Published:Updated:

பளபள சருமத்துக்கு பப்பாளி!

பளபள சருமத்துக்கு பப்பாளி!

பளபள சருமத்துக்கு பப்பாளி!

பளபள சருமத்துக்கு பப்பாளி!

Published:Updated:

ருமத்தைக் குணப்படுத்தும் ஆற்றல்கொண்ட பழம் பப்பாளி. சருமம் பொலிவாக, இளமையாக இருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு, பப்பாளி  அருமருந்து.

பளபள சருமத்துக்கு பப்பாளி!

• சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, இயற்கை அழகை அளிக்கிறது பப்பாளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பப்பாளியுடன் சிறிது தேன் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதத்துடன் பொலிவாக இருக்கும்.

• பப்பாளியைக் கைகளால் நசுக்கி, முகத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவு பெறும்; முகப்பருக்கள் மறையும்.

• சருமத்தில் தொடர்ந்து தடவியும் உட்கொண்டும் வந்தால், சருமம் மென்மையாகும்.

• சருமம் முதுமை அடைவதைத் தாமதப்படுத்துகிறது.

• கரும்புள்ளிகளை நீக்குகிறது.

• பப்பாளியை மசித்து, தலையில் பூசி், குளித்துவந்தால் முடி உறுதியடையும்; நன்கு வளரும்.

• பாத வெடிப்புகளைப் போக்கவும் பப்பாளியை மசித்துப் பூசலாம்.

குறிப்பு: பப்பாளியில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம்தான் (Alpha hydroxy acid) ஆன்டிஏஜிங் பொருளாகச் செயல்படுகிறது. ஆனால், இந்த அமிலம்தான் பப்பாளியின் அமிலத்தன்மைக்கும் காரணமாக இருக்கிறது. எனவே, நீண்ட நேரம் இதை முகத்தில் பூசக் கூடாது. 5 முதல் 10 நிமிடங்களுக்குள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிவிட வேண்டும்.

- பா.பிரவீன் குமார்