சருமத்தைக் காக்க செயற்கை காஸ்மெடிக் பொருட்களை நோக்கி ஓட வேண்டியது இல்லை. சில மூலிகைகள் மற்றும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்கள் பக்கம் திரும்பினாலே போதும். அவை இயற்கைமுறையில் சருமத்தைச் சுத்தப்படுத்தும், மென்மையாக்கும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

கற்றாழை: மிகச் சிறந்த ஆன்டிஏஜிங் பொருள். மாய்ஸ்சரைசராகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சின் பாதிப்பைத் தடுக்கும். இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களின் உற்பத்திக்கு உதவும்.

தேங்காய்ப் பால்: மென்மையான சருமம் தரும். இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கும். சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கலாகச் செயல்படும். சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சருமச் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின் சி, தாமிரம் இருப்பதால் சருமத்தின் இழுவைத்தன்மையை (எலாஸ்டிசிட்டி) காத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.

தேன்: சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும். மிகச் சிறந்த ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல். எனவே, காயங்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

மாதுளை: சுருக்கங்களைக் குறைத்து, புதிய செல்கள் உற்பத்தியை ஊக்குவித்து, சருமத்தின் முதுமையைத் தாமதப்படுத்துகிறது. உலர் சருமத்தினர் மாதுளை சாற்றைத் தொடர்ந்து தடவிவந்தால், சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். சருமம், பொலிவும் மென்மையும் அடையும்.