Published:Updated:

தினம் தினம் தீபாவளியே..!

தினம்  தினம் தீபாவளியே..!
News
தினம் தினம் தீபாவளியே..!

தினம் தினம் தீபாவளியே..!

Published:Updated:

தினம் தினம் தீபாவளியே..!

தினம் தினம் தீபாவளியே..!

தினம்  தினம் தீபாவளியே..!
News
தினம் தினம் தீபாவளியே..!

பத்மப்பிரியா, சித்த மருத்துவர்.


`லேகியம்’. இந்த வார்த்தையைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்போது கண்டிப்பாக இந்த வார்த்தை வெகுவாக அடிபடும். பட்டாசு, புதுத்துணிகள், இனிப்புகள் வரிசையில் தீபாவளி என்றால் தவிர்க்க முடியாத இன்னொரு முக்கிய அம்சம் `தீபாவளி லேகியம்’. பண்டிகைக் கொண்டாட்டத்தில் கன்னாபின்னா என நம் உள்ளே செல்கிற உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து உடலைக் காக்கும் அருமருந்து இது. சாதாரணத் தலைவலி, காய்ச்சலில் தொடங்கி அஜீரணம், அசதி எனப் பல உடல் கோளாறுகளைத் தீர்க்கும் ஆற்றல் தீபாவளி லேகியத்தைப் போல சில லேகியங்களுக்கு உண்டு.

தீபாவளி சீசனில், நாட்டு மருந்துக் கடைகளில் லேகியப் பொடியாகவும், லேகியமாகவும் கிடைக்கும். பொடியை எளிய முறையில் நாமே தீபாவளி லேகியமாகத் தயாரித்துக்கொள்ளலாம். பொதுவாக, லேகியங்கள் சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, விரலி மஞ்சள் போன்ற மூலப்பொருட்களோடு,. வெல்லம், நெய், நல்லெண்ணெய், தேன் ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன.   

உடல் உபாதைகளைச் சரிசெய்யும் சில லேகியங்கள் மற்றும் சூரணங்கள்... 


 .   சுக்கு, மிளகு, சீரகம், ஓமம், கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, விரலி மஞ்சள் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் `தீபாவளி லேகியம்’, நாம் சாப்பிட்ட எண்ணெய் மற்றும் நெய் சேர்த்த உணவுவகைகள் எளிதாக செரிமானம் ஆக உதவுகின்றன.

·    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுவது `திரிகடுகு சூரணம்.’ இதைத் தேன் அல்லது வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலி மற்றும் செரிமானக் கோளாறால் ஏற்படும் தலைவலியை குணப்படுத்தும்.

·    சுக்கு, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், திப்பிலி, ஓமம், இந்துப்பு, பெருங்காயம் போன்றவற்றைக் கொண்டு `அஷ்டசூரணம்’ தயாரிக்கப்படுகிறது. செரிமானக் கோளாறு ஏற்படும்போது  வெந்நீர் அல்லது சூடான சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர குணமாகும்.

·    சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் கொண்டு தயாரிக்கப்படுவது, `பஞ்ச தீபாக்னி சூரணம்’. இதை, வெந்நீருடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.  இது, பசியின்மை, அடி வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அடி வயிற்று வலியைச் சரிசெய்யும்.

·    கிராம்பு, சிறு நாகப்பூ, கூகைநீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து `ஏலாதி சூரணம்’ செய்யப்படுகிறது. பித்தவாயு, எலும்புருக்கி, தோல் நோய்கள், வயிற்றில் ஏற்படும் மந்தநிலை மற்றும் வயிற்று எரிச்சலை இது சரிப்படுத்தும்.

·    சுண்டை வற்றல், கறிவேப்பிலை, நெல்லி வற்றல், ஓமம், வெந்தயம் கொண்டு தயாரிக்கப்படுவது `சுண்டை வற்றல் சூரணம்’. இதை மோருடன் கலந்து சாப்பிட வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும்; வயிற்றுப் போக்கை குணமாக்கும்.

·    சுக்கு,மோர், கல்லுப்பு சேர்த்து செய்யப்படுவது `தயிர் சுண்டி சூரணம்’. வயிற்றுக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகளைச் சீராக்கும். 

சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் இந்த லேகியங்களை எடுத்துக்கொள்ளலாம். தீபாவளி நேரத்தில் மட்டும் அல்ல, தினசரி எடுத்துக்கொண்டால், தினம்  தினம் தீபாவளியே..!
 

உங்கள் கவனத்துக்கு... 
சில அஞ்சரைப்பெட்டி பொருட்கள்... அபாரப் பலன்கள்! 
மிளகு - அறிவை விருத்தி செய்யும். 
சுக்கு, சித்தரத்தை - சளித் தொல்லை, தொண்டைப் பிரச்னைகளை விரட்டும். 
கண்டந்திப்பிலி - உடம்புவலியைப் போக்கும். 
மஞ்சள் - புண்களை ஆற்றும். 
 

- ச.மோகனப்பிரியா.