Published:Updated:

சுத்தம் என்பது தலைக்கு...

சுத்தம் என்பது தலைக்கு...

பிரீமியம் ஸ்டோரி
சுத்தம் என்பது தலைக்கு...

ழகான, ஆரோக்கியமான தலைமுடி என்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்கிறது. தலைமுடி உதிர்தல், பொடுகு போன்று எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்றால், தலையை (Scalp) பராமரிப்பது மிகவும் அவசியம்.  முடியின் வேர்ப்பகுதியில் சீபம் என்ற எண்ணெய் சுரக்கிறது. இந்த எண்ணெய் சுரப்பிகள் இருக்கும் இடத்தில் பொடுகு அதிகமாக வளரத் தொடங்கும். கண் இமை, புருவப் பகுதியில்கூட பொடுகு உருவாகலாம். தலைமுடியை சுத்தமாகப் பராமரிக்க சில வழிகள்...

சுத்தம் என்பது தலைக்கு...

• சாதம் வடித்த கஞ்சியும் அரைத்த சீயக்காய்த் தூளும் கலந்து, கூந்தலில் தேய்த்துக் குளித்தால், பொடுகு நீங்கும். 

• கற்றாழை ஜெல்லைத் தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம்.

• உடல் வெப்பம் அதிகம் இருப்பவர்கள், செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, ஊறவைத்த வெந்தயத்துடன் கலந்து, தலைக்குக் குளிக்கலாம். 

• சீத்தா மரத்தின் ஐந்து நுனிக்கொழுந்து இலைகளை மோர் சேர்த்து அரைத்து, தலையில் தேய்க்கலாம்.

• வானிலை மாற்றம் ஏற்படும்போதும், இறுக்கமான ஆடைகளை அணியும்போதும், பாலிக்குளீட்டஸ் என்ற கிருமி உடலில் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிப்பது, பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது போன்றவற்றால் தலையில் இந்தக் கிருமித் தொற்று ஏற்படலாம். இதனால், தலைமுடிகளுக்கிடையே சிவப்புக் கொப்பளங்கள் உருவாகி, அவை உடைந்து ரத்தம் வெளிப்படும்.  இதனைத் தவிர்க்க  குப்பைமேனி, கீழாநெல்லி இலைகளை நன்றாக அரைத்து, தலையில் பூசலாம்.

• படர்தாமரை, சிரங்கு போன்ற பிரச்னை உள்ள ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது, அவருக்கு தலையில் படர்தாமரை  ஏற்பட
லாம்.  துண்டு, ஆடைகள், சீப்பு, தலையணை போன்றவற்றின் மூலம் பூஞ்சைத் தொற்று மற்றவர்களுக்குப் பரவும். இதனால், முடியின் அடிப்பகுதியில் இருக்கும் பாலிக்கல்சில் இருந்து, கொப்புளங்கள் உருவாகி, கூந்தல் உடைந்து  உதிரத் தொடங்கும்.  கொதிக்கும் நீரில் திரிபலா சூரணத்தைப் போட்டு, இளஞ்சூடானதும் அந்த நீரில் கூந்தலை அலசலாம். 

• மத்தன்  தைலம் (ஊமத்தம் இலையிலிருந்து எடுத்த தைலம்), புங்கன் தைலம் இரண்டையும் படர்தாமரை இருக்கும் இடத்தில்  தடவலாம். அரிப்பு, அதிகமாகி முடி உதிர்தல் பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.

பொதுவான பராமரிப்பு:

• தினமும் போதிய அளவு நீர் பருக வேண்டும். நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தலைக்குக் குளிக்கலாம். முடியாதவர்கள் வாரம் மூன்று முறை குளிக்கலாம்.

• எண்ணெய்க் குளியல், கசகசா - வெந்தயக் குளியல், தைலக் குளியல் என மாற்றி மாற்றி தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாகும்.

- ம.மாரிமுத்து
படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ர.சதானந்த்

சுத்தம் என்பது தலைக்கு...

சிவகுருநாதன், மதுரை.

“26 வயது இளைஞன் நான். ஆசிரியராகப் பணிபுரிகிறேன். திருமணம் ஆகவில்லை. தற்போது எனது எடை 98 கிலோ. உயரம் 171 செ.மீ. உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?”

பிரபா,
உணவியல் நிபுணர்.

சுத்தம் என்பது தலைக்கு...

“உங்கள் உயரத்துக்கேற்ற சரியான எடையில் நீங்கள் இல்லை. உங்கள் உயரத்துக்கு 70 கிலோ வரை எடை இருப்பது நல்லது. உணவுமுறை மற்றும் வாழ்வியல் பழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலமாக எடையை நிச்சயம் குறைக்க முடியும். தினமும் காலையில், 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். குறைந்தது வாரத்துக்கு ஐந்து நாட்களாவது செய்ய வேண்டியது அவசியம்.

உணவில், பச்சைக் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். அரிசி போன்ற மாவுச்சத்துள்ள உணவை அளவாகச் சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள். தினமும் காய்கறி சாலட் சாப்பிடலாம். கலோரி குறைந்த உணவான நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் அளவு தண்ணீர் குடியுங்கள்.

வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், சீதாப்பழம் போன்றவற்றைத் தவிர மற்ற பழங்களை தோலுடன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், தோலில் உள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அசைவ உணவுகளில், தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கரு, உருளைக்கிழங்கைத் குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள் தவிர்க்கலாம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு