக்கை இருந்தால், நம்ம உடம்பு மேல் நமக்கு அக்கறை இருந்தால், மனசுக்குப் பிடிச்ச எதையும் சாப்பிடலாம்!''- படபடக்கும் மேக்னாவிடம் முக அழகு ரகசியம் கேட்டால், வெட்கத்தில் இன்னும் சிவக்கிறார்.

''மார்க்கெட்ல எத்தனையோ க்ரீம், சோப் விற்கிறாங்க. ஆனா, நம்ம ஸ்கின்னுக்கு ஏத்த மாதிரியான பொருட்களைத்தான் பயன்படுத்தணும். இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துறது ரொம்ப நல்லது. முகத்தில் மாசு மரு இல்லாமல் இருக்க மஞ்சள் நல்ல சாய்ஸ். மேலும் பொலிவு சேர்க்க கடலை மாவை, ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் பூசிக்குவேன். ஃப்ரிஜ்ஜில் வைத்த ஆப்பிள் மாதிரி முகம் ஃப்ரெஷ் ஆகிடும்.

வெளியில் அலைஞ்சுட்டு வந்தால், முகத்தை நல்லா கழுவிட்டு, கொஞ்சம் பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து முகத்தில் தடவினால், பளிச் அழகு நிச்சயம். இது எல்லாத்தையும்விட, எப்பவும் கலகலப்பா இருக்கிறதுதான் நான் அழகா இருக்கக் காரணம்.  

உற்சாகம் தரும் சூரிய நமஸ்காரம்!

என்னோட பெரிய ப்ளஸ் செழிப்பான தலைமுடி. அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே தலைமுடி நல்லா இருக்கும். அது அப்படியே எனக்கும் கிடைச்சது. என் கேசத்துக்கு நான் தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்துவேன். ராத்திரி தூங்கும்போது நல்லா எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சுட்டுத் தூங்கிடுவேன். மறு நாள் காலையில் தலை யில் எண்ணெய்ப் பசையே இருக் காது. ஆனா, முடி பளபளன்னு இருக்கும். இப்படி வாரத்தில் மூணு நாள் தேங்காய் எண்ணெய்க் குளியல். இதனால் முடி அடர்த்தி ஆகும். அதோடு, உடலின் குளிர்ச்சி யும் நிலைக்கும்!''- கேசத்தைப் பாசமாகக் கோதியபடி சொல்லும் மேக்னா, சரியான கிரிக்கெட் பைத்தியம்.

''20 - 20 மேட்ச் செம இன்ட்ரஸ்ட்டிங். மேட்ச் பார்க்க உட்கார்ந் துட்டா, கிரவுண்ட்ல ஆடுறவங்களைவிட நான் அதிகமா ஆடுவேன். 20 ஓவர் மேட்ச்சை 10 ஓவர் மேட்ச்சா மாத்தி இன்னும் விறுவிறுப்பைக் கூட்டணும்!'' - விசில் அடிக்காத குறையாக விண்ணப்பம் வைக்கிறார் மேக்னா!

- இரா.சரவணன், படங்கள்: ரா.சித்ரம் சுரேந்தர்