Published:Updated:

Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா?

பல் துலக்குதல்
News
பல் துலக்குதல்

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: எத்தனை முறை பல் துலக்கினாலும் விலகாத வாய் துர்நாற்றம்; பிரச்னையின் அறிகுறியா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

பல் துலக்குதல்
News
பல் துலக்குதல்

தினமும் இருமுறை பல் துலக்குகிறேன். ஆனாலும், எப்போதும் வாய் துர்நாற்றம் இருக்கிறது. வேறு ஏதும் பிரச்னை இருக்குமா?

- மாலினி, (விகடன் இணையதளத்திலிருந்து)

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி.

Bad Breath
Bad Breath
Pixabay

’’வாய் துர்நாற்றப் பிரச்னைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் கண்களுக்குத் தெரியாதபடி வாயில், பற்களுக்கிடையில் ஏதேனும் அழுக்கு இருக்கிறதா, பற்களின் இடுக்குகளில் காரை படிந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இப்படிப்பட்ட அழுக்கு மற்றும் காரையை நீங்கள் வழக்கமாகச் செய்கிற பிரஷ்ஷிங் மூலம் அகற்றுவது கடினம். அதை ஸ்கேலிங், குறிப்பாக அல்ட்ராசோனிக் ஸ்கேலிங் முறையில்தான் நீக்க முடியும்.

சொத்தைப் பற்கள் இருந்தாலும், சொத்தையின் காரணமாக சீழ் கட்டியிருப்பது போன்றவற்றாலும் வாய் துர்நாற்றம் இருக்கலாம்.

பல் ஈறுகளில் சிலருக்கு இன்ஃபெக்ஷன் ஏற்படலாம். ஈறுகளிலிருந்து ரத்தம் கசியலாம். Gingivitis எனப்படும் ஈறு அழற்சியோ, Periodontitis எனப்படும் ஈறுநோயோ இருந்தாலும் வாய் துர்நாற்றம் இருக்கும்.

Dentist Mariam Safi
Dentist Mariam Safi

உங்களுக்கு உமிழ்நீர் சரியாகச் சுரக்கிறதா என்று கவனியுங்கள். உமிழ்நீர்தான் வாயிலுள்ள அழுக்கு, பாக்டீரியா கிருமிகள் போன்றவற்றை வெளியேற்றுவது. உமிழ்நீர் சுரக்காத `ஸெரஸ்டோமியா'( Xerostomia) பாதிப்பும் வாய்துர்நாற்றத்துக்கு ஒரு காரணம்.
எனவே, நீங்கள் பல் மருத்துவரை அணுகி, முழுமையான வாய் பரிசோதனையை மேற்கொண்டு, இந்த பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கேற்ப அவர் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.’’