
பியூட்டி
ஃபேஷியல் பண்றதில்லை, காஸ்ட்லியான எந்த காஸ்மெட்டிக்ஸும் உபயோகிக்கிறதில்லை - இப்படிச் சொல்பவர் களின் சருமம் இவற்றை எல்லாம் செய்வோரின் சருமத்தை
விட பளபளப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரும அழகும் ஆரோக்கியமும் அடிப்படையான பராமரிப்பு சம்பந்தப்பட்டவை. சருமம் பொலிவிழந்திருப்பதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் தெரிந்துகொண்டால் நீங்களும் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின் டைட்டிலை வெல்லலாம்.

டீஹைட்ரேட்டடு சருமம்
போதிய அளவு நீர்ச்சத்தும் ஈரப்பதமும் இல்லாத சருமம் வறண்டு, வயதானதுபோல் தெரியும்.
குளித்து முடித்ததும் அந்த ஈரப்பதம் இருக்கும் போதே மாயிஸ்ச்சரைசிங் சன் ஸ்கிரீன் உபயோகிக்கவும்.
ஹைலுரானிக் அமிலம் கலந்த சீரம் உபயோகிப்பதை தினசரி வழக்கமாக மாற்றுங்கள்.
தாகம் எடுக்காதபோதும் தண்ணீர் குடியுங்கள். அடர்நிறத்தில் உள்ள காய்கறிகள், பழங்களை நிறைய சேர்த்துக்கொள்ளவும்.
இறந்த செல்கள் சேர்ந்த சருமம்
சருமத்தில் சேரும் இறந்த செல்களை முறையாக நீக்க வேண்டியதும் அவசியம். வாரத்துக்கு ஒரு முறை இறந்த செல்களை எக்ஸ்ஃபோலியேட் முறையில் நீக்க வேண்டும். கடைகளில் ஸ்க்ரப் என்ற பெயரில் கிடைப்பதுதான் எக்ஸ்ஃபோலியேட்டர்.

சரும மருத்துவரிடம் உங்கள் சருமத்துகேற்ற எக்ஸ்ஃபோலியேட்டர் எது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு உபயோகிக்கலாம். இறந்த செல்களை நீக்குகிறேன் என்று அளவுக்கதிகமாகச் செய்ய வேண்டாம்.
தூக்கத்துக்கு ஏங்கும் சருமம்
இரவில் போதுமான அளவு தூங்காதவர்களின் சருமம் ஈரப்பதத்தை இழக்கும். தவிர அதனால் சருமத்தின் பிஹெச் அளவு குறையும். அதன் விளைவால் சருமம் பொலிவிழப்பதுடன், முதுமையாகவும் தெரியும்.
தினமும் 7 முதல் 8 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே கேட்ஜெட்ஸ் பயன் பாட்டைத் தவிர்க்கவும்.