Published:Updated:

`புற்றுநோயை வெல்வோம்': காவேரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம்! | #K10K

K10K
News
K10K

வரும் முன் காப்பதே, புற்றுநோய் வராமல் கட்டுப்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழி மற்றும் மிகவும் செலவு குறைந்த நீண்ட கால உத்தி என்பதை உணர்ந்து, பின்வரும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளைத் தவிர்ப்பதே சிறப்பு.

Published:Updated:

`புற்றுநோயை வெல்வோம்': காவேரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம்! | #K10K

வரும் முன் காப்பதே, புற்றுநோய் வராமல் கட்டுப்படுத்துவதற்கான ஆரோக்கியமான வழி மற்றும் மிகவும் செலவு குறைந்த நீண்ட கால உத்தி என்பதை உணர்ந்து, பின்வரும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளைத் தவிர்ப்பதே சிறப்பு.

K10K
News
K10K

உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4) முன்னிட்டு, ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை அன்று, காவேரி மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 3,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்
K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் அவற்றின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி வளரும்போது, உடலின் அருகிலுள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. அதாவது, பிற உறுப்புகளுக்குப் பரவுகின்றன. இதையே நாம் புற்றுநோய் என்று அழைக்கிறோம்.

உலக அளவில் மனிதர்கள் இறப்பதற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருப்பது புற்றுநோய்தான். நுரையீரல், புராஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு பொதுவான வகை புற்றுநோய்களாகும், அதே நேரத்தில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய்கள் பெண்களுக்கு பொதுவான புற்றுநோய்களாகும்.

புற்றுநோய் காரணிகளை முன்கூட்டியே தவிர்ப்பதன் மூலம் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலான புற்றுநோய் இறப்புகளைத் தடுக்க முடியும் என்கிறது உலக சுகாதார மையம். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, நோயாளிகளை நிர்வகிப்பதன் மூலமும் புற்றுநோய் வருவதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்
K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

புற்றுநோயைத் தடுப்போம்!

வரும் முன் காப்பதே, புற்றுநோய் வராமல் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வழி மற்றும் மிகவும் செலவு குறைந்த நீண்ட கால உத்தி என்பதை உணர்ந்து, புற்றுநோயை உண்டாக்கும் கீழ்க்காணும் காரணிகளைத் தவிர்ப்பதே சிறப்பு.

* புகையிலை பயன்பாட்டைத் தவிர்த்தல்.

* ஆரோக்கியமான எடையைப் பராமரித்தல்.

* மது அருந்தாதிருத்தல்.

* பாதுகாப்பான உடலுறவு.

* ஹெபடைடிஸ் பி மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுதல்.

* வழக்கமான மருத்துவ பராமரிப்பு அவசியம்.

சில நாள்பட்ட நோய்த்தொற்றுகளும் புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகளாகும். எனவே, ஸ்கிரீனிங் (எச்சரிக்கை பரிசோதனை) செய்வது முக்கியம்.

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் 2 உத்திகள்:

ஆரம்பகால நோயறிதல் (early detection) ஆரம்பகட்ட புற்றுநோய்க்கான அறிகுறிகளை அடையாளம் காட்டுகிறது. ஸ்கிரீனிங் (எச்சரிக்கை பரிசோதனை), புற்றுநோய் உருவாகக்கூடிய வாய்ப்பிருக்கும் நபர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுக்கு நோயறிதலின் அவசியத்தை உணர்த்துகிறது.

K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்
K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

K10K ரன் - புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்

உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4) முன்னிட்டு, ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை அன்று காவேரி மருத்துவமனை சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தியது. இதில் 10 கி.மீட்டர் மற்றும் 5 கி.மீ. பிரிவுகள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன. உடற்பயிற்சி ஆர்வலர்கள், தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள், குடும்ப உறுப்பினர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 3500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில், ‘உலகம் முழுவதும் உள்ள மிகவும் கடுமையான நோய்களில் ஒன்று புற்றுநோய். இருப்பினும், மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் புற்றுநோயை தற்போது குணப்படுத்த முடியும்’ என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.