ஸ்பெஷல்
Published:Updated:

அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்

அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
News
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க, செய்யவேண்டியவை...

ம் உடல் செல்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை. நாம் சாப்பிடும் உணவு, குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஒவ்வொரு திசுவுக்கும் இந்த குளுகோஸ் செல்ல வேண்டுமானால், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தேவை. இந்த இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ... ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே சர்க்கரை நோய் என்கிறோம்.

அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்

அறிகுறிகள்

  • தாகம்

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

  • எப்போதும் சோர்வான உணர்வு

  • எப்போதும் பசி

  • பார்வைத் திறன் குறைதல்

  • பெண்களுக்கு வெள்ளைப்படுதல்

  • கால் அல்லது பாதங்களில் புண் மெதுவாக ஆறுதல்

  • உயர் ரத்த அழுத்தம்

அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்

ஏற்படுத்தும் பாதிப்பு

  • பக்கவாதம்

  • பார்வைக் குறைபாடு

  • இதய நோய்கள்

  • சிறுநீரக நோய்கள், செயலிழப்பு

  • நரம்பு மண்டலத்தில் பாதிப்பு (நியூரோபதி)

  • காலில் புண் - அதனால் கால் இழப்பு

அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்
அறிகுறிகளை அறிவோம்! - சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் வராமல் தடுக்க, செய்யவேண்டியவை

  • தினசரி 30 நிமிடங்கள் உடல் உழைப்பு

  • ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்

  • உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது