மனித உடலில் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல். நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானமாகும் உணவிலிருக்கும் நச்சுப்பொருள்களை வடிகட்டுவது உள்ளிட்ட சுமார் 500 வேலைகளை சத்தமேயில்லாமல் செய்து கொண்டிருக்கிறது. தன் இருப்பைத் துடிப்பாக உணர்த்திக் கொண்டிருக்கும் இதயத்துக்குச் செல்லும் 10 சதவிகிதம் ரத்தம் தடைப்பட்டால்கூட நெஞ்சுவலி ஏற்பட்டுவிடும்.

ஆனால் பல்வேறு வேலைகளை அமைதியாகச் செய்துகொண்டிருக்கும் கல்லீரல் அதன் பாதிப்பை வெளிக்காட்டுவதிலும் அமைதியையே கடைப்பிடிக்கும். கல்லீரல் பாதிப்பு மிகவும் தாமதமாகத்தான் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றும் கல்லீரல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அவள் விகடன் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து 'கல்லீரல் ஆரோக்கியம், மாற்று அறுவை சிகிச்சை... A to Z ஆரோக்கியம்' என்ற ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சியை ஆன்லைனில் ஏப்ரல் 21-ம் தேதி நடத்தவுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையின் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவு தலைவர் சுவாமிநாதன் சம்பந்தம், சேலம் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த கல்லீரல் மற்றும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மருத்துவர் எஸ்.ரவிக்குமார் ஆகியோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு, துரித உணவுகளின் தாக்கம், கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேச உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.21) மாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி அவசியம். இதில் பங்கேற்ப முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.