Published:Updated:

தொடர்ந்து அச்சுறுத்தும் கறுப்புப் பூஞ்சை; மகாராஷ்டிராவில் இதுவரை 729 பேர் உயிரிழப்பு!

Mucormycosis ward- Representational Image
Mucormycosis ward- Representational Image ( AP Photo/Mahesh Kumar A )

கொரோனா தொற்று குறைந்தாலும் கொரோனாவைத் தொடர்ந்து அதோடு சேர்ந்து வரும் கறுப்புப் பூஞ்சை நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

மகாராஷ்டிராவில் தற்போதுதான் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் கொரோனா தொற்றுப் பரவலுக்கு ஏற்ற கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று குறைந்தாலும் கொரோனாவைத் தொடர்ந்து அதோடு சேர்ந்து வரும் கறுப்புப் பூஞ்சை நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் மட்டும் இந்தக் கறுப்புப் பூஞ்சைக்கு 4 குழந்தைகள் தங்களது கண்ணை இழந்துள்ளனர். கறுப்புப் பூஞ்சை தொற்று அதிகமாகக் கண்களைத்தான் தாக்கும். இந்த நோய்க்கு மகாராஷ்டிரா முழுக்க 729 பேர் உயிரிழந்துள்ளனர்.

Mucormycosis Testing
Mucormycosis Testing
AP Photo / Mahesh Kumar A
கறுப்பு பூஞ்சை சிகிச்சைக்கும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா? - பதில் அளிக்கும் வல்லுநர்

மொத்தம் 7,998 பேருக்குக் கறுப்புப் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4,398 பேர் இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர். நாக்பூரில் அதிகபட்சமாக 1,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு இடங்களில் புனே மற்றும் அவுரங்காபாத் இருக்கின்றன. இந்தக் கறுப்புப் பூஞ்சை தோளில் ஏற்படும் காயத்தின் மூலம் உடலுக்குள் சென்று விடுகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் வரை மும்பையில் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது புறநகர் ரயில்களில் அத்தியாவச சேவைப் பணியாளர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தொற்றுக்கு தக்கபடி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

Black Fungus - Representational Image
Black Fungus - Representational Image
கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

முதல் பிரிவில் இருக்கும் பகுதியில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் நீங்கப்படும். புறநகர் ரயில் சேவையும் அனுமதிக்கப்படும். ஆனால், மும்பை முதல் பிரிவுக்கு வந்துவிட்ட நிலையில் தொடர்ந்து 3 பிரிவில் உள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மீண்டும் தொற்று அதிகரித்துவிடும் என்ற அச்சம் காரணமாகத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளர். கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் இருப்பதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு